Published:Updated:

First Graduate Scholarship Guide: முதல் பட்டதாரி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி? | Explainer

Scholarship Guide

பெற்றோர்கள் கல்லூரி படிப்பை முடிக்காமல் பாதியில் நிறுத்தியிருந்தாலும், உடன் பிறந்தவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறாமல் இருந்தாலும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

First Graduate Scholarship Guide: முதல் பட்டதாரி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி? | Explainer

பெற்றோர்கள் கல்லூரி படிப்பை முடிக்காமல் பாதியில் நிறுத்தியிருந்தாலும், உடன் பிறந்தவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறாமல் இருந்தாலும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

Published:Updated:
Scholarship Guide

கல்வி விகடன் யூடியூப் சேனலில் 'Scholarship Guide' என்ற நிகழ்ச்சி மூலம் பல்வேறு உதவித்தொகைகள் பற்றிய தகவல்களை வழங்கிவருகிறார் கல்வியாளர் நாகலட்சுமி விஜயகுமார். அப்படி அவர் 'முதல் பட்டதாரி' உதவித்தொகை (First Graduate Scholarship) பற்றிப் பகிர்ந்துள்ளவை.

"முதல் தலைமுறை பட்டதாரி உதவித்தொகையைத் தமிழ்நாட்டின் வருவாய்த் துறை வழங்குகிறது. பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பிறகு கல்லூரியில் தொழில்முறை படிப்பு (Professional Course) பயிலும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இருக்க வேண்டிய தகுதிகள் இரண்டு. ஒன்று மாணவர்கள்  கல்லூரியில் கலந்தாய்வு (Counselling) மூலமாக மட்டுமே சேர்ந்திருக்க வேண்டும் மற்றொன்று குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்பத்தில் இதற்கு முன் எவரும் கல்லூரி படிப்பை முடித்திராமல் இருக்கவேண்டும். பெற்றோர்கள் கல்லூரிப் படிப்பை முடிக்காமல் பாதியில் நிறுத்தியிருந்தாலும், உடன் பிறந்தவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறாமல் இருந்தாலும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

www.tnesevai.com அல்லது www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் சென்று இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த உதவித்தொகைக்குத் தேவையான ஆவணங்கள்:

1) 10 & 12 -ஆம் வகுப்பின் சான்றிதழ்கள் 

2) உங்கள் உடன்பிறந்தவர்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தால் அவர்கள் அந்தக் கல்லூரியில் பயில்வதற்கான Bonafide சான்றிதழ்

3) உங்கள் மற்றும் உங்கள் பெற்றோர்களின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate - TC)

4) நீங்கள் முதல் தலைமுறை பட்டதாரி தான் என்ற உங்கள் மற்றும் உங்கள் பெற்றோர்களின் சுய உறுதிமொழி (Self Declaration)

5) முதல் பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate)

முதல் பட்டதாரி சான்றிதழை ரூ.60/- செலுத்தி இ-சேவை மையத்தில் பெற்றுக்கொள்ளலாம்" என்றார்.