Published:Updated:

IITDM: "2047-ல் இந்தியா பொருளாதார அளவில் நல்ல நிலையை வகிக்கும்"- நிர்மலா சீதாராமன்

2028-ம் ஆண்டில் சீனாவைவிட இந்தியாவிலேயே உழைக்கும் மக்கள் அதிகமாக இருப்பார்கள்.

IITDM: "2047-ல் இந்தியா பொருளாதார அளவில் நல்ல நிலையை வகிக்கும்"- நிர்மலா சீதாராமன்

2028-ம் ஆண்டில் சீனாவைவிட இந்தியாவிலேயே உழைக்கும் மக்கள் அதிகமாக இருப்பார்கள்.

Published:Updated:

காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரிலுள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம்,வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின்(IIITDM) 10 வது பட்டமளிப்பு விழா கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இந்த நிறுவனம் இயந்திரப் பொறியியல், மின்னணுவியல், கணினிப் பொறியியல் போன்ற பாடங்களில் தனித்துவமான கல்வியை வழங்குகிறது.

IITDM
IITDM

பட்டமளிப்பு விழாவில் பேசிய நிர்மலா சீதாராமன் “ இந்தியா வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலகம் எதை நோக்கி நகர்கிறது, எந்தத் தொழில்நுட்பம் நோக்கி நகர்கிறது என்பதை பெற்றோர்கள் அறிந்து வருமானத்தில் ஒரு பங்கை சேமித்து வைக்க வேண்டும். 2028-ம் ஆண்டில் சீனாவை விட இந்தியாவிலேயே உழைக்கும் மக்கள் அதிகமாக இருப்பார்கள். 2026-ம் ஆண்டில் நம் நாட்டில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 65 சதவிகிதமாக உருப்பெறும். புதிய கல்விக்கொள்கை உயர்கல்விக்குத் தேவையான பல வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் இந்தியர்கள்தான் தலைமைப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். மாணவர்கள் மற்ற நிறுவனங்களுக்கு சென்று வேலை செய்வதைவிட தாங்கள் தொழில் முனைவோராக மாறி மற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். 2047-ல் இந்தியா பொருளாதார அளவில் நல்ல நிலையை வகிக்கும், அதற்கு தேவையானவற்றையை நாம் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.