Published:Updated:

IIT Madras: வங்கித் தேர்வு எழுதுபவர்களுக்காக ஐ.ஐ.டி மெட்ராஸின் புதிய முன்னெடுப்பு; லிங்க் இதோ!

IIT Madras

மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, டிஜிட்டல் பேங்கிங், வர்த்தக சந்தை, வங்கி அடிப்படைகள், ரிஸ்க் மேனேஜ்மென்ட் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

IIT Madras: வங்கித் தேர்வு எழுதுபவர்களுக்காக ஐ.ஐ.டி மெட்ராஸின் புதிய முன்னெடுப்பு; லிங்க் இதோ!

மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, டிஜிட்டல் பேங்கிங், வர்த்தக சந்தை, வங்கி அடிப்படைகள், ரிஸ்க் மேனேஜ்மென்ட் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

Published:Updated:
IIT Madras
பொருளாதாரம் மற்றும் வங்கிகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஏழு பாடத்திட்டங்களை வகுத்துள்ளது ஐ.ஐ.டி மெட்ராஸ் கல்வி நிறுவனம்.

ஐ.ஐ.டி மெட்ராஸின் தொழிநுட்பப் பிரிவான பிரவர்தக் அமைப்பு மாணவர்களை வங்கிகள் மற்றும் தனிநபர் பொருளாதாரம் சார்ந்து இருக்கும் தொழில்களுக்கு தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் ஸ்கில் அகாதமியுடன் இணைந்து இந்த புதிய ஏழு பாடங்களை வகுத்துள்ளது.

ஐ.ஐ.டி
ஐ.ஐ.டி

தற்போது வளர்ந்து வரும் துறைகளில் முக்கியமான ஒன்று வங்கித்துறை. அத்துறையில் நடத்தப்படும் தேர்வுகளில் ஆண்டிற்கு 30 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.ஆனால், 0.5 சதவிகிதத்தினர் மட்டுமே வெற்றி பெற்று வங்கிப் பணிகளில் அமர்கின்றனர். எனவே இதுகுறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தவும், இத்தேர்வுகளுக்கு தயார்படுத்தவும் இப்புதிய முன்னெடுப்பை எடுத்திருக்கிறது ஐ.ஐ.டி நிறுவனம். இதுமட்டுமல்லாமல் வர்த்தக சந்தை, பங்குச் சந்தைகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கும் உதவி புரியும் வகையில் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோர்ஸ்களில் சேர விரும்பும் மாணவர்கள் https://iit.infactpro.com/ என்ற இணையத்தளத்திலும், https://skillsacademy.iitm.ac.in/ என்ற தளத்திலும் விண்ணப்பிக்கலாம். இது குறித்து பேசிய ஐ.ஐ.டி மெட்ராஸின் இயக்குனர் டாக்டர் காமகோட்டி ``வாழ்க்கை என்பதே ஒரு பாடம் தான். அதில் நாம் தினமும் கற்றுக்கொண்டு, நம்மை செழுமைப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். தற்போது 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற பல விஷயங்களை மாணவர்கள் கற்றுக் கொள்வது அவசியமாகிறது. அதற்கு இப்பாடத்திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். இந்தப் பாடங்களை ஆன்லைனில் கற்பிப்பதன் மூலம் தொலைதூரத்தில் கிராமத்தில் இருக்கும் மாணவர்கள்கூட எளிதாக கற்றுக்கொள்ள முடியும்" என்று தெரிவித்தார்.

IIT Madras
IIT Madras

இந்தப் பாடத்திட்டத்தைக் குறித்து விளக்கிய பேராசிரியர் மங்களா சுந்தர், " தற்போது பொருளாதாரம் தெரிந்த மாணவர்களை தான் வங்கிகள் பெரும்பாலும் எதிர்பார்க்கின்றனர். அதற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் விதத்தில் இப்பாடத்திட்டத்தை அமைத்துள்ளோம். இதில் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, டிஜிட்டல் பேங்கிங், வர்த்தக சந்தை, வங்கி அடிப்படைகள், ரிஸ்க் மேனேஜ்மென்ட் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. இப்பாடங்கள் அனைத்துமே அந்தந்த துறைசார்ந்த நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படும்" என்று கூறினார்.