Published:Updated:

ஐரோப்பாவில் உயர்கல்வி - 7: பின்லாந்து நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?

ஐரோப்பாவில் உயர்கல்வி - Higher Education in Europe

ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தேவையான அடிப்படைத் தகுதிகளை நீங்கள் அடையாத சூழலிலும்கூட, சில பயனுறு பல்கலைக்கழகங்கள் Pathway studies to Finland program என்ற திட்டத்தின் வழியாக நுழைவுத் தகுதியினை எட்ட வழிவகை செய்கிறார்கள்.

ஐரோப்பாவில் உயர்கல்வி - 7: பின்லாந்து நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?

ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தேவையான அடிப்படைத் தகுதிகளை நீங்கள் அடையாத சூழலிலும்கூட, சில பயனுறு பல்கலைக்கழகங்கள் Pathway studies to Finland program என்ற திட்டத்தின் வழியாக நுழைவுத் தகுதியினை எட்ட வழிவகை செய்கிறார்கள்.

Published:Updated:
ஐரோப்பாவில் உயர்கல்வி - Higher Education in Europe
பின்லாந்து நாட்டில் மொத்தமாக 13 பல்கலைக்கழகங்களும் (Universities) 22 பயனுறு அறிவியல் பல்கலைக்கழகங்களும் (Universities of Applied Sciences) இயங்கிவருகின்றன.

ஏனைய நோர்டிக் நாடுகளை (நோர்வே, சுவீடன், டென்மார்க், ஐஸ்லாந்து) ஒப்பிடும்பொழுது, பின்லாந்து நாட்டில் ஆங்கில வழியில் கற்றுக்கொடுக்கப்படும் இளநிலை அறிவியல்/பொறியியல்/தொழில்நுட்பப் பிரிவு அதிக அளவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பின்லாந்துப் பல்கலைக்கழகங்களில், 3 வருடக் கல்வியியல் 180 ECTS மதிப்பு கொண்ட பாடத்திட்டமும் உண்டு. ஒருவருடக் கல்வி என்பது 1600 கல்வி நேரமும் 60 ECTS கொண்டவையாகவும் வகுக்கப்பட்டுள்ளது. பின்லாந்து பயனுறு பல்கலைக்கழகங்களில், இளநிலைப் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை 3.5 - 4.5 வருட காலக் கல்வி, 210, 240 or 270 ECTS மதிப்பு கொண்டவை. 

ஐரோப்பாவில் உயர்கல்வி - 7: பின்லாந்து நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?

இளநிலைக் கல்வியியல் பாடப்பிரிவில் உள்ள அனைத்து அடிப்படைப் பயிற்சிகளும் வழங்கப்படும், ஒரு சில பாடங்களை ஏனைய பின்லாந்துப் பல்கலைக்கழகங்களிலோ அயல்நாட்டிலோகூடத் தேர்ந்தெடுத்துப் பயிலலாம். இளநிலைக் கல்வியிலேயே நிபுணத்துவப் பிரிவினைத் (area of expertise) தேர்ந்தெடுக்கலாம். தொழிற்பயிற்சிகளுக்கும், தொழிற்சாலைகளில் உள்ளிறுப்புப் பயிற்சிகளுக்கும் (Project internship) ஏற்பாடு செய்துதருவர். செயற்திட்ட ஆய்வறிக்கை (Project thesis) பொறுத்தவரை எடுத்துக்கொண்ட கருப்பொருள் ஆய்வில் கோட்பாட்டு ரீதியிலான புரிதலோடு செய்முறைத் திட்டங்களை நிறைவு செய்திருக்கிறார்களா என ஆய்வு செய்வர். பல்கலைக்கழக முதுநிலைக் கல்வி 120 ECTS கொண்டவையாகவும் 2 ஆண்டுகள் கல்விக் காலமுமாக வரையறுக்கப்பட்டுள்ளது. பயனுறு பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, 60 அல்லது 90 ECTS கொண்ட 1.5 அல்லது 2 வருடக் காலக் கல்வியாக வகுத்துள்ளார்கள்.

1.  பின்லாந்து நாட்டுப் பல்கலைக்கழகங்கள்

பின்லாந்து நாட்டுக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்கள் குறித்தான மேலதிக தகவல்களை இங்கே காணலாம்

 https://www.studyinfinland.fi/universities-list-view 

https://okm.fi/en/education-system 

https://www.oph.fi/en/education-system 

https://education.stateuniversity.com/pages/472/Finland-HIGHER-EDUCATION.html 

2.  பின்லாந்துப் பல்கலைக்கழகத் தரவரிசை 

https://www.timeshighereducation.com/student/where-to-study/study-in-finland 

ஐரோப்பாவில் உயர்கல்வி - 7: பின்லாந்து நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?

3.  பின்லாந்து பட்டப்படிப்பு நுழைவு விதிமுறைகள்

பின்லாந்து நாட்டின் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான பொதுவான விதிமுறைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்பிற்கான குறிப்பிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தும் https://opintopolku.fi/konfo/en/sivu/how-to-apply-for-bachelors-and-masters என்ற இணையத்தில் பெறலாம்.

 ஒரு விண்ணப்பம் வழியாக 6 பாடப்பிரிவிற்கு (வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் உட்பட) ஒரே நேரத்தில் விண்ணப்பிக்கலாம். இளவேனிற் கால (Spring season) விண்ணப்பத்தில், விருப்பத்தேர்வுகளை வரிசைப்படுத்தத் தேவையில்லை. உதாரணமாக, 3 பல்கலைக்கழகங்களில் 3 பாடப்பிரிவில் அனுமதி கிடைத்தால்கூட, அதன் பின், ஏதேனும் ஒன்றினைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், இலையுதிர்கால (Autumn season – September entry) விண்ணப்பத்தில், நீங்கள் விருப்பத்தேர்வினை வரிசைப்படுத்த வேண்டும். அதில் ஒன்றில் மட்டும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும்.

 https://opintopolku.fi/konfo/en/sivu/joint-application-to-higher-education 

ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தேவையான அடிப்படைத் தகுதிகளை நீங்கள் அடையாதச் சூழலிலும்கூட, சில பயனுறு பல்கலைக்கழகங்கள் Pathway studies to Finland program  என்ற திட்டத்தின் வழியாக நுழைவுத் தகுதியினை எட்ட வழிவகை செய்கிறார்கள். அதுவும் குறிப்பாக, நமது நாட்டில் இருந்துகொண்டே ஒரு வருடம் கல்விகற்கும் வசதிகள் உண்டு, முழுமையான ஆங்கில வகுப்பு. அக் கல்வித்திட்டத்தில் இணைந்து, தேவையான அடிப்படைத் தகுதிகளை எட்டிய பின், நாம் விரும்பும் பல்கலைக்கழகத்தில், விரும்பும் பாடத்திட்டத்தில் பயில விண்ணப்பிக்கலாம். அறிவியல், பொறியியல், சமூக அறிவியல், அரசியல், கலைப்பாடங்கள் என அனைத்திற்குமான வாய்ப்புகளை இத்திட்டத்தின் மூலம் பெற முடியும்.

ஐரோப்பாவில் உயர்கல்வி - 7: பின்லாந்து நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?

 இத்திட்டத்தின் கல்வியின் அளவுகோல் படி, ஓராண்டு நிறைவில், 60 ECTS பெற்றிருப்போம். 6,000 யூரோ கல்விக்கட்டணச் செலவாகும். தோராயமாக இந்திய மதிப்பில் 5 லட்ச ரூபாய் செலவாகும். மேலதிக தகவல்களுக்கு https://uaspath.fi/ என்ற இணையத்தைக் காணலாம்.

 https://www.tuas.fi/en/study-tuas/open-studies/path-studies/ 

https://www.tuni.fi/en/study-with-us/open-higher-education-studies/open-uas/open-uas-path-studies 

https://www.laurea.fi/en/degree_programmes/open-university-of-applied-sciences/path-studies/ 

3 அ) இளநிலைப் பட்டப்படிப்புகள்

 பயனுறு பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலைக் கல்விக்கான நுழைவு அடிப்படைத் தகுதிகள் குறித்து அறிய

https://opintopolku.fi/konfo/en/sivu/how-to-apply-for-bachelors-and-masters#bachelors-programmes 

https://opintopolku.fi/konfo/en/sivu/higher-education-degrees#bachelors-degrees 

https://opintopolku.fi/konfo/en/haku/?koulutustyyppi=amk-alempi&order=desc&size=20&sort=score 

 3 ஆ) முதுநிலைப் பட்டப்படிப்புகள்

 பல்கலைக்கழகங்களில் நுழைய இளநிலைப் பட்டப்படிப்பே போதுமானது, பயனுறு பல்கலைக்கழகங்களில் நுழைய இளநிலைக் கல்வியோடு 2 ஆண்டுகள் பணி அனுபவமும் தேவைப்படலாம். தேர்ந்தெடுக்கும் பாடத்திட்டத்தில், தேர்ந்தெடுக்கப்படும் பல்கலைக்கழகத்தில் அதற்குரிய தகவல்களை முறையாகத் தெரிந்து விண்ணப்பிக்கவும். பயனுறு பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதுநிலைக் கல்விக்கான நுழைவு அடிப்படைத் தகுதிகள் குறித்து அறிய

 https://opintopolku.fi/konfo/en/sivu/higher-education-degrees#masters-degrees 

 முதுநிலைப் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை, பன்னாட்டுக் கூட்டுப் பட்டப்படிப்பு (International Joint Degree Programme) வழங்கப்படுகிறது. இதில், ஒவ்வொரு பின்லாந்துப் பல்கலைக்கழகமும் இச்சிறப்புக் கல்வித்திட்டத்தின் கீழான பாடப்பரிவில் பன்னாட்டளவில் இன்னபிற பல்கலைக்கழகங்களோடு கூட்டாக இணைந்து பட்டப்படிப்பை வழங்குகிறது. ஒவ்வொரு பருவத்தேர்வினையும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் கற்கலாம். 

 https://www.aalto.fi/en/admission-services/international-joint-degree-programmes 

https://www.helsinki.fi/en/admissions-and-education/apply-bachelors-and-masters-programmes/joint-degree-programmes 

https://www.utu.fi/en/university/turku-school-of-economics/studying/international-joint-degrees 

https://www.uef.fi/en/international-masters-degree-programmes 

 அதேபோல, நார்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இணைந்து Nordic Master Programmes என்னும் சிறப்புப் பட்டப்படிப்பையும் வழங்குகிறார்கள்:

Nordic Master in Cold Climate Engineering, Nordic Master in Environmental Engineering, Nordic Master in Innovative Sustainable Energy Engineering, Nordic Master in Maritime Engineering, Nordic Master in Polymer Technology

 http://www.nordicmaster.org/programmes 

4. கல்விக்கட்டணம்

இளநிலைக் கல்விக்கான கட்டணம் 4,000-12,000 யூரோ (தோராயமாக 3.5 லட்சம் - 10 லட்சம் இந்திய ரூபாய்) வரையிலும் முதுநிலைக் கல்விக்கான கட்டணம் 15,000 யூரோ (தோராயமாக 12.5 லட்ச இந்திய ரூபாய்) வரையில் செலவாகலாம். https://www.studyinfinland.fi/admissions/fees-and-costs

5.  ஆங்கிலப்புலமைத் தேர்வு  

 Cambridge test, IELTS, TOEFL, PTE Academic, European Baccalaureate, International Baccalaureate, நார்டிக் நாடுகளில் பள்ளிக் கல்வியோ பல்கலைக்கழகக் கல்வியோ நிறைவு செய்திருத்தல் என பலவகைச் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்கிறார்கள்.

 https://www.helsinki.fi/en/admissions-and-education/apply-bachelors-and-masters-programmes/apply-international-masters-programmes/proving-your-english-language-skills 

https://www.uef.fi/en/language-requirements-for-masters-degree-programmes 

 6. விண்ணப்பிக்கும் முறை 

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் https://opintopolku.fi/konfo/en/sivu/finnish-application-system என்ற முகவரியில் ஒன்றாக விண்ணப்பங்களை இடலாம். 

பின்லாந்தைப் பொறுத்தவரை, எந்தப் பல்கலைக்கழகத்திலும் விண்ணப்பக் கட்டணம் இல்லை. முற்றிலும் இலவசம்!

7.                விண்ணப்பிக்கும் நாள்கள்

2023 ஆம் ஆண்டு இலையுதிர் கால (Autumn season) கல்விச் சேர்க்கைக்கு ஜனவரி 2023இல் விண்ணப்பித்திருக்க வேண்டும். ஜனவரியில் தொடங்கும் பட்டப்படிப்பிற்கு செப்டம்பரில் விண்ணப்பிக்க வேண்டும், ஆனால், ஒப்பீட்டளவில், ஆங்கிலவழிப் பாடப்பிரிவு மிகக் குறைவாக இருக்கும்.

8.                வாழ்க்கைச் செலவு

மாதச் செலவுக்கான தொகையாக 700-900 யூரோ (தோராயமாக 57000 -75000 இந்திய ரூபாய்) எனக் கணக்கிட்டுக் கொள்ளலாம். பின்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் கணக்கின் படி, மாணவ, மாணவியர் முதலாம் ஆண்டுக் கல்விக்கான நுழைவிசைவு விண்ணப்பிக்கும் பொழுது, வங்கிக் கணக்கில் 6,720 யூரோ (தோராயமாக 5.5 லட்சம் இந்திய ரூபாய்) இருப்பதற்கான ஆதாரத்தினைக் காட்ட வேண்டும். 

 https://migri.fi/en/income-requirement-for-students 

9.                மாணவ நுழைவிசைவு (Student Visa) 

https://migri.fi/en/residence-permit-application-for-studies 

ஐரோப்பாவில் உயர்கல்வி - 7: பின்லாந்து நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?

10.            பின்லாந்து நாட்டு கல்வி ஊக்கத்தொகை

ஏனைய நாடுகளைப் போலவே பின்லாந்திலும் ஊக்கத்தொகை இந்திய மாணவ, மாணவியர்கள் உட்பட பன்னாட்டவர்களுக்கும் பாரபட்சமின்றி வழங்கப்படுகிறது.

கல்விக்கட்டணத்தில் 10% முதல் 100% வரையிலான ஊக்கத்தொகைக்கு வாய்ப்புள்ளது. 2 ஆண்டுகளுக்குக் கல்விக்கட்டணம் வழங்கப்படும் என்றாலும், முதலாம் ஆண்டு கல்வியை நிறைவு செய்தபின் மாணவ, மாணவியரின் கல்வித்தரம் சோதிக்கப்பட்டு அதன்பின் இரண்டாம் ஆண்டு ஊக்கத்தொகை தொடரும்.

https://www.helsinki.fi/en/admissions-and-education/apply-bachelors-and-masters-programmes/tuition-fees-and-scholarship-programme 

இவற்றோடு, ஏற்கெனவே ஏனைய நாடுகளுக்கும் குறிப்பிட்டது போல, ஒவ்வொரு பல்கலைக்கழகமும் சிறப்பு ஊக்கத்தொகைகளையும் வழங்குகிறது.

11.             பின்லாந்து நாட்டுப் பல்கலைக்கழகங்கள்

·        Aalto University

·        Abo Akademi University

·        Arcada University of Applied Sciences

·        Centria University of Applied Sciences

·        Diaconia University of Applied Sciences

·        Haaga-helia University of Applied Sciences

·        Hanken School of economics

·        Humak University of Applied Sciences

·        Hame University of Applied Sciences

·        Jamk University of Applied Sciences

·        Kajaani University of Applied Sciences

·        Karelia University of Applied Sciences

·        Lab University of Applied Sciences

·        Lut University

·        Lapland University of Applied Sciences

·        Laurea University of Applied Sciences

·        Metropolia University of Applied Sciences

·        Novia University of Applied Sciences

·        Oulu University of Applied Sciences

·        Satakunta University of Applied Sciences

·        Savonia University of Applied Sciences

·        Seinajoki University of Applied Sciences

·        South-Eastern Finland University of Applied Sciences

·        TAMK University of Applied Sciences

·        Tampere University

·        Turku University of Applied Sciences

·        University of Eastern Finland

·        University of Helsinki

·        University of Jyvaskyla

·        University of Lapland

·        University of Oulu

·        University of Turku

·        University of Vaasa

·        University of The Arts Helsinki

·        Vaasa University of Applied Sciences

- முனைவர் விஜய் அசோகன், சுவீடன்