Election bannerElection banner
Published:Updated:

பிடித்த டீச்சர்... அடித்த டீச்சர்... யார் பெஸ்ட்? - உளவியல் அலசல்! #TeachersDay

Teacher and Student
Teacher and Student ( Representational image )

மாணவர்கள் குழந்தைப் பருவத்தில் இருக்கும் வரை ஆசிரியர்களுடனான உறவில் அன்பும் ஆரோக்கியமும் நிறைந்தே இருக்கின்றன. வளர்ந்த பிறகுதான், இந்த உறவில் விரிசல்கள், கோபங்கள், சில நேரங்களில் வன்முறைகளும் நிகழ்ந்துவிடுகின்றன.

ஆசிரியர் தினமான இன்று காலையில், சென்னையில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி வழியாக வருகையில், சின்னப் பிள்ளைகள் சிலர் தங்கள் கைகளில் ஒற்றை ரோஜா, கிரீட்டிங் கார்டு ஆகியவற்றை ஏந்தியபடி, வரிசையாக பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்துகொண்டிருந்தார்கள். விசாரித்ததில், அவர்களுடைய டீச்சர்களுக்கு 'ஆசிரியர் தின வாழ்த்து சொல்வதற்காக' அந்தப் பிஞ்சுக் கைகள் கொள்கிற அளவுக்கு பரிசுப்பொருள்களை எடுத்துச் செல்கிறார்கள் என்பது தெரிந்தது.

மற்ற மாணவர்கள் முன், நோட்டுப் புத்தகத்தைத் தரையில் விட்டெறிவது எப்போதுமே சரியான விஷயம் கிடையாது.

ஸோ, மாணவர்கள் குழந்தைப் பருவத்தில் இருக்கும்வரை ஆசிரியர்களுடனான உறவில் அன்பும் ஆரோக்கியமும் நிறைந்தே இருக்கின்றன. வளர்ந்தபிறகுதான், இந்த உறவில் விரிசல்கள், கோபங்கள், சில நேரங்களில் வன்முறைகளும் நிகழ்ந்துவிடுகின்றன. இவையெல்லாம் நிகழாமல் இருக்க, சமூகத்தில் ஏணிகளாக விளங்கும் ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டுமென 'ஸ்கூல் கவுன்சிலர்' திவ்யபிரபா பரிந்துரை செய்கிறார்.

'' * ஒரு வகுப்பில், குறைந்தது 30 குழந்தைகளாவது இருப்பார்கள். எல்லாக் குழந்தைகளிடமும் அன்பாக நடந்துகொள்வதற்கு நேரம் போதாமல் இருக்கலாம். ஆனால், ஒரு குழந்தையிடம் பாசம், இன்னொரு குழந்தையிடம் கடுகடுப்பு என்று இரண்டு முகம் காட்டாமல், அவர்களின் ப்ளஸ் மைனஸ்களைப் புறந்தள்ளி, ஒன்றுபோலவே அரவணைத்துச்செல்லுங்கள். 'அவகிட்டே மட்டும்தான் மிஸ் சிரிச்சுப் பேசுவாங்க. அவதான் மிஸ்ஸோட பெட்' என்கிற பேச்சு, மற்ற மாணவர்கள் மத்தியில் எழாமல் இருப்பதே, நல்லாசிரியர் விருதுபெறுவது போன்றதுதான்.

Students
Students
Representational image
ஆசிரியர்களே... வகுப்பறையில் உங்களை ஸ்மார்ட் ஆக்கும் கேட்ஜெட்ஸ்! #TeachersDay

* சந்தேகம் கேட்பதற்கு மட்டுமல்லாமல், அணுகுவதற்கு சுலபமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். மாணவர்கள், உங்களிடம் பேசுவதற்கே பயப்பட்டார்களென்றால், உங்கள் உடல்மொழி, இயல்பு இரண்டையும் நீங்களே கிராஸ்செக் செய்வது நல்லது.

* 'வந்தோம், கிளாஸ் எடுத்தோம், போனோம்' என்று இருக்காமல், மாணவர்களுடன் மிகப்பெரிய அளவில் முடியாவிட்டாலும் ஓரளவுக்காவது பர்சனல் தொடர்பில் இருங்கள். இதற்கு சுலபமான, ஆரோக்கியமான வழி, சமூகம் தொடர்பான விஷயங்களை மாணவர்களுடன் பேசுவதுதான். ஒருகட்டத்தில் தங்கள் பிரச்னைகளைக்கூட ஆசிரியர்களிடம் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் மாணவர்கள்.

சிலரை 'இன்னும் கணக்கை முடிக்கலையா' என்று அதட்டினால்தான் நோட்டையே திறப்பார்கள். சிலரோ, 'இன்னும் கணக்கை முடிக்கலையா' என்று கேட்டாலே பதறிவிடுவார்கள்.
'ஸ்கூல் கவுன்சிலர்' திவ்யபிரபா

* பரஸ்பர மரியாதை அவசியம். 'அப்போ, மாணவர்கள் கிளாஸுக்குள்ள வந்தா நாங்க எழுந்து வணக்கம் வைக்கணுமா' என்று பதற்றப்படாதீர்கள். அவர்கள் உங்கள் மாணவர்களே என்றாலும் ஆண்டான் - அடிமை மனப்பான்மை இல்லாமல், அவர்களுடைய மெல்லிய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். உதாரணத்துக்கு, ஒரு மாணவனைக் கண்டிக்க வேண்டுமென்றால், அதைத் தனியாகவும் செய்ய முடியும். மற்ற மாணவர்கள் முன்னால், நோட்டுப் புத்தகத்தைத் தரையில் விட்டெறிவது, எப்போதுமே சரியான விஷயம் கிடையாது.

* ஒவ்வொரு மாணவருமே ஒவ்வொரு வகை. சிலரை 'இன்னும் கணக்கை முடிக்கலையா' என்று அதட்டினால்தான் நோட்டையே திறப்பார்கள். சிலரோ, 'இன்னும் கணக்கை முடிக்கலையா' என்று கேட்டாலே பதறிவிடுவார்கள். இதைப் புரிந்து நடந்துகொள்கிற பொறுப்பும் ஆசிரியர்களுக்கு அவசியம்தான்.

School Counselor Divya Prabha
School Counselor Divya Prabha

* தொடர்ந்து ஒரு மாணவி காலதாமதமாகவே பள்ளிக்கு வருகிறார் என்றால், 'லேட் அட்டெண்டன்ஸ்' போடுவதோடு நின்றுவிடாமல், அதற்கான காரணத்தைக் கேளுங்கள். தினமும் ஹோம்வொர்க் செய்யாமல் பள்ளிக்கு வருவது, வகுப்பறையில் மற்ற மாணவர்களிடம் கோபத்தைக் காட்டுவது என்று இருக்கிற மாணவர்களை 'இந்த ஸ்டூடன்ட் இப்படித்தான்' என்று முத்திரை குத்தி ஒதுக்கிவிடாமல் பேசுங்கள்.

மாணவர்களின் உளவியலைப் பற்றி இரண்டு வரிகளில் சொல்ல வேண்டுமென்றால், 'தங்களுக்குப் பிடித்த டீச்சரையும் மறக்க மாட்டார்கள்; தங்களை அடித்த டீச்சரையும் மறக்க மாட்டார்கள்' அவ்வளவுதான். இதில், தாங்கள் எந்தப் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று ஆசிரியர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு