Published:Updated:

ஜானகி சபதம்!

கட்டுரை: இ.கார்த்திகேயன், படங்கள்: ரா.ராம்குமார்

ஜானகி சபதம்!

கட்டுரை: இ.கார்த்திகேயன், படங்கள்: ரா.ராம்குமார்

Published:Updated:

புது டெல்லியில் உள்ள 'நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா’ என்று அழைக்கப்படும் தேசிய நாடகப் பள்ளி, நாடகத் துறையில் ஈடுபாடு கொண்ட அனைவரின் கனவுப் பள்ளி. இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஒரே நாடகப் பள்ளி இதுதான். நாடு முழுவதிலும் இருந்து விண்ணப்பிக்கும் அத்தனை மாணவர்களில் 30 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வின் அடிப்படை யில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து பலர் இந்தக் கல்லூரிக் குச் சென்றிருந்தாலும், பெண்கள் யாரும் இதுவரை சென்றது இல்லை 'தமிழ்நாட்டில் இருந்து தேசிய நாடகப் பள்ளிக்குச் சென்ற முதல் பெண்’ என்ற பெருமையைப் பெற்றது டன், போதை மருந்துக்கு அடிமையானவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், பேய் பிடித்தவர்களைக் கொடுமைக்கு ஆளாக்குதல் ஆகியவற்றை விவரிக்கும் 'சோன் ஈபூஸ்’ (son epouse) (ஆங்கிலத்தில் 'ஹிஸ் வொய்ஃப்’ என்று பொருள்) என்ற பிரெஞ்சுப் படத்தில் கதாநாயகிக்குத் தோழியாகவும், பேய் பிடித்தவராகவும், ஆசிரி யராகவும் நடித்துள்ளார் ஜானகி என்ற பெண். செங்கல்சூளையில் வேலை பார்க்கும் சாதாரண குடும்பத்துப் பெண்ணான இவர் பிரெஞ்சுப் படம் வரை தடம் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'தமிழ் புதுமுக நடிகை ஜானகியின் நடிப்பு வலுவானதாகவும் உணர்ச்சிகரமானதாகவும் வெளிப்பட்டுள்ளது’ என்று ஹாலிவுட் ரிப்போர்ட்டர் பத்திரிகை பாராட்டியுள்ளது.    

ஜானகி சபதம்!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தேவசகாயம் மவுன்ட் என்ற கிராமத்தில் உள்ள ஜானகியின் இல்லத்தில் அவரைச் சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜானகி சபதம்!

''என்அப்பா செங்கல்சூளையில் வேலை பார்த்தார். அம்மா விவசாயக் கூலி. எனக்கு ஒரு அண்ணன், மூணு அக்காக்கள். வறுமையான குடும்பம். நான் 12-ம்  வகுப்பு பப்ளிக் எக்ஸாம் எழுதி முடிச்ச மறுநாளே, 'ஏதாவது கம்பெனி வேலைக்கோ, தையல் தைக்கவோ போயி உன்னால முடிஞ்ச காசைக் கொடும்மா... குடும் பச் செலவுக்கு உதவியா இருக்கும்’னு அம்மா சொன்னாங்க. எனக்கு காலேஜ்ல சேர்ந்து படிக்கணும்னு ஆசை. ஆனா, காலேஜ்ல சேர்த்து படிக்க வைக்குற அளவுக்கு வீட்டுல வருமானம் இல்லாத தால, என் காலேஜ் ஆசை நிறைவேறல. ஆனா, எனக்குக் கலைகளில் ஈடுபாடு அதிகம். அதுவும், நாட்டுப்புறக் கலைகள், அழிந்துவரும் கலைகள் சம்பந்தமா புத்தகத்திலோ, டி.வி-யிலோ பார்த் தால், ரொம்ப ஆர்வமா பார்ப்பேன்.

ஜானகி சபதம்!

இந்த நேரத்துல என்னோட அக்கா மற்றும் தோழிகள் பரதம் கத்துக்க ஓர் அமைப்புக்குப் போனாங்க. அவங்களைக் கூப்பிட்டு விசாரிச்சப்பதான், கோட்டார் மறை மாவட்டத்தின் கீழ் இயங்கிவரும் 'களரி’ன்னு ஒரு கலைக் குழு இருக் கிறதும், அதில் பரதம் முதல் எல்லா கலைகளும் இலவசமா சொல்லித் தர்றதும் தெரியவந்தது. இந்த விஷயம் தெரிஞ்சதும், மனசுக்குள் ஆசை பூத்தது. மறுநாள் எப்போ விடியும்னு காத்துக்கிட்டு இருந்தேன். அக்கா கூடவே போயி, களரி கலைக் குழுவில் தேவராட்டம், ஒயிலாட்டம், பரதம், கும்மின்னு பல வகைக் கலைகள் சொல்லிக் கொடுத்துட்டு இருந்ததைப் பார்த்தேன். வீட் டுக்கு வந்து அப்பா, அம்மாகிட்ட சொன்னேன். 'ஆட்டமும் வேண்டாம், பாட்டும் வேண்டாம். குடும்பம் இருக்குற நிலைமையில ஒண்ணும் வேண்டாம்னு திட்டினாங்க. நான் வற்புறுத் தவும், ஒரு கட்டத்துல சம்மதிச்சாங்க.

ஜானகி சபதம்!

களரி கலைக் குழுவில் சேர்ந்தேன். சிலம்பம், கும்மியாட்டம், கோலாட்டம், சிலா ஆட்டம், சக்கைக்குச்சி ஆட்டம், சேரநாட்டு கும்மியாட் டம், கரகம், படுகா நடனம்னு பதிமூணு வகை யான கலைகளைக் கற்றேன், நிகழ்ச்சிகளுக்குப் போறதால கிடைக்கும் பணமும் குடும்பத்துக்கு உதவியா இருந்துச்சு. மூணு வருசம் களரியில் இருந்துட்டு, 2006-ல் 'முரசு’ கலைக் குழுவில் சேர்ந்தேன். முரசு கலைக்குழுவில் நிகழ்ச்சிகளுக் குப் போனா, பணம் கிடையாது. அதுக்குப் பதிலா, நாம் என்ன படிக்க நினைக்கிறோமோ அதுக்கான முழுச் செலவையும் முரசு ஏத்துக்கும்.

ஜானகி சபதம்!

முரசுல இணைஞ்சதும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துல பி.ஏ தமிழ் படிச்சேன். கலைக்குழு மூலம் பல நிகழ்ச்சிகளுக்குப் போனதாலும், வீதிநாடகங்கள் போட்டதாலும் பல மக்களோட அறிமுகம் கிடைச்சது. என்னைச் சுற்றி சமூகத்தில் என்னென்ன நல்லது, கெட்டது நடக்குதுன்னு ஆராய ஆரம் பிச்சேன். அவங்களோட பிரச்னைகள், கஷ்டங்களை மையமா வெச்சுத்தான் விழிப்பு உணர்வு ஏற்படுத்துற விதத்துல நாடகம் போடணும் என்பதைப் புரிஞ்சுக்கிட்டேன்.

2007-ல் 'நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா’-வுல இருந்து, நாகர்கோவில் இந்து கல்லூரியில நாடகக் கலை பத்தி 30 நாள் பயிற்சிப் பட்டறை நடத்தினாங்க. அதுல கலந்துகிட்டு என்னோட திறமையை வெளிப்படுத்தினேன். அப்போதான், இந்த நடிப்புக் கல்லூரியைப் பத்தி முழுசா தெரிஞ்சுகிட்டேன். உடனே அந்த வருஷ அட்மிஷனுக்காக அப்ளை செஞ்சேன். இன்டர்வியூவுக்கு கார்டு வந்துச்சு. பெங்களூருல இன்டர்வியூ. அவங்க கேட்ட கேள்விகளுக்கு எனக்கு நல்லா விடை தெரிஞ்சது. ஆனா, என்னால இங்கிலீஷ்ல சரளமா சொல்லத் தெரியலை. தேசிய நாடகப் பள்ளிக்கு அடிப்படைத் தகுதியே இந்தி தெரிஞ்சிருக்கணும். இல்ல, ஆங்கிலமாவது தெரிஞ்சிருக்கணும். எனக்கு ரெண்டுமே வராது. நான் தமிழ் மீடியத்துல படிச்சவ. இங்கிலீஷ்னு சொன்னாலே அலறி அடிச்சு ஓடிடுவேன். இன்டர்வியூல சொதப்பினதால, அந்த வருஷம் நான் செலக்ட் ஆகல.

ஜானகி சபதம்!

முரசு கலைக் குழுதான் என்னை இந்தி, இங்கிலீஷ் படிக்க வெச்சது. அந்த ஒரு வருஷம் முழுக்க இந்தி, இங்கிலீஷ் மட்டும்தான் படிச் சேன். 2008-ல் திரும்பவும் அப்ளை பண்ணி னேன். இன்டர்வியூவுல செலக்ட் ஆயிட்டேன். சூழ்நிலையைச் சொன்னவுடன் நடிப்புல, 'பாடி மூவ்மென்ட்ஸ்’ காட்டுறதுல நான் எப்பவுமே ஃபர்ஸ்ட்! ஏற்கெனவே கலைக் குழு மூலம் ஆட்டக் கலைகள் அத்துபடி என்பதால், எல்லாத்தையும் ஈஸியா ஃபாலோ பண்ண முடிஞ்சது. அப்படியே டெல்லியில் 'மாடர்ன் டிராமா’ என்ற மூணு வருஷ நவீன நாடகப் பட்டயப் பயிற்சி முடிஞ்சுது. பயிற்சி முடிச்சுட்டு நாடகக் குழுக்கள்ல பணி யாற்றும்போது, கவுதம்மேனன் சார் படங் கள்ல பணிபுரிஞ்ச பிரேமா ரேவதியின் அறிமுகம் கிடைச்சுது. 'சோன் ஈபூஸ்’ படத்தின் அசோசியேட் டைரக்டரும் அவர்தான். அவங்கதான் பிரெஞ்சுப் பட வாய்ப்பு பத்தி என்கிட்ட சொன்னாங்க. ஆட்கள் தேர்வு நடக்கும்போது நானும் கலந்துக்கிட்டேன். சாதாரணமா இன்டர் வியூன்னா பத்து நிமிஷம், அதிக பட்சம் அரை மணி நேரம் நடக்கும். ஆனா, இது ரெண்டு நாட்கள் நடந்துச்சு.

ஜானகி சபதம்!

தெரு நாடகங்கள்ல நடிச்சு வந்த நமக்கு சினிமா வாய்ப்பெல்லாம் எங்கே கிடைக்கப் போகுதுன்னுதான் எனக்குத் தோணுச்சு. அதுவும் சினிமான்னா நல்ல கலரா இருக்கணும், நல்லா டிரெஸ் போட்டிருக்கணும், கொஞ்சம் கிளாமரா இருக்கணும். அப்பதான் சான்ஸ் கிடைக்கும். இருந்தாலும் சும்மா முயற்சி பண்ணிப் பார்ப்போமேன்னு சந்தேகத்துல தான் போனேன். அங்க நடந்த தொடர் பெர்ஃபார்மன்ஸ், சிச்சுவேஷன் ஆக்ட் இதெல்லாம் வெச்சும், என்னோட திறமை மூலமாவும் எனக்கு அந்தப் படத் துல வாய்ப்பு கிடைச்சுது. பாண்டிச்சேரி, பெசன்ட் நகர், தென்காசி ஆகிய இடங் கள்ல ஷூட்டிங் நடந்துச்சு. இதுக்காக, ரெண்டு மாசம் பிரெஞ்சு மொழியையும் கத்துக்கிட்டேன்'' என்று சொன்ன ஜானகி நிறைவாக,

''படத்துல நடிக்கிறதைவிட, என்னை உருவாக்கிய களரி, முரசு போன்ற கலைக் குழுக்கள் மாதிரி நானே தனியா பெண் களுக்காக ஒரு கலைப் பயிற்சிக் குழுவைத் தொடங்கி இலவசமாவே அவர்களுக்கு எல்லா கலைகளையும் சொல்லிக் கொடுக் கணும்கிறதுதான் என்னோட ஆசை. பாலியல் தொல்லை, பெண் அடிமை, சாதியம் பேசுபவர்களுக்குச் சவுக்கடி கொடுக்கும் விதத்தில் விழிப்பு உணர்வுப் படங்களை டைரக்ட் செய்யணும்னு ஆசைப்படுறேன்'' என்று கண்களில் நம்பிக்கை மின்னச் சொல்லி முடித்தார் ஜானகி.

நம்பிக்கை அவரின் கனவை நிஜமாக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism