Published:Updated:

NEET தேர்வு இல்லாமல் இதையெல்லாம் படிக்கலாம்; +2-வுக்கு பிறகு என்ன படிக்கலாம் ? Part - 2

+2-வுக்கு பிறகு என்ன படிக்கலாம் ?

வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியாவில் வந்து மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தனி தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி சதவிகிதம் வெறும் 21% தான்.

NEET தேர்வு இல்லாமல் இதையெல்லாம் படிக்கலாம்; +2-வுக்கு பிறகு என்ன படிக்கலாம் ? Part - 2

வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியாவில் வந்து மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தனி தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி சதவிகிதம் வெறும் 21% தான்.

Published:Updated:
+2-வுக்கு பிறகு என்ன படிக்கலாம் ?
12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் நடந்து முடிந்த நிலையில், அடுத்து என்ன படிக்கலாம்? கல்லூரியில் எந்த கோர்ஸ் சேரலாம்? எந்தப் படிப்பு படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும்? எங்கு படித்தால் கிடைக்கும்? போன்ற பல்வேறு கேள்விகள் மாணவர்களிடையே இருக்கும். இவர்களின் கேள்விகளுக்குத் தீர்வு காணும் வகையில் ‘+2-வுக்கு பிறகு என்ன படிக்கலாம்?' என்ற வழிகாட்டி நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது கல்வி விகடன். இந்நிகழ்ச்சியை Chennai's Amirta கல்வி நிறுவனம் இணைந்து வழங்கியது.
கல்வியாளர்கள்
கல்வியாளர்கள்

வெளிநாட்டு கல்வி ஆலோசகரான ஸ்ரீநிவாஸ் சம்பந்தம், கல்வியாளர் ரமேஷ் பிரபா, சென்னை ஐ.ஐ.டி-யின் இணை பேராசிரியரான முனைவர் விக்னேஷ் முத்துவிஜயன் மற்றும் வாழ்வியல் பயிற்சியாளரான ஆ.கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்துவைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பி.எஸ்ஸி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) க்கும், பி.சி.ஏ க்கும் உள்ள வித்தியாசம் என்ன?

கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தி என்னென்ன செய்யலாம் என்பது பி.சி.ஏ. அதுவே கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையைப் பற்றி விரிவாக படிப்பது பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் குறித்த அடிப்படையான விஷயம் அனைத்தையும் தெரிந்துகொள்ள பி.எஸ்ஸி படிக்கலாம். அதை வெறும் அப்ளைடாக (பயன்பாட்டு ரீதியாக) படித்தால் மட்டும் போதும் என்றால் பி.சி.ஏ படிக்கலாம். பி.எஸ்சி படித்தால் பின்னாளில் எம்.சி.ஏ கூட நாம் எடுக்க முடியும். அதனால் உங்களுடைய இளநிலை கல்வியைப் பொருத்தமட்டில் விரிவான பாடத்தை எடுங்கள். அதிலிருந்து உங்கள் பாதையை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் எடுக்கும்போதே ஒரே நேர் வழியான படிப்பை தேர்வு செய்தால், பின்னர் உங்களுக்குதான் சிரமம்.

மாணவர்கள்
மாணவர்கள்

நீட் இல்லாத மருத்துவ படிப்புகள் என்னென்ன இருக்கின்றன. அதில் உள்ள வேலைவாய்ப்புகள் என்ன ?

ஆரம்பத்தில் MBBS மற்றும் BDS படிப்புகளுக்கு மட்டுமே NEET இருந்தது. பின், ஆல்டர்னேட் மெடிசன் என்று சொல்லப்படக்கூடிய சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்ற படிப்புகளுக்கும் நீட் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது BNYS ( Bachelor of Naturopathy and Yogic Sciences) என்ற ஒரு கோர்ஸிற்கு மட்டுமே நீட் இல்லை. இந்தப் படிப்பு அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இரண்டிலும் உள்ளன. இதற்கடுத்து பி.ஃபார்ம், பார்ம் டி, பிசியோதெரபி, ஆப்டோமெட்ரி, மெடிக்கல் ரெக்கார்ட் சயின்ஸ் போன்ற படிப்புகளுக்கும் நீட் இல்லை. இதைத் தவிர பி.எஸ்சி-ல் 21 வகையான மருத்துவ படிப்புகள் உள்ளன. அவை எதுக்குமே நாம் கவனம் அளிப்பதில்லை. இதைப் பற்றி அதிகம் தெரிந்துக்கொள்வதற்கு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக இணையத்தளத்தில் சென்று பார்க்கலாம். இவை எல்லாவற்றிருக்குமே வேலைவாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவ படிப்பை வெளிநாடுகளில் பயின்று அங்கேயே பணிபுரிவதற்கும், இங்கு வந்து வேலை பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?

மருத்துவத் துறையைப் பொருத்தமட்டில் ப்ராக்டிஸ்தான் ரொம்ப முக்கியம். இங்குள்ள மருத்துவப் படிப்புகள் இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்கும். ஆனால் நீங்கள் வெளிநாடுகளில் இதைப் பயிலும் போது அந்த நாடுகளுக்கு ஏற்ற சூழ்நிலையில்தான் படிப்புகள் இருக்கும். நீங்கள் அங்கு படித்து முடித்து அங்கு வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்தால், அங்கு வைக்கப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அது பெரும்பாலும் அவர்கள் மொழி குறித்தத் தேர்வாகத்தான் இருக்கும். ஏனென்றால், அங்குள்ள மக்களின் மொழி தெரிந்தால்தானே நோயாளிகளின் பிரச்னைகளை உணர முடியும். அங்கு படித்துவிட்டு இந்தியாவில் வந்து மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தனி தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி சதவிகிதம் வெறும் 21% தான். இது மிகவும் சவாலான ஒன்று.

மாணவர்கள் கேட்ட சந்தேகங்களையும் அதற்கான விளக்கங்களையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.

4. மெரைன் டெக்னாலஜி மற்றும் ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா?

மெரைன் மற்றும் ஏரோனாடிக்கல் இரண்டுமே மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கின் கீழ் தான் வருகிறது. இந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்க நினைத்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் 99 சதவிகித மாணவர்களுக்கு அத்தெளிவு +2 படிக்கும் போது இருப்பதில்லை. அதனால் உங்களுக்கு மெரைன் தான் படிக்க வேண்டுமென்றால், முதலில் மெக்கானிக்கல் எடுத்து படித்து, அதன்பிறகு மேற்படிப்பிற்கு மெரைன், ஆட்டோமொபைல் போன்ற படிப்புகளை தேர்ந்தெடுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism