Published:Updated:

+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? - Part 3: இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா; கிடைக்காதா?

+2-வுக்கு பிறகு என்ன படிக்கலாம் ?

சென்னை ஐஐடியிலேயே டெவலப்மென்ட் ஸ்டடீஸ் என்று ஐந்து வருட கோர்ஸ் உள்ளது. அதற்கு தனி நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். நிறைய மாணவர்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று இந்தக் கோர்ஸை படிக்கிறார்கள்.

+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? - Part 3: இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா; கிடைக்காதா?

சென்னை ஐஐடியிலேயே டெவலப்மென்ட் ஸ்டடீஸ் என்று ஐந்து வருட கோர்ஸ் உள்ளது. அதற்கு தனி நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். நிறைய மாணவர்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று இந்தக் கோர்ஸை படிக்கிறார்கள்.

Published:Updated:
+2-வுக்கு பிறகு என்ன படிக்கலாம் ?
12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் நடந்து முடிந்த நிலையில், அடுத்து என்ன படிக்கலாம்? கல்லூரியில் எந்த கோர்ஸ் சேரலாம்? எந்தப் படிப்பு படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும்? எங்கு படித்தால் கிடைக்கும்? போன்ற பல்வேறு கேள்விகள் மாணவர்களிடையே இருக்கும். இவர்களின் கேள்விகளுக்குத் தீர்வு காணும் வகையில் ‘+2-வுக்கு பிறகு என்ன படிக்கலாம்?' என்ற வழிகாட்டி நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது கல்வி விகடன். இந்நிகழ்ச்சியை Chennai's Amirta கல்வி நிறுவனம் இணைந்து வழங்கியது.
கல்வியாளர்கள்
கல்வியாளர்கள்

வெளிநாட்டுக் கல்வி ஆலோசகரான ஸ்ரீநிவாஸ் சம்பந்தம், கல்வியாளர் ரமேஷ் பிரபா, சென்னை ஐ.ஐ.டி-யின் இணை பேராசிரியரான முனைவர் விக்னேஷ் முத்துவிஜயன் மற்றும் வாழ்வியல் பயிற்சியாளரான ஆ.கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்துவைத்தனர். அதன் அடுத்த பகுதி,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கு எதிர்காலம் உண்டா? அதற்கான நுழைவுத்தேர்வுகளை பற்றி கூறுங்கள்..

அரசு கல்லூரிகளில் பி.எஸ்ஸி ஹாஸ்பிடாலிட்டி & ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்று ஒரு கோர்ஸ் உள்ளது. கேட்டரிங் என்பது உணவு சமைப்பது, பரிமாறுவது, ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்பது ஒட்டுமொத்த ஹோட்டலையும் நிர்வகிப்பது. இந்த இரண்டு பகுதிகளையும் உள்ளடக்கியதுதான் இந்தப் படிப்பு. நாடு முழுவதும் 8 அரசு நிர்வகிக்கும் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை தரமணி மற்றும் திருச்சி துவாக்குடியில் இரண்டு கல்லூரிகள் உள்ளன. இதை தவிர நாடு முழுவதும் ஒரு 76 கல்லூரிகள் உள்ளன. இங்கு நாம் சேர்ந்து படிக்க JEE மெயின்ஸ் நுழைவுத்தேர்வை எழுதவேண்டும். கடந்த சில வருடங்களாக வேலைவாய்ப்புகள் வளர்ந்து வரும் துறையாகவே இது உள்ளது. இங்கு எல்லாப் பாடங்களுமே ப்ராக்டிகலாக இருக்கும். எதுவுமே மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மற்றபடி உங்கள் கம்யூனிகேசன் மற்றும் ஆங்கிலத் திறனை மேம்படுத்திக்கொண்டால் நிச்சயம் பெரிய அளவில் ஜொலிக்கலாம்.

மாணவர்கள்
மாணவர்கள்

எனக்கு ஃபைன் ஆர்ட்ஸ் படிக்க வேண்டுமென ஆசை. ஆனால் என் தந்தை என்னை இன்ஜினீயரிங் படிக்கச் சொல்கிறார்; நான் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளேன்...

ஒரு பெற்றோருக்கு அந்தக் கோர்ஸ் குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாததால் தான் பயம் வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில் அரசு நுண்கலைக் கல்லூரி உள்ளது. இதைத் தவிர கும்பகோணத்திலும், மகாபலிபுரத்திலும் இரண்டு நுண்கலைக் கல்லூரிகள் உள்ளன. அங்கு படிப்பதற்கு எந்தவித மதிப்பெண்களும் தேவையில்லை. உங்களுக்கு ஒரு சிறிய தேர்வு வைப்பார்கள். அதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் போதும். இன்று தமிழ் சினிமாவில் உள்ள மிகப் பெரிய ஆர்ட் டைரக்டர்களும் இந்த கல்லூரிகளில் படித்து வந்தவர்கள் தான். நெசவாளர்களுக்கு டிசைன் செய்துக் கொடுப்பதற்கு அரசு நடத்தும் 'நெசவாளர் சேவை மையம்' உள்ளது. அதில் செராமிக் டிசைன், இன்டீரியர் டிசைன் போன்ற பல வேலைவாய்ப்புகள் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Humanities and Social Science துறையை எங்குப் படிக்கலாம்? அதில் வேலைவாய்ப்புகள் உள்ளனவா?

பள்ளிகளிலே இதற்குத் தனியாக ஒரு குரூப் உள்ளது. நிறைய பேருக்கு அது தெரிவதில்லை. பெரும்பாலும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள்தான் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு சென்னை ஐஐடியிலேயே டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் என்று ஐந்து வருட கோர்ஸ் உள்ளது. அதற்கு தனி நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். நிறைய மாணவர்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று இந்தக் கோர்ஸைப் படிக்கிறார்கள்.

4. இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா?

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் நாம் நம் திறமையை வளர்த்துக் கொண்டால் தான் வேலை கிடைக்கும். இன்ஜினியரிங் இன்று நிறைய பேர் படிக்கிறார்கள். எல்லாருக்கும் சீட்டு கிடைத்து விடுகிறது. அதனால், இன்ஜினியரிங் ஒரு கேலிப் பொருளாக்கப்படுகிறது. பெரும்பாலும் அப்பா அம்மா சொல்லி இன்ஜினியரிங் படிக்கிறவர்கள் தான் அதிகம். ஆனால் வேலைவாய்ப்பை பொருத்தவரை இன்று இன்ஜினியரிங் தான் முதல் இடத்தில் உள்ளது. ஒரு பரோட்டா மாஸ்டருக்கு ஏன் இன்ஜினியரை விட அதிக சம்பளம் வருகிறதென்றால், அவர் ஒரு பதினைந்து வருடம் வேலை பார்த்து, தன் திறமையை வளர்த்துக் கொண்டு மாஸ்டர் ஆகியிருப்பார். ஆனால் இன்ஜினியரிங்கில் எல்லா பாடத்திலும் சராசரியாக 50 மதிப்பெண் வைத்துக்கொண்டு வெளியில் வந்து, உடனே எனக்கு வேலை கொடுக்கணும் என்று சொன்னால் சொன்னால் எப்படி? நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் சேர வேண்டுமென்றால், அவர்களின் எதிர்பார்ப்பை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு ஏற்றார்போல உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி இன்ஜினியரிங் என்பது ஒரு எவர்கிரீன் கோர்ஸ் தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism