Published:Updated:

நாளை என்ன வேலை - 1: பொறியியல் படிக்க இனி கணிதப்பாடம் கட்டாயமில்லை; ஏன் தெரியுமா?

நாளை என்ன வேலை

12-ம் வகுப்பில் நடத்தப்படும் கணிதமும் பொறியியலில் நடத்தப்படும் கணிதமும் வேறுபடுவதே இதற்கான காரணமாக சொல்லப்படுவதுண்டு. இப்படி இருக்கும் சூழலில் கணித பாடமே இல்லாமல் பொறியியல் படிக்கலாம் என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது AICTE

நாளை என்ன வேலை - 1: பொறியியல் படிக்க இனி கணிதப்பாடம் கட்டாயமில்லை; ஏன் தெரியுமா?

12-ம் வகுப்பில் நடத்தப்படும் கணிதமும் பொறியியலில் நடத்தப்படும் கணிதமும் வேறுபடுவதே இதற்கான காரணமாக சொல்லப்படுவதுண்டு. இப்படி இருக்கும் சூழலில் கணித பாடமே இல்லாமல் பொறியியல் படிக்கலாம் என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது AICTE

Published:Updated:
நாளை என்ன வேலை

பொறியியல் படிப்பிற்கான அடிப்படை பாடம் கணிதம். ஆனால் இனி கணிதம் உட்பட கலந்தாய்வில் தேவைப்படும் மூன்று பாடங்களும் இல்லாமலேயே பொறியியல் படிக்கலாம் என்ற அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது பற்றிய விரிவான விளக்கத்தை அளிக்கிறார் கல்வியாளர் ரமேஷ் பிரபா.

“ இந்தியாவில் இருக்கக்கூடிய தொழில்நுட்ப கல்வி குறித்தான அனைத்தையும் நிர்வகிக்கும் ஒரு அதிகாரம் மையம் AICTE என்று சொல்லப்படக்கூடிய All India Council for Technical Education. புதிதாய் ஒரு பொறியியல் கல்லூரியை தொடங்குவதில் இருந்து இயங்கி வரும் கல்லூரியின் புதுப்பித்தல் வரை அனைத்திற்கும் AICTE அமைப்பிடம் இருந்து ஒப்புதல் பெறுவது அவசியம். எனவே, தொழில்நுட்ப கல்வி குறித்து இந்நாட்டில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளையும் இறுதி செய்வது இந்த மையம்தான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒவ்வொரு வருடமும் Approval process handbook என்ற ஒன்றை AICTE வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வெளியீட்டில் ஒரு வித்தியாசமான அணுகுமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது தொழில்நுட்ப கல்வியை உயர்கல்வியாய் படிப்பதற்கு குறிப்பிட்ட சில பாடங்கள் கட்டாயமாக வேண்டும் என்றிருந்த நடைமுறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதே அது. உதாரணமாக அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கையில் மூன்று பாடங்கள் அதாவது கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவை கட்டாயம் தேவை.

ரமேஷ் பிரபா
ரமேஷ் பிரபா

Cut-off என்று சொல்லப்படக்கூடிய மதிப்பெண்கள் தான் கலந்தாய்விற்கான அடிப்படை. அதை Cut-off என்று சொல்வதே தவறான வார்த்தை பிரயோகம் , aggregate என்பதே சரியான பயன்பாடு. அதாவது கணிதத்தில் நூற்றுக்கு வாங்கும் மதிப்பெண்களை அப்படியே வைத்துக்கொண்டு இயற்பியல் மற்றும் வேதியியல் மதிப்பெண்களை 50-க்கு மாற்றி மொத்தமாக கூட்டி 200-க்கு வரும் Aggregate மதிப்பெண்களே வைத்தே கலந்தாய்வு நடத்தப்படும்.

நாளை என்ன வேலை - 1: பொறியியல் படிக்க இனி கணிதப்பாடம் கட்டாயமில்லை; ஏன் தெரியுமா?

சரி, இது ஒருபுறம் இருக்கட்டும். பொறியியல் படிப்பை எடுத்துக்கொண்டால் அதில் குறிப்பாக கணித பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வி அடைவதை பார்த்திருப்போம். 12-ம் வகுப்பில் நடத்தப்படும் கணிதமும் பொறியியலில் நடத்தப்படும் கணிதமும் வேறுபடுவதே இதற்கான காரணமாக சொல்லப்படுவதுண்டு. இப்படி இருக்கும் சூழலில் கணித பாடமே இல்லாமல் பொறியியல் படிக்கலாம் என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது AICTE. இதுமட்டுமில்லாமல் மீதமிருக்கும் இரண்டு பாடங்கள் இல்லாமல் சில பொறியியல் பாடங்களை படிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், பொறியியலில் அடிப்படையே கணிதம் தான். அதாவது Quantitative. இந்த Quantitative இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய இயலாது. இப்படி இருக்கையில் கணிதம் இல்லாமல் பொறியியல் பாடம் எப்படி சாத்தியமாகும் என்பது கல்வியாளர்களின் கேள்வி. இது நடைமுறையில் சாத்தியமா என்பது தெரியாது. ஆனால் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பை வெளியிட்டதால் இந்த ஆணை நிச்சயம் நடைமுறை ஆக்கப்படுமா என்பதும் சந்தேகமே, ஏனென்றால் AICTE தன் முடிவில் இருந்து பின்வாங்கிய வரலாறெல்லாம் உண்டு. ஒருமுறை Architecture படிப்பிற்கு கணிதம் வேண்டாம் என்று AICTE முடிவெடுக்க அதை Indian Council of Architecture மறுக்க, AICTE அதன் முடிவை மாற்றிக்கொண்டது. அப்படி நடைமுறைக்கு வந்துவிட்டாலும் கலந்தாய்விலேயே தொடங்கிவிடுகிறது புதியதொரு சிக்கல்.”

AICTE-யின் இந்த முடிவில் உள்ள நடைமுறை சிக்கல் என்ன ? தேசிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள் என்ன ? இதுமட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் இரு டிகிரி படிப்பதற்கான புதிய அறிவிப்பை பற்றியும் “நாளை என்ன வேலை?” என்ற தொடரில் விரிவாக பேசியுள்ளார் கல்வியாளர் ரமேஷ் பிரபா. இத்தொடரின் முதல் அத்தியாயம் இந்த வார ஆனந்த விகடனில் வெளியாகியுள்ளது.

இத்தொடரை காணொளி வடிவில் காண்பதற்கான லிங்க் கீழே:

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism