ஏஞ்சலினா ஜூலி... பெயருக்கேற்றாற்போல ஏஞ்சல்தான். நாற்பது வயதை நெருங்கினாலும், இவரின் கிரேஸ் குறையவில்லை. நடிகை, டைரக்டர், திரைக்கதையாளர் என ஹாலிவுட்டைக் கலக்கி வருபவர். ஏழு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்த ஜூலி... ஆஸ்கர் விருது ஒன்று, ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது இரண்டு, என கோல்டன் குளோப் விருது மூன்று... தன் நடிப்புத் திறமையால் கைப்பற்றியவர். ஹாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என ஃபோர்ப்ஸ் பத்திரிகை யால் 2009, 2011, 2013-களில் அடையாளம் காட்டப்பட்டவர்.

சிறந்த மனிதாபிமானியும்கூட! அகதிகள் முகாம்களுக்கு விசிட் செய்து அவர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார். ஒருமுறை ஐ.நா. சபையின் வேண்டுகோளை ஏற்று, அகதிகளுக்காக ஒரு மில்லியன் டாலர்களை நன்கொடையாக அளித்திருக்கிறார். ஒரு தனி நபர் நன்கொடையாகக் கொடுத்ததில், இந்தத் தொகையே அதிகபட்சமான தொகையாகும். இவர் செய்த ஃபீல்ட்வொர்க்கை கௌரவிக்கும் வகையில் ஐ.நா. சபை, அகதிகளுக்கான நல்லெண்ணத் தூதுவராக இவரை நியமித்தது.

சொந்த வாழ்க்கையில் மூன்று குழந்தைகள் என்றாலும், ஆதரவற்ற மூன்று குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

ஏற்கெனவே மூன்று முறை திருமணம் ஆகி, விவாகரத்து செய்தவர். பிராட் பிட்டுடன் ஏழு வருடங்கள் பழகி, லேட்டஸ்டாகத் திருமணம் செய்திருக்கிறார். விளையாட்டாகச் சொல்வதென்றால், நான்காவது தலைதீபாவளி கொண்டாடும் ஏஞ்சல் இவர்.