Published:Updated:

ஐரோப்பாவில் உயர்கல்வி - 5: நெதர்லாந்து நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள்|விண்ணப்பிப்பது எப்படி?

ஐரோப்பாவில் உயர்கல்வி

இளநிலைக் கல்வியைப் பொறுத்தவரை, பல்கலைக்கழகங்கள் வரையறுத்திருக்கும் தகுதியினை நாம் எட்டவில்லையென்றாலும், ஒரு வருட அடிப்படைச் சான்றிதழ் கல்வியை வழங்குகிறார்கள்.

ஐரோப்பாவில் உயர்கல்வி - 5: நெதர்லாந்து நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள்|விண்ணப்பிப்பது எப்படி?

இளநிலைக் கல்வியைப் பொறுத்தவரை, பல்கலைக்கழகங்கள் வரையறுத்திருக்கும் தகுதியினை நாம் எட்டவில்லையென்றாலும், ஒரு வருட அடிப்படைச் சான்றிதழ் கல்வியை வழங்குகிறார்கள்.

Published:Updated:
ஐரோப்பாவில் உயர்கல்வி

நெதெர்லாந்து நாட்டில் இளநிலை அறிவியல்/தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் 3 ஆண்டுகள், பயனுறு அறிவியல் (Applied Sciences) பட்டப்படிப்பிற்கு 4 ஆண்டுகள், சில பட்டப்படிப்புகள் இளநிலை+முதுநிலை என 4 -6 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. 

  1. நெதெர்லாந்து நாட்டுப் பல்கலைக்கழகங்கள்: 

நெதர்லாந்து நாட்டுப் பல்கலைக்கழகங்கள் பற்றி அறிய கீழே உள்ள இணையதளம் செல்க:

https://www.topuniversities.com/where-to-study/europe/netherlands/guide 

https://www.alluniversity.info/netherlands/ 

பல்கலைக்கழகங்கள்
பல்கலைக்கழகங்கள்

2. நெதெர்லாந்து பல்கலைக்கழகத் தரவரிசை 

நெதெர்லாந்து நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தர வரிசை பற்றி அறிய:

https://www.timeshighereducation.com/student/best-universities/best-universities-netherlands 

https://www.universityrankings.ch/results&ranking=QS&region=World&year=2021&q=Netherlands

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3. பட்டப்படிப்பு நுழைவு விதிமுறைகள்

இளநிலை மற்றும் முதுநிலைப்பட்டப்படிப்புகளுக்கு அந்தந்தப் பல்கலைக்கழகங்கள், அந்தந்தப் படிப்பிற்குத் தேவையான தகுதியினை பல்கலைக்கழக, பாடத்திட்ட இணையப்பக்கங்களில் ஒவ்வொரு நாட்டினருக்கும் அடிப்படையான சில கேள்விகள் கேட்டு, அதற்கான விடையை அளிக்கிறார்கள். அதன் மூலம், நாம் என்னென்னச் சான்றிதழ்கள் நமக்குத் தேவைப்படும் என்ற விவரங்கள் அனைத்தும் கிடைக்கின்றன.

3- அ) இளநிலைப் பட்டப்படிப்புகள்:

குறிப்பிட்டப் பல்கலைக்கழகங்களின் சிலப் பட்டப்படிப்புகளைத் தவிர, இந்திய மாணவ, மாணவியர்களுக்கு, இளநிலைப் பட்டப்படிப்புப் படிபதற்கான நெதர்லாந்து பல்கலைக்கழகங்களுக்குப் பொதுவான தகுதியாக, மாநிலப் பாடத்திட்டத்தில் அல்லது சி.பி.எஸ்.சி அல்லது சி.ஐ.எஸ்.சி.ஈ பாடத்திட்டத்தில் +2ஆம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.

உதாரணமாக, https://www.tudelft.nl/en/education/admission-and-application/bsc-international-diploma/admission-requirements/country-specific-requirements

ஐரோப்பாவில் உயர்கல்வி - 5: நெதர்லாந்து நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள்|விண்ணப்பிப்பது எப்படி?

இளநிலைக் கல்வியைப் பொறுத்தவரை, பல்கலைக்கழகங்கள் வரையறுத்திருக்கும் தகுதியினை நாம் எட்டவில்லையென்றாலும், ஒரு வருட அடிப்படைச் சான்றிதழ் கல்வியை வழங்குகிறார்கள். அதனை நிறைவுச் செய்துவிட்டு, இளநிலைப் பட்டப்படிப்பினுள் சேரலாம்.

உதாரணமாக, https://www.utwente.nl/en/education/bachelor/admission/foundation-year/

3- ஆ) முதுநிலைப் பட்டப்படிப்புகள்:

நெதெர்லாந்துப் பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் பட்டப்படிப்பினை தொடர, இளநிலைக் கல்வியில் குறைந்தது 75% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என சில பல்கலைக்கழகங்கள் நிபந்தனை விதித்திருக்கின்றன.

உதாரணமாக, https://www.tudelft.nl/en/education/admission-and-application/msc-international-diploma/admission-requirements

சில பல்கலைக்கழகங்களில், European Credit Transfer System (ECTS) என்ற அடிப்படையில், முதுநிலைப் பட்டப்படிப்பில் எந்தத்துறையினைத் தேர்வு செய்கிறோமோ, அப்பாடத்தில், இளநிலைக் கல்வி EC தொகுப்பு 90 வைத்திருக்க வேண்டும். 1 EC என்பது, அப்பாடப்பிரிவின் விரிவுரை, ஆய்வக நேரம், தேர்வு நேரம் ஆகியவைகளின் கூட்டு 28 மணி நேரம் ஆக இருத்தல் வேண்டும்.

உதாரணமாக,

https://www.universiteitleiden.nl/en/education/study-programmes/master/computer-science/artificial-intelligence/admission-and-application/admission-requirements#entry-requirements-for-students-from-a-foreign-research-university

ஐரோப்பாவில் உயர்கல்வி - 5: நெதர்லாந்து நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள்|விண்ணப்பிப்பது எப்படி?

ஒருவேளை, அத்தகுதியினை நாம் பெறாதுப் போனாலும், பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்டப் பாடப்பிரிவில் விரிவுரை/ஆய்வகச் சோதனை/ தேர்வு உள்ளிட்டவைகளை அடக்கும் கல்வியை வழங்குகிறார்கள். அதனை நிறைவுச் செய்துவிட்டு, நெதெர்லாந்துப் பல்கலைக்கழகங்களில், முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

உதாரணமாக, முதுநிலை செயற்கை அறிதிறன் (artificial intelligence) பட்டப்படிப்பில் நுழைய முறையான தகுதி இல்லையேல், கீழே கொடுக்கப்பட்டுள்ளப் பட்டியலில் உள்ள பாடத்திட்டத்தில் மொத்தமாக 28 மணி நேரங்கள் வரும்படியாகத் தேர்வுச் செய்து, 90 EC பெறலாம்.

https://www.universiteitleiden.nl/binaries/content/assets/science/cm/masterwerving/admission_leiden-bsc-courses-in-cs.pdf

4. கல்விக்கட்டணம்:

நெதெர்லாந்து நாட்டுப் பல்கலைக்கழகங்களில், வருடாந்திர கல்விக்கட்டணம் இளநிலை கல்விக்கு (Bachelor’s programmes) 4,75,000 முதல் 12,50,000 ரூபாய் வரை ஆகலாம். முதுநிலைக் கல்விக்கு (Master’s Programmes) 6,25,000 முதல் 20,00,000 ரூபாய் வரை ஆகலாம்.

5. டச்சு மொழி மற்றும் ஆங்கிலப்புலமைத் தேர்வு

பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில், IELTS, TOEFL, மற்றும் Cambridge சோதனை வழியே ஆங்கிலப் புலமைக்கான தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

https://www.tue.nl/en/education/become-a-tue-student/admission-and-enrollment/language-proficiency-requirements/

https://www.utwente.nl/en/education/bachelor/admission/language-requirements/#english-language-requirements

டச்சு மொழிப்பிரிவில் பட்டப்படிப்புப் பயில, டச்சு மொழியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பள்ளிக்கல்வியில் டச்சு மொழிப் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றிருந்தால், அதனையும் கணக்கில் கொள்கிறார்கள், அல்லது டச்சு மொழிக் கல்வி நிறுவனங்கள் வழியேவும் மொழிப்புலமைச் சான்றிதழைப் பெறலாம்.

6. விண்ணப்பிக்கும் முறை

https://www.studielink.nl/ என்ற இணையத்தில் பதிவு செய்து, பல்கலைக்கழகம், பாடப்பிரிவு ஆகியவைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் கேட்கப்பட்டக் கேள்விகளுக்கு விடையும், கேட்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டணமாக 100 யூரோ, தோராயமாக 8500 ரூபாய் செலுத்த வேண்டும்.

7. விண்ணப்பிக்கும் நாட்கள்:

பொதுவான நடைமுறையாக, அக்டோபரில் தொடங்கி மே மாதம் வரையில் நெதெர்லாந்துப் பல்கலைக்கழகங்களுக்கான விண்ணபங்கள் இடலாம்.

ஐரோப்பாவில் உயர்கல்வி - 5: நெதர்லாந்து நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள்|விண்ணப்பிப்பது எப்படி?

8. வாழ்க்கைச் செலவு:

வீட்டுச் செலவு உள்ளிட்ட வாழ்க்கைச் செலவிற்காக, கல்விக் கற்கும் ஆண்டுகளுக்கு தேவையான நிதியினை நம் வங்கிக் கணக்கில் செலுத்தி வைத்திருக்க வேண்டும். மாதாந்திரச் செலவாக 935 யூரோ (தோராயமாக 77000 ரூபாய்), வருடாந்திரச் செலவாக 11220 யூரோ (தோராயமாக 9,20,000 ரூபாய்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

https://ind.nl/en/income-requirements-study

https://www.uu.nl/en/education/welcome-to-utrecht/prepare-your-stay/entry-visa-residence-permit/financial-means

https://www.amsterdamuas.com/practical-matters/general/auas/student-affairs/immigration/proof-of-financial-means/proof-of-financial-means.html

https://www.wittenborg.eu/financial-proof-visa.htm

9. மாணவ நுழைவிசைவு (Student Visa)

இந்திய மாணவ, மாணவிகள் நெதெர்லாந்து நாட்டிற்கான மாணவ நுழைவிசைவு விண்ணப்பிக்க, சில அடிப்படை ஆவணங்கள் தயாரித்து வைத்திருத்தல் வேண்டும், கீழே உள்ள இணைய முகவரியில் விளக்கங்கள் உள்ளன.

https://ind.nl/en/forms/3087.pdf

https://visaguide.world/europe/netherlands-visa/mvv/student/

https://studylink.com/articles/netherlands-student-visa-guide/

10. நெதெர்லாந்து நாட்டு கல்வி ஊக்கத்தொகை

நெதர்லாந்து நாட்டின் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பன்னாட்டு மாணவ, மாணவிகளுக்கு என சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்பின்பொழுது ஆண்டிற்கு குறைந்தது 3 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. கல்வி, பல்கலைக்கழகம் உள்ளிட்டவைகள் பொறுத்து தொகை மாறுபடலாம். வருடந்தோறும் பல நூறு மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகள், சீனா, தென் அமெரிக்க நாடுகளுக்கெனவும் ஐரோப்பிய குடியுரிமை உள்ளவர்களுக்கு எனவும் தனித்தனியே ஊக்கத்தொகை திட்டங்கள் செயல்படுவதால், பன்னாட்டளவில் இந்திய ஒன்றியத்தில் இருந்து செல்பவர்களுக்கு ஊக்கத் தொகை போட்டி குறைவாக இருக்கும் என நம்புகிறேன்.

Holland Scholarships ஹாலாந்து ஊக்கத்தொகை, ஐரோப்பியர் அல்லாத மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. முதல் வருடப் பட்டப்படிப்பில் 5000 யூரோ வரை கிடைக்கும், தோராயமாக 4 லட்சம் ரூபாய்.

https://www.studyinholland.nl/sites/default/files/2020-06/holland-scholarship.pdf

Orange-Tulip Scholarships திட்டத்தின் கீழ் இந்தியா உட்பட பல்வேறு குறிப்பிட்ட நாடுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

https://www.nuffic.nl/en/subjects/scholarships/orange-tulip-scholarship

இவைகளைப் போன்ற பொதுவான ஊக்கத்தொகைத் திட்டங்களோடு சேர்ந்து, பல்வேறுப் பல்கலைக்கழகங்களும் ஊக்கத்தொகையினை வழங்குகிறது.

ஐரோப்பாவில் உயர்கல்வி - 5: நெதர்லாந்து நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள்|விண்ணப்பிப்பது எப்படி?

11. நெதெர்லாந்து நாட்டுப் பல்கலைக்கழகங்கள்

- Delft University of Technology

- University of Amsterdam

- Wageningen University and Research Centre

- Erasmus University Rotterdam

- Leiden University

- University of Groningen

- Utrecht University

- Maastricht University

- Radboud University Nijmegen

- University of Twente

- VU University Amsterdam

- Eindhoven University of Technology ( Technische Universiteit Eindhoven)

- Tilburg University

- முனைவர் விஜய் அசோகன், சுவீடன்