Published:Updated:

அன்பார்ந்த வாசகர்களே..!

அன்பார்ந்த வாசகர்களே..!

அன்பார்ந்த வாசகர்களே..!

அன்பார்ந்த வாசகர்களே..!

Published:Updated:
அன்பார்ந்த வாசகர்களே..!

இதோ, திரும்பினால் தீபாவளி! இந்த ஆண்டு, இன்னும் பத்து நாட்கள் முன்னதாகவே நம்மை மகிழ்விக்க, நெருங்கி வந்துவிட்டது கொண்டாட்டம்!

தீபாவளி என்றதும் சட்டென கங்கா ஸ்நானம் நினைவுக்கு வரும், வயதில் மூத்தோருக்கு! இனிப்புகள், பலகாரங்கள் எச்சில் ஊறவைக்கும், நடுத்தர வயதினருக்கு. புத்தாடை அணிந்து மகிழும் ஆர்வம் குடிகொள்ளும் இளையோர் உள்ளத்தில். பட்டாசு வெடிக்கும் உற்சாகப் பரபரப்பில் உலா வருவார்கள் சிறுவர்கள். ஆனால், வயது வித்தியாசம் பாராமல் அனைவரும் ஆர்வத்தோடு ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்றால், அது விகடன் தீபாவளி மலர்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்பார்ந்த வாசகர்களே..!

ஆன்மிகம், சினிமா, சிறுகதைகள், கவிதைகள், சுற்றுலா, பேட்டிக் கட்டுரைகள், ஃபேஷன், சமையல் குறிப்புகள் எனப் பல்சுவை விருந்தாகப் படைக்கப்பட்டிருக்கும் விகடன் தீபாவளி மலர், இதோ உங்கள் கையில்!

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தரின் அருளுரையில் தொடங்கி, இந்த மலரில் வெளியாகியுள்ள ஆன்மிகக் கட்டுரைகள் அனைத்தும் உங்கள் மனதுக்குப் பெரும் ஆனந்தத்தையும் ஆறுதலையும் தரும்.

ஒரு முகம்கொண்ட முருகக் கடவுளையும் ஆறுமுகம்கொண்ட ஆறுமுகப் பெருமானையும் நாம் அறிவோம். இரு முகம், மூன்று முகம், நான்கு முகம், ஐந்து முகம் கொண்ட முருகனின் திருவடிவங்களை நமக்கு அறிமுகப்படுத்தி, ஆச்சர்யப்படுத்துகிறது 'கருணைகூர் கந்தன் திருமுகங்கள்’ கட்டுரை. இப்படி இந்த மலரில் உள்ள பல தெய்விகக் கட்டுரைகள், ஆன்மிக அன்பர்களுக்கு அரிய பொக்கிஷம்!

அன்பார்ந்த வாசகர்களே..!

'அபூர்வ ராகங்கள்’ தொடங்கி 'எந்திரன்’ வரையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கதாபாத்திரங்களில் தனக்கு மிகவும் பிடித்த 'டாப் 10’ கேரக்டர்களைப் பட்டியலிடுகிறார், ரஜினியை வைத்து அதிகப் படங்கள் இயக்கியுள்ள எஸ்.பி.முத்துராமன். தவிர, சின்னத் திரையில் உருவாகி, பெரிய திரையில் கிடுகிடுவென வளர்ந்து வரும் இளைஞர் சிவகார்த்திகேயனின் பேட்டியும், இன்றைய தமிழ் சினிமாவின் போக்கு குறித்து, நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கும் இன்றைய இளம் தலைமுறை இயக்குநர்களின் கலகல கலந்துரையாடலும் இளம் வாசகர்களை வசீகரிக்கும்.

தமிழ் சினிமாவின் அபூர்வ கலைஞர்களான டி.எஸ்.பாலையா, நடிப்பிசைப் புலவர்

கே.ஆர்.ராமசாமி இருவருக்கும் இது நூற்றாண்டு. இவர்களைப் பற்றிய அபூர்வ தகவல்கள் அடங்கிய கட்டுரைகளும் இதில் உண்டு. தவிர, 'அப்புசாமியின் முன்ஜென்மம்' படக் கதை, கேஷவ், பத்மவாசன் எனப் பிரபல ஓவியர்கள் பலரின் அற்புதமான ஆன்மிகப் படங்கள்... இன்னும்... இன்னும்...

கடலை ஒரு கரண்டிக்குள் அடக்க முடியாதே! விகடன் தீபாவளி மலர் என்னும் இந்த ஆனந்தப் பெருங்கடலுக்குள் நிதானமாய் நீந்திக் களியுங்கள்.

வாசகர்கள் அனைவருக்கும் விகடன் குழுமத்தின் அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்,
ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism