Published:Updated:

தங்கம் வென்ற தங்கங்கள்!

தங்கம் வென்ற தங்கங்கள்!

தங்கம் வென்ற தங்கங்கள்!

தங்கம் வென்ற தங்கங்கள்!

Published:Updated:
தங்கம் வென்ற தங்கங்கள்!

ஜோஸ்னா, தீபிகா... காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் இரட்டையர் ஆட்டத்தில் தங்கம் வென்ற தங்கங்கள். சர்வதேசத் தர வரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ள இந்த இந்திய இணை, முதல் இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஜென்னி டன்கால்ஃப் - லாவ்ரா மஸ்ஸோராவைத் தோற்கடித்து உள்ளது. அதுவும் நேர் செட்களில்!

மூன்று புறமும் கண்ணாடியால் சூழப்பட்ட அறையில் பந்துகளை சுவரில் அடித்து, திரும்பும் பந்தை எதிராளி அடித்து ஆட முடியாமல் செய்ய வேண்டும். மிகவும் நுணுக்கமாக எதிராளியையும் பந்தையும் கையாள வேண்டிய பரபரப்பான ஆட்டம் இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தங்கம் வென்ற தங்கங்கள்!

''ஆரம்பத்திலேயே இரண்டு கேம்களுக்கு மேல் ஆடக் கூடாது என்று முடிவு செய்துவிட்டோம். அதற்கேற்ப திட்டமிட்டு ஆடினோம்'' என்கிறார் ஜோஸ்னா. இவர் மேஜர் ஜெனரல் கரியப்பாவின் பேத்தி என்பது கூடுதல் தகவல்.

ஜோஸ்னா, தீபிகா இருவருமே சென்னைப் பெண்கள். அர்ஜுனா விருது வென்றவர்கள். ஜோஸ்னா, பிரிட்டிஷ் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்தியர்.  தீபிகா, சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற முதல் இந்தியப் பெண்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism