Published:Updated:

ஐரோப்பாவில் உயர்க்கல்வி - 6: டென்மார்க் நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?

ஐரோப்பாவில் உயர்க்கல்வி | Higher Education in Europe

மாதாந்திரச் செலவிற்காக தோராயமாக 72000 ரூபாய் வீதம் கல்விக்காலம் முழுமைக்குமான தொகையினை வங்கியில் கையிறுப்பு வைத்திருக்க வேண்டும்.

ஐரோப்பாவில் உயர்க்கல்வி - 6: டென்மார்க் நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?

மாதாந்திரச் செலவிற்காக தோராயமாக 72000 ரூபாய் வீதம் கல்விக்காலம் முழுமைக்குமான தொகையினை வங்கியில் கையிறுப்பு வைத்திருக்க வேண்டும்.

Published:Updated:
ஐரோப்பாவில் உயர்க்கல்வி | Higher Education in Europe

டென்மார்க் நாட்டின் முதலாம் பல்கலைக்கழகமான கோப்பன்னகன் பல்கலைக்கழகம் கி.பி. 1479 லிருந்து, டென்மார்க் தலைநகரம் கோப்பன்னகனில் செயல்பட்டு வருகிறது. கீல் (KIEL) என்னும் இடத்தில் டென்மார் அரசு 1665இல் இரண்டாம் பல்கலைக்கழகத்தைக் கட்டியது. ஆனால், கி.பி. 1864இல் கீல் நகரையும் அருகில் உள்ள நிலப்பரப்பையும் ஜெர்மானியப் படைகள் கைப்பற்றியப் பின், 1928 வரை கோப்பன்னகன் பல்கலைக்கழகம் மட்டும்தான் டென்மார்க் நாட்டில் இருந்த ஒரே பல்கலைக்கழகம்.

ஐரோப்பாவில் உயர்க்கல்வி - 6: டென்மார்க் நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?

டென்மார்க் நாட்டில் உயர்கல்வித்துறை தற்பொழுது, 8 பல்கலைக்கழகங்கள், 6 பல்கலைக்கழகக் கல்லூரிகள் (University Colleges), 12 உயர்கல்வி நிறுவனங்கள்/கல்விக் கழகங்கள் (Institutions/Academy) என விரிவடைந்துள்ளது. உலகப் பல்கலைக்கழகங்களின் வரிசையில் (1300 பல்கலைக்கழகப் பட்டியலில்), டென்மார்க் தொழிற்நுட்பப் பல்கலைக்கழகம் (Denmark Technical University) மற்றும் கோப்பன்னகன் பல்கலைக்கழகம் (University of Coppenhagen) ஒவ்வொரு வருடம் முதல் 100 இடங்களுக்குள் வந்துவிடும்.

டென்மார்க் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இளநிலை அறிவியல்/தொழிற்நுட்பப் பட்டப்படிப்புகள் 3 ஆண்டுகள், இளநிலைக் கலைப் பட்டப்படிப்புகள் 4 ஆண்டுகளும், சில பட்டப்படிப்புகள் இளநிலை+முதுநிலை என 4 -6 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகக் கல்லூரிகள்/தொழிற்நுட்பக் கல்லூரிகளிலும் 4 ஆண்டுகள் பாடத்திட்டங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. டென்மார்க் நாட்டினில், 1 பருவத்திற்கு (per semester) 30 ECTS பெற்றிருக்க வேண்டும், அதாவது 1 ECTS என்பது 28-30 மணி நேர பாடத்திட்டம் (வகுப்பு நேரம், ஆய்வக நேரம், தேர்வு உள்ளிட்டவைகள் உள்ளடங்க). 1 வருடத்திற்கு 60 ECTS, இளநிலையில் தேர்ச்சிப் பெற்றிருக்க 180 ECTS பெற்றிருக்க வேண்டும். அதாவது, மாணவ, மாணவியர் தங்களுக்கு விருப்பமான பாடங்களைத் (கட்டாயப் பாடங்கள் தவிர்த்து) தேர்ந்தெடுத்து மொத்தம் 180 ECTS வரும்படி படித்துத் தேர்ச்சிப் பெறலாம்.

ஐரோப்பாவில் உயர்க்கல்வி - 6: டென்மார்க் நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?

உதாரணமாக, இயற் அறிவியல் (Natural Sciences) பாடப்பிரிவில் 45 ECTS வரும்படியாகவும் தொழிற்நுட்ப் பிரிவில் எத்துறையில் பயில்கிறோமோ அதனைச் சார்ந்த தொழிற்நுட்பப் பாடத்திட்டங்களில் 45 ECTS வரும்படியாகவும் தெரிவுறுப் பாடத்திட்டத்தில் (elective courses) 45 ECTS வரும்படியாகவும் ஒவ்வொரு மாணவ, மாணவியரும் பாடத்திட்டங்களை தேர்வு செய்து தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும், மீதமுள்ள 45 ECTS செயற்திட்ட (Projects) வடிவமைப்பில் ஈடுபட்டு அறிக்கை சமர்ப்பித்து இருக்க வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளின் பெரும்பாலுமான பல்கலைக்கழகங்களிலும் இதே நடைமுறைதான் எனினும், டென்மார்க் நாட்டினில் தொழிற்நுட்பக் கல்வியியல் 5வது பருவத்தில் அயல்நாட்டினில் கல்வி/ஆய்வகப்பணி/ஆராய்ச்சி நிலையங்களில் பயிற்சி/தொழிற்சாலைகளில் உள்ளிருப்புப் பயிற்சிகளுக்கு செலவிடலாம், 6வது பருவத்தில் ஆய்வகத் திட்டங்களில் பங்கு பெறலாம், அல்லது முறையான ஆராய்ச்சிகள் செய்து திட்டவடிவினைச் சமர்பிக்கலாம்.

பட்டப்படிப்புக் காலத்திலேயே தொழிற்சாலைகள், ஆராய்ச்சி மையங்களில் அனுபவங்கள் பெற்று முதுநிலை மற்றும் முனைவர் பட்ட ஆய்விற்காக மாணவ, மாணவிகள் தயார்படுத்திக் கொள்ளும் விதமாக பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

டென்மார்க் நாட்டுப் பல்கலைக்கழகங்கள்

நெதர்லாந்து நாட்டுப் பல்கலைக்கழகங்கள் பற்றி அறிய கீழே உள்ள இணையதளம் செல்க:

https://studyindenmark.dk/

https://studyindenmark.dk/study-options/danish-higher-education-institutions

https://ufm.dk/en/education/higher-education/the-danish-higher-education-system

டென்மார்க் பல்கலைக்கழகத் தரவரிசை

டென்மார்க் நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தர வரிசை பற்றி அறிய:

https://www.timeshighereducation.com/student/best-universities/best-universities-denmark

ஐரோப்பாவில் உயர்க்கல்வி - 6: டென்மார்க் நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?

டென்மார்க் பட்டப்படிப்பு நுழைவு விதிமுறைகள்

டென்மார்க் நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பில் சேருவதற்கும் முன் நாம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய பல்கலைக்கழக நுழைவி விதிகள் பற்றி கீழே உள்ள இணைய இணைப்பில் படித்து அறிந்துக்கொள்ளலாம்.

https://ufm.dk/en/education/recognition-and-transparency/recognition-guide/admission-he

3அ) இளநிலைப் பட்டப்படிப்புகள்

இளநிலைக் கல்வி பெரும்பாலும் டேனீஷ் மொழியிலேயே வழங்குகிறார்கள். டேனீஷ் மொழிப்புலமைப் பெற்றால், இளநிலைக் கல்வியை டென்மார்க் நாட்டினில் தொடரலாம்.

ஆங்கிலவழியில் இருக்கும், இளநிலை அறிவியல், கலை, பொறியியல்/தொழிற்நுட்பப் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தாங்கள் வழங்கும் பட்டப்படிப்பைப் பொறுத்து, சில அடிப்படை விதிமுறைகளை தொகுத்து வைத்துள்ளனர். பல்கலைக்கழகங்களின் இணையப் பக்கங்களில் சென்று தெரிந்துக்கொள்வது நல்லது.

உதாரணமாக, இளநிலை பொதுப் பொறியியல் பட்டப்படிப்பிற்கு (Bachelor of general engineering), டென்மார்க் தொழிற்நுட்பப் பல்கலைக்கழகம் விதித்துள்ளத் தேவைக்குறிப்புகளை இங்கே காணலாம்.

https://www.dtu.dk/english/education/undergraduate/general-engineering

ஆர்ஹூஸ் பல்கலைக்கழகத்தில் (Aarhus University), பொருளியல் மற்றும் வணிக மேலாண்மைப் பிரிவில் இளநிலைக் கல்வியில் சேர்வதற்கு ஆங்கிலம், கணிதம் இரண்டிலும் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும், வரலாறு, சமூக அறிவியல் அல்லது சர்வதேசப் பொருளியல் ஆகியப் பாடங்களில் ஒன்றில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

https://bachelor.au.dk/en/economics-and-business-administration/

ஆல்பர்க் பல்கலைக்கழகம் (Aalborg University) இளநிலைப் பொறியியலில் சிலப் பாடப்பிரிவினை வழங்குகிறார்கள், குறிப்பாக, வேதியியல் மற்றும் உயிர்தொழிற்நுட்பப் பொறியியல் பாடப்பிரிவிற்கு, மேல்நிலை வகுப்புகளில் இயற்பியல் மற்றும் வேதியியல் அல்லது இயற்பியல் மற்றும் உயிர்தொழிநுட்பவியல் அல்லது புவி அறிவியல் மற்றும் வேதியியல் பாடங்களைப் படித்துத் தேர்ச்சிப் பெறிருக்க வேண்டும்.

https://www.en.aau.dk/education/bachelor/chemicalengineering-biotechnology/application-and-requirements

ஐரோப்பாவில் உயர்க்கல்வி - 6: டென்மார்க் நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?

ரோஸ்கில்டு பல்கலைக்கழகத்தில் (Roskilde University) சர்வதேச இயற் அறிவியல் (International Natural Sciences) பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் வழங்குகிறார்கள். மேல்நிலை வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம், உயிரியல், உயிர் தொழிற்நுட்பவியல் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

https://ruc.dk/en/step-2-admission-requirements-0

3ஆ) முதுநிலைப் பட்டப்படிப்புகள்

முதுநிலைக் கல்வியில் சேர்வதற்குரிய பொதுவான அடிப்படைத் தகுதிகள்:

அ) இளநிலை அறிவியல்/பொறியியலில் 75 சதவீத கூட்டு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

ஆ) இளநிலைக் கல்வி முடித்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கக் கூடாது.

இ) முதுநிலைப் பட்டப்படிப்பின் பிரிவிகளுக்கு ஏற்ப இருக்கும் குறிப்பிட்டத் தகுதிகளை எட்டியிருக்க வேண்டும்.

உதாரணமாக, முதுநிலை பொருட்களின் அறிவியல்/ உற்பத்திப் பொறியியல் பட்டப்படிப்பிற்குத் தேவையான அடிப்படை தகுதி விதிகளை இங்கே காணலாம்.

https://studieinformation.dtu.dk/english/Master-of-Science-in-Engineering/Materials-and-Manufacturing-Engineering/Programme-specification#Academic_requirements_for_this_programme

ஆல்பர்க் பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் பிரிவிற்கான தேவையான தகுதிநிலை குறித்து கீழே உள்ள இணைப்பில் உள்ளது.

https://www.en.aau.dk/education/master/computer-engineering/job-and-career/

அங்கு, முதுநிலைப் பொறியியலில் மருத்து உயிர்தொழிற்நுட்பப் (Medical Biotechnology) பிரிவு என்றொரு பாடப்பிரிவும் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

மேலே குறிப்பிட்டுள்ளப் பாடப்பிரிவுகள் அனைத்தும் உதாரணத்திற்காக சொல்லப்பட்டவை, மாணவ, மாணவிகள் விரும்பும் பாடத்திட்டங்கள் குறித்து இன்னும் ஆழமான தேடுதல்களை மேற்கொண்டால் விரிவானத் தகவல்கள் கிடைக்கும்.

கல்விக்கட்டணம்

இளநிலைப்பட்டப்படிப்பிற்கு, ஆண்டொன்றிற்கு 12000 யூரோ முதல் 18000 யூரோ வரையில் கூட கல்விக்கட்டணம் இருக்கிறது. இந்த்ய ரூபாய் மதிப்பில், 9.8 லட்சங்கள் தொடங்கி, 14.8 லட்சங்கள் வரையில் ஆண்டுக் கல்விக்கட்டணம் ஆகிறது.

முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு, ஆண்டொன்றிற்கு 12500 யூரோ முதல் 20000 யூரோ வரை ஆகலாம், அதாவது 10 லட்சங்கள் முதல் 16.5 லட்சங்கள் வரை கல்விக்கட்டணத்திற்கு மட்டும் செலவாகலாம்.

ஐரோப்பாவில் உயர்க்கல்வி - 6: டென்மார்க் நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?

ஆங்கிலப்புலமைத் தேர்வு

Cambridge English Tests (C1 levelல் குறைந்தது 180 புள்ளிகள்), TOEFL (குறைந்தது 83 புள்ளிகள்) அல்லது IELTS (குறைந்தது 6.5 புள்ளிகள்) தேர்வுச் சான்றிதழ் அவசியம். சான்றிதழ் காலம் 2 வருடத்திற்கு குறையாமல் இத்தேர்வுகளை எப்பொழுது வேண்டுமானாலும் சோதித்திருக்கலாம்.

https://studies.ku.dk/masters/economics/admission-requirements/language-requirements/

https://studyindenmark.dk/study-options/how-to-apply-2/language-requirements

விண்ணப்பிக்கும் முறை

ஒரு விண்ணப்பத்தில் 4 பாடப்பிரிவிற்கு விருப்பங்கள் இடலாம், 4இல் 1 இறுதிச்செய்யப்படும்.

உதாரணமாக, https://www.dtu.dk/english/education/graduate/admission-and-deadlines/application_procedure/apply/application-fee

ஆர்ஹூஸ் Aarhus பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க,

https://kandidat.au.dk/fileadmin/siab.kandidat.au.dk/optagelse/Accessing_the_online_application_portal.pdf

விண்ணப்பக்கட்டணம், 750 டேனீஷ் குரோனர் 100 யூரோக்கள் -தோராயமாக 8000 ரூபாய்) முதல் 1250 டேனீஷ் குரோனர் (165 யூரோ – தோராயமாக 13500 ரூபாய்) வரை செலவாகிறது.

விண்ணப்பிக்கும் நாட்கள்

இருமுறை விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன, 2022 செப்டெம்பர் 15ற்குள் விண்ணப்பித்தால் ஜனவரி 2023இல் கல்வியியல் சேரலாம். 2023 ஜனவரி 15ற்குள் விண்ணப்பத்தால், ஆகஸ்து 2023இல் கல்விப் பயில பறந்துச்செல்லலாம்.

வாழ்க்கைச் செலவு

மாதாந்திரச் செலவிற்காக தோராயமாக 72000 ரூபாய் வீதம் கல்விக்காலம் முழுமைக்குமான தொகையினை வங்கியில் கையிறுப்பு வைத்திருக்க வேண்டும். அல்லது நுழைவிசைவு (student visa) காலம் ஒவ்வொரு ஆண்டும் நீடிப்பதாயின் அதற்கேற்ற வகையில் கணக்கிட்டு வங்கிக் கணக்கினைக் காட்டலாம்.

மாணவ நுழைவிசைவு (Student Visa)

நுழைவிசைவு விண்ணப்பிக்கத் தேவையானத் தகவல்களை நாமே கீழே உள்ள இணையங்களின் வழியேத் திரட்டி அதற்கேற்றவாறு நமது ஆவணங்களஒ ஒழுங்கு செய்துக்கொள்வது நலம்.

https://visa.vfsglobal.com/ind/en/dnk/apply-visa

https://studyindenmark.dk/live-in-denmark/permits-visas-red-tape

https://www.nyidanmark.dk/de-DE/You-want-to-apply/Study/Higher-education

டென்மார்க் நாட்டு கல்வி ஊக்கத்தொகை

Danish government scholarships for highly qualified non-EU/EEA students என்ற பிரிவின் கீழ் இந்திய மாணவ, மாணவிகளுக்கான ஊக்கத்தொகை வாய்ப்புகள் உள்ளன.

https://studies.ku.dk/masters/tuition-fees--scholarships/scholarships--loans-at-ucph/danish-government-scholarships/

ஐரோப்பாவில் உயர்க்கல்வி - 6: டென்மார்க் நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?
Nils Lund Pedersen

இவைகளோடு, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பாடவாரியாக ஊக்கத்தொகைத் திட்டங்கள் உள்ளன. உதாரணமாக,

டென்மார்க் தொழிற்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் ஊக்கத்தொகை விவரங்கள் அறிய,

https://www.dtu.dk/english/education/graduate/fees-and-funding/external-scholarships

ஆர்ஹூஸ் பல்கலைக்கழக ஊக்கத்தொகைப் பற்றி அறிய,

https://kandidat.au.dk/en/admission/scholarships-and-grants

ஆல்பர்க் பல்கலைக்கழக (Aalborg University) ஊக்கத்தொகைப் பற்றி அறிய,

https://www.internationaloffice.aau.dk/scholarships-grants/

டென்மார்க் நாட்டுப் பல்கலைக்கழகங்கள்

Aarhus University (AU)

Roskilde University (RUC)

University of Copenhagen (UCPH)

University of Southern Denmark (SDU)

IT University of Copenhagen (ITU)

Aalborg University (AAU)

Technical University of Denmark (DTU)

Danish School of Media and Journalism (DMJX)

University College South Denmark

University College of Northern Denmark (UCN)

University College Copenhagen

Aarhus school of Maritime and Technical Engineering

Copenhagen School of Maritime Education and Training

International Business Academy (IBA)

Copenhagen Business Academy

- முனைவர் விஜய் அசோகன், சுவீடன்