Published:Updated:

ஒரே அப்ளிகேஷன் 151 கல்லூரிகளில் சீட் கிடைக்கும்; +2-வுக்கு பிறகு என்ன படிக்கலாம் ? Part - 1

+2-வுக்கு பிறகு என்ன படிக்கலாம் ?

தில் உங்களுக்கு அருகிலுள்ள பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்து, அதில் எத்தனை கோர்ஸ் இருக்கிறது, அதற்கு என்னென்ன தகுதிகள் தேவைப்படுகிறது என்று பார்க்க வேண்டும்.

ஒரே அப்ளிகேஷன் 151 கல்லூரிகளில் சீட் கிடைக்கும்; +2-வுக்கு பிறகு என்ன படிக்கலாம் ? Part - 1

தில் உங்களுக்கு அருகிலுள்ள பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்து, அதில் எத்தனை கோர்ஸ் இருக்கிறது, அதற்கு என்னென்ன தகுதிகள் தேவைப்படுகிறது என்று பார்க்க வேண்டும்.

Published:Updated:
+2-வுக்கு பிறகு என்ன படிக்கலாம் ?
12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் நடந்து முடிந்த நிலையில், அடுத்து என்ன படிக்கலாம்? கல்லூரியில் எந்த கோர்ஸ் சேரலாம்? எந்தப் படிப்பு படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும்? எங்கு படித்தால் கிடைக்கும்? போன்ற பல்வேறு கேள்விகள் மாணவர்களிடையே இருக்கும். இவர்களின் கேள்விகளுக்குத் தீர்வு காணும் வகையில் ‘+2-வுக்கு பிறகு என்ன படிக்கலாம்?' என்ற வழிகாட்டி நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது கல்வி விகடன். இந்நிகழ்ச்சியை Chennai's Amirta கல்வி நிறுவனம் இணைந்து வழங்கியது.
கல்வியாளர்கள்
கல்வியாளர்கள்

வெளிநாட்டு கல்வி ஆலோசகரான ஸ்ரீநிவாஸ் சம்பந்தம், கல்வியாளர் ரமேஷ் பிரபா, சென்னை ஐ.ஐ.டி-யின் இணை பேராசிரியரான முனைவர் விக்னேஷ் முத்துவிஜயன் மற்றும் வாழ்வியல் பயிற்சியாளரான ஆ.கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்துவைத்தனர். அதன் சிறு பகுதி இதோ,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டேட்டா சயின்ஸ், மெஷின் லர்னிங் ஆகிய இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ? எந்தப் படிப்பிற்கு அதிக ஸ்கோப் உள்ளது ?

டேட்டா சயின்ஸ்-ஐ தமிழில் தரவு அறிவியல் என்று சொல்வோம். இன்றைய உலகில் எல்லாமே டேட்டா தான். உதாரணத்திற்கு, நீங்கள் யூடியூபில் சென்று ஒரு இளையராஜா பாட்டு பார்த்தால், நீங்கள் மீண்டும் யூடியூப்பிற்கு செல்லும்போது ஒரு ஏ.ஆர்.ரகுமான் பாடல் உங்களுக்கு காட்டும். உங்கள் டேட்டாவை எடுத்து, உங்களுக்கு எது பிடிக்கும் என்று அறிந்துவைத்து, அதற்கேற்ப உங்களுக்கு அவுட்புட் கொடுக்கப்படுகிறது. இதைப்பற்றி படிப்பது தான் டேட்டா சயின்ஸ்.

இதே மெஷின் லர்னிங் என்பது டேட்டா சயின்ஸ்-க்கு தேவையான ஒரு டூல். ஒரு டேட்டாவை எப்படி ஆய்வுக்கு உட்படுத்தலாம், அதை எப்படி வர்த்தக ரீதியாக பயன்படுத்தலாம் என்று திறனாய்வு செய்வது தான் மெஷின் லர்னிங். இந்தப் படிப்பிற்கு கணிதம் மற்றும் புள்ளியலில் அடிப்படை அறிவு தேவைப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட பல்வேறு புரோகிராம்கள் தற்போது இணையத்தில் கிடைக்கிறது. இனிவரும் காலங்களில் கிட்டத்தட்ட ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் துறையாக இது மாற உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கலை அறிவியல் படிப்புகளுக்கு சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி?

மாணவர்கள்
மாணவர்கள்

இன்ஜினீயரிங்கை எடுத்துக்கொண்டால், அதற்கு ஒரே ஒரு கவுன்சலிங்தான். ஆனால் கலை அறிவியல் படிப்பிற்கு பல்வேறு கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் கலை அறிவியல் படிப்புகளுக்கென கிட்டத்தட்ட 10 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் உங்களுக்கு அருகிலுள்ள பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்து, அதில் எத்தனை கோர்ஸ் இருக்கிறது, அதற்கு என்னென்ன தகுதிகள் தேவைப்படுகிறது என்று பார்க்க வேண்டும். கலை அறிவியல் துறைக்கு இதுவரை நுழைவுத் தேர்வு கிடையாது. முழுக்க முழுக்க நம் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் சீட் கிடைக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் இருக்கும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு tngasa என்று ஒரு கவுன்சலிங் நடக்கிறது. இந்த ஒரு அப்ளிகேஷனை பூர்த்தி செய்தால், தமிழ்நாட்டிலுள்ள 151 அரசு கல்லூரிகளிலும் உங்களுக்கு சீட்டு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் தனியார் கல்லூரிகளுக்கு ஒவ்வொரு கோர்ஸ்க்கும் தனித்தனியாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும். அதையும் இப்போது ஆன்லைனிற்கு கொண்டு வந்து விட்டார்கள்.

NEET, JEE போன்ற தேர்வுகளில் தோல்வி அடைந்துவிட்டால், தேர்வில் தேர்ச்சி பெறும் வரை படிப்பது இப்போது வழக்கமாகிவிட்டது. இதனால் மாணவர்களுக்கு என்ன பாதிப்பு உண்டாகிறது?

நீட், JEE போன்ற போட்டி தேர்வுகளைக் கூட விட்டு விடுவோம். இன்ஜினீயரிங் முடித்து ஒரு கல்லூரியில் சேர்ந்த பின்னர், அது பிடிக்கவில்லை என்று மீண்டும் ஒரு வருடம் வீண் செய்து வேறு ஒரு கல்லூரியில் சேர கவுன்சிலிங்கிற்காக விண்ணப்பிக்கிறார்கள். அப்போது புதிதாக சேரும் கல்லூரியும் உங்களுக்கு பிடித்துவிடும் என்பதில் என்ன நிச்சயம். ஒரு வருடம் என்பது ரொம்பவே மதிப்பு வாய்ந்த ஒன்று. அதை அசால்ட்டாக மாணவர்கள் எண்ணி விடுகிறார்கள். இதற்கு மாணவர்களைக் காட்டிலும் பெற்றோர்கள்தான் பெரும்பாலும் காரணம். நீட் தேர்வில் ஒரு மாணவன் தோல்வி அடைந்துவிட்டால், 'இன்னும் ஒரு முறை முயற்சி செய்து பாரேன்' என்று மாணவர்களை இரண்டு மூன்று அட்டெம்ப்ட்கள் கொடுக்க வைக்கிறார்கள். கிட்டத்தட்ட 70 சதவிகித மாணவர்கள் இரண்டாவது முறையாக நீட் எழுதுகிறார்கள் என்று தரவுகள் சொல்கின்றன. அப்போது புதிதாய் வரும் 70 சதவிகித மாணவர்களின் வாய்ப்புகள் இவர்களால் குறைகிறது. ஒருமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாலே மனம் உடைந்துப் போகும் மாணவர்கள், தொடர்ந்து இரண்டு மூன்று முறை எழுதி தோல்வி அடையும் போது அவர்கள் மேலும் மனஅழுத்தத்திற்கு ஆளாகித் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதனால் இதை முற்றிலுமாக நாம் தவிர்க்க வேண்டும்.

தொழில்முனைவோர் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்?

தொழில்முனைவோர் ஆவதற்கு தனியாக படிக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. ரிஸ்க் எடுக்கும் தைரியம் மட்டும் இருந்தால்போதும். இன்று கல்லூரிகளிலேயே இன்குபேஷன் சென்டர்கள் எல்லாம் வைத்து, தொழில்முனைவோருக்கான திறன்களை மாணவர்களிடையே கொண்டுவர பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. நீங்கள் எந்தப் பாடத்தில் இளங்கலை முடித்திருந்தாலும், எம்.பி.ஏ முதுகலை சேர வாய்ப்புள்ளது. முன்னாடியெல்லாம் ஒரு எம்.பி.ஏ படிப்புதான் இருக்கும். இப்போது அதுவே உடைந்து பல படிப்புகள் உருவாகிவிட்டன. இதை தாண்டி பிசினஸ் சம்பந்தப்பட்ட ஸ்டோரிஸ் படிப்பது, சக்சஸ் ஸ்டோரிஸ் படிப்பது, தினமும் செய்தித்தாள் படிப்பது என தினந்தினம் உங்களை அப்டேட் செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism