Published:Updated:

சேலம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் - கொதித்தெழுந்த உறவினர்கள்!

சேலம் அருகே வேம்படிதாளம் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் படித்த மாணவிக்கு வகுப்பு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோரும், ஊர்க்காரர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்!

அரசு பள்ளி
அரசு பள்ளி ( க. தனசேகரன் )

சேலம் மாவட்டம் வேம்படிதாளத்தில் அரசினர் மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு வேம்படிதாளம், மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, சீரகாப்பாடி போன்ற பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகிறார்கள்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இப்பள்ளியில் கடந்த ஆண்டு ப்ளஸ் டூ படித்த வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவிக்கு அப்பள்ளியில் கணித ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

அந்த மாணவி பள்ளியில் பயின்று வந்ததால் ஆசிரியர் செய்யும் பாலியல் தொல்லைகளை பயந்துகொண்டு வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. தற்போது அப்பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் கடந்த ஆண்டு கணித ஆசிரியரால் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லையைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்ட அப்பள்ளியில் பயிலும் மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறி இருக்கிறார்கள்.

அரசு பள்ளியில் பொதுமக்கள் கூட்டம்
அரசு பள்ளியில் பொதுமக்கள் கூட்டம்
க. தனசேகரன்

அதனால் கோபமடைந்த வேம்படிதாளம், மகுடஞ்சாவடியைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஊரே திரண்டு பள்ளிக்கு வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியரை காவல்துறையில் வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதையறிந்த சேலம் டவுன் போலீஸார் பள்ளிக்கு விரைந்து சென்று பள்ளிக்கூடத்திற்குப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டதோடு பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் ஆசிரியர் தண்டிக்கப்படுவார் என்று கூறினார்கள். அதையடுத்து பெற்றோர்களும், ஊர்க்காரர்களும் கலைந்து சென்றார்கள்.