Published:Updated:

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் 1,033 பேர் போட்டியிட்ட கதை தெரியுமா? ஹலோ... ப்ளூடிக் நண்பா!

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் 1,033 பேர் போட்டியிட்ட கதை தெரியுமா? ஹலோ... ப்ளூடிக் நண்பா!
தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் 1,033 பேர் போட்டியிட்ட கதை தெரியுமா? ஹலோ... ப்ளூடிக் நண்பா!

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் 1,033 பேர் போட்டியிட்ட கதை தெரியுமா? ஹலோ... ப்ளூடிக் நண்பா!

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் 1,033 பேர் போட்டியிட்ட கதை தெரியுமா? ஹலோ... ப்ளூடிக் நண்பா!

முந்தைய பாகங்கள்

இந்தியப் பிரதமரும், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற‌ப் பொதுத் தேர்தலில் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில், அவரை எதிர்த்து தமிழகத்திலிருந்து 111 விவசாயிகள் போட்டியிட இருப்பதாக, விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் 1,033 பேர் போட்டியிட்ட கதை தெரியுமா? ஹலோ... ப்ளூடிக் நண்பா!

பல்வேறு விவசாயம் சார்ந்த கோரிக்கைகளுக்காக டெல்லியில் 100 நாள் தொடர்ந்து பல விநோதப் போராட்டங்கள் செய்தும், விவசாயிகள் சங்கங்கள் திரண்டு பேரணி நடத்தியும், மத்திய அரசு அவற்றைக் கண்டுகொள்ளாததால் இந்த முடிவு. இது பல காலமாய் வழக்கத்திலிருக்கும் போராட்ட முறைதான். ஊடகங்களின் கவன ஈர்ப்பைப் பெற்று அதன்வழி மக்களிடம் அரசிடம் தம் பிரச்னைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் உத்தி.

இப்படிப் போட்டியிடுவோர் பொதுவாய் டெப்பாசிட் இழப்பது வழக்கம்.

1989-ம் ஆண்டில் ஹரியானாவின் பிவானி லோக்சபா தொகுதியில்தான் முதலில் இப்படி அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் நின்றார்கள். 122 பேர். அதில் 120 பேர் டெபாசிட் இழந்தனர். பிறகு 1991-ம் ஆண்டில் கிழக்கு டெல்லி லோக்சபா தொகுதியில் 105 பேர் நின்று, அதில் 102 பேருக்கு டெபாசிட் போனது. 1996-ம் ஆண்டில்தான் இந்த உத்தி உச்சம்பெற்றது.

அதே கிழக்கு டெல்லியில் 122 பேர் நின்றனர் (2 பேர் மட்டுமே டெபாசிட் வாங்கினர்). கர்நாடகாவின் பெலகாம் லோக்சபா தொகுதியில் 456 பேர் நின்றனர். அங்கு இருக்கும் மராத்தி பேசும் மக்களின் கோரிக்கை, அந்தப் பகுதியை மகாராஷ்டிரத்துடன் இணைக்க வேண்டும் என்பது. அதில் 454 பேர் டெபாசிட் இழந்தனர். ஆந்திரப்பிரதேசத்தின் நல்கொண்டா லோக்சபா தொகுதியில் (தற்போதைய தெலங்கானா) குடிநீரில் அதிகம் ஃப்ளூரைட் கலக்கப்படுவதை எதிர்த்து 480 பேர் தேர்தல் களம்கண்டனர். 477 பேர் டெபாசிட் பெற முடியவில்லை. இதெல்லாம் மக்களவைத் தொகுதிகளின் கதை.

இவற்றைத் தூக்கிச் சாப்பிடுமளவுக்கு ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் நடந்தது. அது, நமது தமிழகத்தில். அதுவும் எங்கள் மாவட்டத்தில். என் பள்ளிக்கு அருகே ஓர் ஊரில்.

மொடக்குறிச்சி சட்டசபைத் தொகுதியில் 1996-ம் ஆண்டு தேர்தலில் 1,033 பேர் வேட்பாளர்களாக நின்றனர். அதில் 1,016 பேர் விவசாயிகள். கொங்கு வட்டாரத்தில் நிலவிய விவசாயப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அழுத்தம் தரும் முகமாக இதைச் செய்தனர். தேர்தல் ஆணையம் திணறியது. மற்ற தொகுதிகளில் தேர்தல் நடக்க, இங்கு மட்டும் ஒரு மாதத்துக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஆயிரம் சின்னங்கள் தேடுவதே சவால் ஆகிப்போனது. வாக்குச்சீட்டு அல்லாமல் 50 பக்கங்கள்கொண்ட வாக்குப் புத்தகம் அச்சடித்தனர். வாக்குப்பெட்டி கிடையாது. வாக்கு குத்திய பிறகு புத்தகத்தை உரிய மேசை மீது வைத்துவிட்டுப் போய்விட வேண்டும். சின்னம் தேடி வாக்களிப்பது சிரமம் என்பதால், கூடுதலாய் இரண்டு மணி நேரம் தேர்தல் நேரத்தை நீட்டித்தனர். 1.18 லட்சம் வாக்குகள் பதிவானது. பழைய பேப்பர்போல் அவற்றை அடுக்கிக் கட்டி எடுத்து அறையில் சீல் வைத்தனர். வாக்குகள் எண்ணுவதிலும் தாமதம்.

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் 1,033 பேர் போட்டியிட்ட கதை தெரியுமா? ஹலோ... ப்ளூடிக் நண்பா!

தி.மு.க-வின் சுப்புலட்சுமி ஜெகதீசன், 64,436 வாக்குகள் பெற்று, அ.தி.மு.க-வின் ஆர்.என் கிட்டுசாமியை வீழ்த்தினார். 1,030 பேர் டெபாசிட் இழந்தனர். அதில் 88 பேருக்கு ஓர் ஓட்டுகூட விழவில்லை; 158 பேருக்கு ஓர் ஓட்டுதான் விழுந்திருந்தது. ஜெயித்த தி.மு.க-வின் சின்னமான உதயசூரியன், புத்தகத்தின் 25-ம் பக்கத்தில் அச்சாகியிருந்தது!

1996-க்குப் பிறகே தேர்தல் ஆணையம் விழித்துக்கொண்டு டெபாசிட் தொகையை உயர்த்தியது. அதுவரை லோக்சபா தொகுதியில் நிற்க‌ ரூ.500 (தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினருக்கு ரூ.250), சட்டசபைத் தொகுதிக்கு ரூ.250 (தா/ப ரூ.125) என்றிருந்தது. லோக்சபா தொகுதிக்கு ரூ.25,000 (தா/ப ரூ.12,500), சட்டசபைத் தொகுதிக்கு ரூ.10,000 (தா/ப ரூ.5,000) என்று ஒரேயடியாக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு கடந்த இருபது ஆண்டுகளுக்கும்மேலாக இப்படி நிறையபேர் ஒரே தொகுதியில் நிற்பது நடக்கவில்லை. இப்போது வாரணாசியில் மீண்டும் அதைச் செய்யப்போகிறார்கள்.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர் பெயர்கள் மட்டுமே சேர்க்க முடியும். அதிகபட்சம் நான்கு இயந்திரங்களை இந்த மாதிரி இணைத்துப் பயன்படுத்த முடியும். ஆக, அதிகபட்சம் 64 வேட்பாளர்களைத்தான் இன்றைய ஓட்டிங் மெஷின் முறை தாங்கும். அதற்குமேல் எனில், பழைய வாக்குச்சீட்டு முறைதான். ஆக, 111 பேர் நின்றால் (அத்தனை வேட்புமனுக்களும் ஆணையத்தால் ஏற்கப்பட்டால்) வாரணாசியில் மட்டும் வாக்குச்சீட்டு முறைதான்!

1996-ம் ஆண்டில் கவனம் ஈர்த்த எந்தப் பிரச்னையும் இன்னும் தீரவில்லை என்பது தனிக்கதை!

***

`The Bra’ என்பது சென்ற ஆண்டு வெளியான ஜெர்மானியப் படம். வீட் ஹெல்மர் என்பவர் இயக்கி, மிக்கி மேனோஜ்லோவிக் நடித்திருக்கும் படம். ந்யூர்லன் என்கிற டிரெய்ன் டிரைவர், தன் பணிக்காலத்தின் இறுதி நாளில் பாக்கு (Baku) என்ற ஊரைக் கடக்கும்போது ரயில் இன்ஜினின் பக்கவாட்டுக் கம்பி ஒன்றில் கொடியில் காயப் போடப்பட்டிருந்த நீல நிற பிரேஸியர் ஒன்று சிக்கிக்கொண்டு உடன் வந்துவிடுகிறது. தனிக்கட்டையான ந்யூர்லன், பணி ஓய்வுக்குப் பிறகு தன்னை ஆட்கொள்ளவிருக்கும் தனிமையை எதிர்கொள்ள, ஒரு தேடலில் இறங்கத் தீர்மானிக்கிறார். தன் இடத்தைவிடுத்து பாக்கு கிராமத்துக்குச் சென்று ஓர் அறை எடுத்துக்கொள்கிறார். அந்த பிரா யாருடையது எனக் கண்டறிவதுதான் அவரது நோக்கம். இருப்புப்பாதையின் அருகே இருக்கும் வீடுகளின் கதவுகளைத் தட்டத் தொடங்குகிறார். இதுதான் படத்தின் கதை.

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் 1,033 பேர் போட்டியிட்ட கதை தெரியுமா? ஹலோ... ப்ளூடிக் நண்பா!

சொல்ல வந்தது, அதுவல்ல... அந்தப் படத்தை நான் பார்க்கப் போன கதையைத்தான்.

`The Bra’ படம் முதன்முதலில் டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் கடந்த அக்டோபரில் திரையிடப்பட்டது. பிறகு பல திரைப்பட விழாக்களில் அரங்கேறியது. கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் காட்டப்பட்டு, படத்தின் இயக்குநரும் வந்து பார்வையாளர்களுடன் உரையாடினார். தொடர்ந்து கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவிலும் காட்டுவதாக அறிவித்தார்கள். ஊரே ஆர்வமாய் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்த ஜப்பானியத் திரைப்படமான `Shoplifters'ஐக்கூட மதிக்காமல், இதைப் பார்த்தேதீருவது எனத் தீர்மானித்தேன். துரதிர்ஷ்டவசமாய்ச் சேதியறிய வந்த‌ காலத்தில் விழாவுக்கான பாஸ் விற்பனை முடிந்துபோயிருந்தது.

பிறகு நண்பரும் தமிழினி இணைய இதழின் ஆசிரியருமான‌ கோகுல்பிரசாத் தயவில் இந்தப் படத்தை மட்டும் பார்க்க, அவரது பாஸை வாங்கிக்கொண்டேன். (அவர் ஏற்கெனவே கோவாவில் படத்தைப் பார்த்துவிட்டு `சுமார்' என்று எச்சரித்திருந்தார். இருந்தும் நான் பொருட்படுத்தவில்லை.) என் வீட்டிலிருந்து விழா நடக்கும் இடம் சுமார் 15 கி.மீ தூரம். இல்லை, 2 மணி நேர‌ம். (பெங்களூருவில் தூரத்தை யாரும் கி.மீ-யில் அளப்பதில்லை; நிமிடங்களில்தான்.) படமே 1.5 மணி நேரம்தான் என்பது வேறு விஷயம்.

உள்ளே போனால், நெடிய வரிசை ஒன்று காத்திருந்தது. `The Bra’ படத்துக்குத்தான். வரிசை நெடுநேரம் நகரவேயில்லை என்பதால் சந்தேகம் எழுந்து விசாரித்தால், ஏற்கெனவே ஹவுஸ்ஃபுல். அதுபோக இந்த வரிசை எனப் புரிந்தது. விழாவில் ஒரே சமயத்தில் ஆறேழு படங்கள் திரையிடப்படும். மற்றவற்றில் காற்று வாங்க, இதற்கு `மன்னன்’ படம்போல் அடிதடி. நின்றுகொண்டு பார்த்துக்கொள்கிறோம் என்றவர்களையும் அனுமதிக்கவில்லை.

அரை மணி நேரம் காத்திருந்த பிறகு, அனுமதி கிடைக்காமல் கூட்டம் கலைந்தது. பாஸைத் திருப்பி அளித்துவிட்டு நன்றி சொல்லி மீண்டும் இரண்டு மணி நேரமெடுத்து சோகத்துடன் வீடு திரும்பினேன். ஆக, நானும் படத்தை இன்னும் பார்க்கவில்லை.

அந்தப் படத்துக்கு ஏன் எல்லோருக்கும் அத்தனை ஆர்வம் என யோசியுங்கள்!

***

`கொல்லென்று எப்படிச் சிரிக்க முடியும்; கொல்லென்று சொல்லத்தான் முடியும்' என சமீபத்தில் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார் பா. ராகவன். பஞ்சபாண்டவர் மனைவியான‌ திரௌபதி இருக்கிறாளே! அவள் கொல்லென்று சிரித்தாளே! சக்தி, லட்சுமி, சரஸ்வதி, ரம்பை, ஊர்வசி, மேனகை, சீதை, ராதை என எத்தனையோ புராணப் பாத்திரங்களை நாயகியின் அழகுக்கு ஒப்பிட்டு தமிழ்த் திரைப் பாடலாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் 1,033 பேர் போட்டியிட்ட கதை தெரியுமா? ஹலோ... ப்ளூடிக் நண்பா!

ஆனால் பாஞ்சாலியை? கவிப்பேரரசு வைரமுத்து மட்டும் ஒரே இடத்தில் அதைச் செய்திருக்கிறார் என இட்டுக்கட்டி நம்ப இடமிருக்கிறது. `குஷி’ திரைப்படத்தின் `ஒரு பொண்ணு ஒண்ணு’ பாடலில். `அவ சிரிச்சா சிரிப்புல நூறு பேரு செத்துப்போயிட்டான்' என்று எழுதியிருக்கிறார்! பாரதப் புராணத்தை ஒற்றை வரியில் அடைத்துவிட்டார்!

***

தொடர் குறித்த உங்கள் கருத்துகளை, பரிந்துரைகளை, விமர்சனங்களைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன். bluetick@vikatan.com-ல் உரையாடுவோம்!

அடுத்த கட்டுரைக்கு