Published:Updated:

நாளை என்ன வேலை: மத்திய பல்கலைக்கழங்களில் சேர்வதற்கான CUET தேர்வு குறித்த முழுமையான வழிகாட்டல்

CUET - கல்வியாளர்கள் நெடுஞ்செழியன் - ரமேஷ் பிரபா

மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் ஐந்தாண்டு படிப்புகளில் மட்டுமே முதலில் கவனம் செலுத்தியது. ஆனால் இப்போது மூன்றாண்டு படிப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகள் போன்றவற்றையும் கொண்டுவந்துவிட்டார்கள்.

நாளை என்ன வேலை: மத்திய பல்கலைக்கழங்களில் சேர்வதற்கான CUET தேர்வு குறித்த முழுமையான வழிகாட்டல்

மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் ஐந்தாண்டு படிப்புகளில் மட்டுமே முதலில் கவனம் செலுத்தியது. ஆனால் இப்போது மூன்றாண்டு படிப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகள் போன்றவற்றையும் கொண்டுவந்துவிட்டார்கள்.

Published:Updated:
CUET - கல்வியாளர்கள் நெடுஞ்செழியன் - ரமேஷ் பிரபா
மத்திய பல்கலைக்கழங்களில் சேர்வதற்கான CUET (UG) நுழைவுத்தேர்வு குறித்து கல்வியாளர்கள் ரமேஷ் பிரபா மற்றும் நெடுஞ்செழியன் ஆகியோர் நடத்திய உரையாடலின் சிறுபகுதி இதோ….
கல்வியாளர்கள் நெடுஞ்செழியன் - ரமேஷ் பிரபா
கல்வியாளர்கள் நெடுஞ்செழியன் - ரமேஷ் பிரபா

நீட் தேர்வுக்கு அடுத்தபடியாக CUET (UG) நுழைவுத்தேர்வுக்கு அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த நுழைவுத்தேர்வில் உள்ள சிக்கல்கள் தெரிந்தே இதில் இதனை மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனரா ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆம், இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. எனவே எல்லாவற்றிக்கும் இங்கு அதிக மாணவர்கள் விண்ணப்பிப்பதுண்டு. எம்.டி.ஏ கட்டுமான நிறுவனம் எந்த வாஸ்துவும் பார்க்காமல் தான் தங்கள் நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களுக்குப் பணம் கொட்டோகொட்டென்று கொட்டுகிறது. தேர்வுக்கட்டணத்தை ருபாய் 100 ,200 அளவில் குறைக்க வேண்டும். திருவாரூரில் இருந்து சென்னை வந்து தேர்வு எழுத வேண்டும் எனில் மாணவர்களுக்கு போக்குவரத்து செலவு அதிகமாக இருக்கும். ஏற்கெனவே இந்தியாவில் நூற்றில் 27 மாணவர்கள் மட்டுமே உயர்கல்விவரை பயில்கின்றனர். 100-க்கு 27 என்ற அளவில் கொரோனாவிற்குப் பிறகு உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளது. தேர்வு கட்டணத்தை அதிகமாக்கினால் இன்னும் நிறைய சிக்கல்களை தான் இந்த நுழைவுத்தேர்வு உருவாக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடிப்படையில் இந்த மத்திய பல்கலைகழகங்கள் எந்த மாதிரியான படிப்புகளை வழங்குகின்றன என்பது குறித்துச் சொல்லுங்கள்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் ஐந்தாண்டு படிப்புகளில் மட்டுமே முதலில் கவனம் செலுத்தியது. ஆனால் இப்போது மூன்றாண்டு படிப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகள் போன்றவற்றையும் கொண்டுவந்துவிட்டார்கள். இந்த படிப்புகள் மத்திய அரசின் நிதியுதவியுடன் வழங்கப்படுகிறது என்கிறார்கள். ஆனால் மத்திய அரசு இதற்குத் தேவையான அளவு நிதியை வழங்குவதில்லை. 44 மத்திய பல்கலைக்கழங்களில் பாதிக்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை. தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் ஓரளவிற்கு நல்ல உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டது.

ஒரு மாணவன் சராசரியாக ஐந்து பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்கிறான் என்றால் மொத்தம் 45 லட்சம் விண்ணப்பங்கள் இந்த நுழைவுத் தேர்விற்காக வந்திருக்கும். இது மாணவர்களுக்கு மேலும் சிக்கல்களைத்தான் ஏற்படுத்தும். மாணவர் சேர்க்கைக்கு அந்தந்த பல்கலைக்கழங்களையே தொடர்புகொள்ளச் சொல்கிறார்கள். அதுவும் இன்னும் தெளிவாக இல்லை. ஒரு தேர்வைக் கொண்டு வரும்போது இதுதான் இந்த தேர்வின் வழிமுறை இப்படித்தான் என விளக்க அட்டவணை கொடுத்து படிக்காத பாமர மக்களுக்கும் புரியும்படி தகவல்களை கொடுக்காமல் இருக்கிறார்கள். இந்த CUET (UG) நுழைவுத்தேர்வையும் தேசிய தேர்வு முகமைதான் நடத்துகிறது. டெல்லியில் உள்ள எல்லா கல்லூரிகளிலும் விண்ணப்பிக்கலாம். இயல்பாக வடமாநிலத்தைவிட ,தென்மாநிலங்களில் மத்திய பல்கலைகழக சேர்க்கை அதிகமாக இருக்கிறது. இப்போது தென் மாநிலங்களில் சேர்க்கையைக் குறைப்பதற்காகத்தான் இது போன்ற நுழைவுத்தேர்வுகள் ஒரு புதிய உத்தியாக மத்திய அரசால் கொண்டுவரப்படுகிறது.