Published:Updated:

Scholarship Guide: SC- ST மற்றும் ADW மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?|Video

Scholarship Guide | SC/ST Scholarship

பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளுக்கும் ஆண்டிற்கு ரூ.7000 முதல் ரூ.10000 வரை போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Scholarship Guide: SC- ST மற்றும் ADW மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?|Video

பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளுக்கும் ஆண்டிற்கு ரூ.7000 முதல் ரூ.10000 வரை போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Published:Updated:
Scholarship Guide | SC/ST Scholarship
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வருடத்திற்கு ரூ.500 முதல் ரூ.8000 வரை உதவித்தொகை பெறலாம்.

உதவித்தொகை பெறும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000-க்குள் இருக்க வேண்டும். விடுதியில் தங்கிப்பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இந்த உதவித்தொகையில் சிறப்பம்சம் உள்ளது. மாணவர்களுக்கு கல்வி பயிலும் வளாகம் அவர்கள் வீட்டிலிருந்து 5 கி. மீ தொலைவிற்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு 5 கி. மீ தொலைவிற்கு கீழ் இருந்தாலே போதுமானது. ப்ரீ மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் என கல்வி உதவித்தொகைத் திட்டம் இரண்டு வகைப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கானது ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை. வகுப்புவாரியாக உதவித்தொகை வேறுபடும். பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளுக்கும் ஆண்டிற்கு ரூ.7000 முதல் ரூ.10000 வரை போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கத் தேவையான சான்றிதழ்கள்:

சாதி சான்றிதழ்

வருமான சான்றிதழ்

விண்ணப்பதாரரின் புகைப்படம்

விண்ணப்பதாரரின் கையொப்பம்

கல்வித் தகுதி சான்று

ஏதேனும் ஒரு அடையாள அட்டை

கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் escholarship.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன. இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின்னர், மேற்கூறிய சான்றிதழ்களின் நகல்களை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல வாரியத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இத்துடன் மாணவ மாணவிகளின் வங்கிக் கணக்கு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் உரிய கல்வி உதவித்தொகை மாணவ மாணவிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.