Published:Updated:

Foreign Education : வெளிநாடுகளில் MBBS படிப்பதற்கு முன் இதையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க!

Foreign Education

வெளிநாடுகளில் MBBS படித்துவிட்டு இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற FMGE (Foreign Medical Graduate Examination) என்ற தேர்வில் குறைந்தது 50 சதவிகிதம் மதிப்பெண்களைப் பெற்றிருப்பது அவசியம்.

Foreign Education : வெளிநாடுகளில் MBBS படிப்பதற்கு முன் இதையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க!

வெளிநாடுகளில் MBBS படித்துவிட்டு இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற FMGE (Foreign Medical Graduate Examination) என்ற தேர்வில் குறைந்தது 50 சதவிகிதம் மதிப்பெண்களைப் பெற்றிருப்பது அவசியம்.

Published:Updated:
Foreign Education

கல்வி விகடன் யூடியூப் சேனலில் 'Foreign Education A-Z’ என்ற நிகழ்ச்சியின்  மூலம் வெளிநாட்டில் கல்வி பயில இந்திய மாணவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்களைப் பற்றி பேசி வருகிறார் கல்வியாளர் ஸ்ரீநிவாஸ் சம்பந்தம். வெளிநாடுகளில் மருத்துவம் என்ற இந்த வார காணொளியில் அவர் பேசியுள்ளதன் சிறு பகுதி, 

 " பொதுவாக MBBS படிப்பின் மீது நம் பெரும்பாலான மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். இந்தியாவில் MBBS படிப்பதற்கு தற்போது நீட் நுழைவுத்தேர்வு ஒரு சவாலாக இருப்பதால் வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதைப் பற்றி பலரும் யோசிக்கிறார்கள். வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கு முன்பு எந்த நாட்டில் படிக்கப் போகிறோம், அதில் இருக்கும் சாதக பாதகங்கள் என்ன என்பவற்றைப் பற்றிய அனைத்தையும் தெளிவாக அறிந்திருப்பது அவசியம்.

வெளிநாடுகளை ஆங்கிலம் பேசும் நாடுகள் (English Speaking Countries),  ஆங்கிலம் பேசா நாடுகள் (Non-English Speaking Countries) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஆங்கிலம் பேசும் நாடுகள். இந்த நாடுகளில் மருத்துவம் பயின்றால் அங்கேயே மருத்துவராக பணியாற்ற முடியும். பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா, ஜார்ஜியா, உக்ரைன் போன்ற நாடுகள் ஆங்கிலம் பேசா நாடுகள். ஆங்கிலம் பேசா நாடுகளில் மருத்துவராக பணிபுரியது இயலாத ஒன்று. அங்கு வேலை செய்ய அவர்கள் மொழியை நன்றாக அறிந்திருப்பது அவசியம். அதனால் ஆங்கிலம் பேசா நாடுகளில் மருத்துவம் பயின்ற பெரும்பாலானவர்கள் இந்தியா திரும்புவார்கள். வெளிநாடுகளில் MBBS படித்துவிட்டு இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற FMGE (Foreign Medical Graduate Examination) என்ற தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண்களை பெற்றிருப்பது அவசியம். FMGE தேர்வின் தற்போதைய தேர்ச்சி விகிதம் 19-20 மட்டுமே. சமீபத்தில் நடந்து முடிந்த FMGE பரீட்சையில் கிட்டத்தட்ட 22,000 தேர்வெழுதினார்கள். ஆனால் அதில் தோராயமாக 2,300 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 

MBBS
MBBS

இன்னும் சில நாடுகளில் கல்லூரிப் படிப்பின் இரண்டாவது வருடத்தில் நுழைவுத்தேர்வு ஒன்று நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்கள் படிப்பைத் தொடர முடியும். இல்லையேல் மருத்துவ அறிவியலில் இளங்கலை பட்டத்துடன் வெளியேறும் நிலையும் இருக்கிறது. வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதில் உள்ள சவால்களை அறிந்திருந்தால் தான் அதை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்பதைத் திட்டமிட முடியும். அதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வெளிநாடுகளில் MBBS படிக்க முடிவெடுக்கும் முன் அதிலுள்ள சவால்களைப் அறிந்து அதை எதிர்கொள்வது பற்றி திட்டமிடுவது அவசியம்” என்றார். முழு விளக்கத்தைப் பெற கீழே உள்ள காணொளியைக் காணவும்