Published:Updated:

IIT Madras: பொதுமக்களுக்கான மூன்று நாள் கருத்தரங்கு, நோபல் பரிசு வெற்றியாளர் பங்கேற்பு!

IIT Madras

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் உரைகள் நம் மாணவர்களுக்கு ஒரு உலகளாவிய பார்வை கொடுக்கும். ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களில் யோசிக்க இது நிச்சயம் உதவிடும்.

IIT Madras: பொதுமக்களுக்கான மூன்று நாள் கருத்தரங்கு, நோபல் பரிசு வெற்றியாளர் பங்கேற்பு!

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் உரைகள் நம் மாணவர்களுக்கு ஒரு உலகளாவிய பார்வை கொடுக்கும். ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களில் யோசிக்க இது நிச்சயம் உதவிடும்.

Published:Updated:
IIT Madras
நோபல் பரிசு பெற்ற ஆய்வாளர்களைக் கொண்டு மூன்று நாள் கருத்தரங்கு ஒன்றை திட்டமிட்டுள்ளது ஐ.ஐ.டி மெட்ராஸ் கல்வி நிறுவனம். ஐ.ஐ.டி மெட்ராஸின் முன்னாள் மாணவரும், தற்போது சிங்கப்பூரில் உள்ள நான்யாங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சுப்ரா சுரேஷ் தலைமையில் இந்த மூன்று நாள் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

இதன் முதல் நிகழ்வாக 2019-ம் ஆண்டு இயற்பியலில் நோபல் பரிசு வென்ற பேராசிரியர் டிடியர் கொலோஸ் நிகழ்ச்சியை துவங்கி வைத்து, “ புற்கோள்களும், பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளும்” என்ற தலைப்பில் அறிவியல் சொற்பொழிவாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவர்கள் https://iitm.zohobackstage.in/SubraSureshDistinguishedLectureSeries என்ற இணையத்தளத்தில் பதிவு செய்துக்கொள்ளலாம்.

IIT Madras
IIT Madras

முதல் நாளன்று தொழில்நுட்பம் சார்ந்த உரைகளும், இரண்டாம் நாளில் பொதுநிகழ்வுகள் குறித்த உரையாடலும், மூன்றாவது நாள் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையேயான கலந்துரையாடல் நடைபெறும் எனத் தெரிகிறது. இது குறித்து ஐ.ஐ.டி மெட்ராஸின் கார்ப்பரேட் ரிலேஷன் துறை தலைவர் மகேஷ் பஞ்சகுலா பேசுகையில் ``எங்களை பொறுத்தவரையில் இந்நிகழச்சி நடைபெறுவது ஓர் மகிழ்ச்சிகரமான விஷயம். இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் உரைகள் நம் மாணவர்களுக்கு ஒரு உலகளாவிய பார்வை கொடுக்கும். ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களில் யோசிக்க இது நிச்சயம் உதவிடும் " என்று தெரிவித்தார்.

மேலும் அக்கல்வி நிறுவனத்தின் க்ளோபல் என்கேஜ்மென்ட் துறை தலைவர் பேராசிரியர் ரகுநாதன் கூறுகையில் " இந்த அற்புதமான நிகழ்ச்சியின் மூலம் உலகிலுள்ள பல்வேறு அறிஞர் பெருமக்கள் சென்னை வரவிருக்கிறார்கள். இத்தகைய நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அரிய வாய்ப்பு சென்னை மக்களுக்கு கிட்டியிருக்கிறது. எனவே இதை அவர்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். இந்நிகழ்ச்சி வரும் அக்டோபர் 20-ம் தேதி ஐ.ஐ.டி மெட்ராஸ் வளாகத்தில் நடக்கவிருக்கிறது.