Published:Updated:

இரண்டாவது கால்பந்துக் கடவுள் !

இரண்டாவது கால்பந்துக் கடவுள் !

இரண்டாவது கால்பந்துக் கடவுள் !

இரண்டாவது கால்பந்துக் கடவுள் !

Published:Updated:

அர்ஜென்டினாவுக்கு கிடைத்த இரண்டாவது கால்பந்துக் கடவுள் மெஸ்ஸி. மெஸ்ஸின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, மாரடோனா ஒருமுறை, ''என்னைப் போலவே ஆடும் சிறந்த கால்பந்தாட்டக்காரன் கிடைத்துவிட்டான்'' என்று வியந்து சொன்னார்.

இரண்டாவது கால்பந்துக் கடவுள் !

சிறு வயதில், தன் சகோதரர்களைப் பார்த்துக் கால்பந்து விளையாட ஆரம்பித்தார் மெஸ்ஸி. எட்டு வயதில் ரொசாரியோ நகரின் நியூவெல்ஸ் ஓல்டு பாய்ஸ் கிளப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அந்த வயதில் மெஸ்ஸிக்கு ஹார்மோன் குறைபாட்டுப் பிரச்னை ஏற்பட்டது. அடிக்கடி ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயம். மெஸ்ஸியின் மருத்துவச் செலவுகளுக்காக மிகவும் சிரமப்பட்டனர் அவரின் பெற்றோர். ஸ்பெயினின் 'பார்சிலோனா யூத் அகாடமி’ மெஸ்ஸியின் மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொண்டு, அவரைத் தனது அணிக்கு எடுத்துக்கொண்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதில் இருந்து பல போட்டிகளில், அந்த அணியின் வெற்றிக்கான கோல்கள் பல மெஸ்ஸியால் போடப்பட்டவையே! பிறகு, அர்ஜென்டினாவின் அண்டர்-20 அணிக்கும், கிளப் அணிக்கும் மாறி மாறி ஆடினார். 2005-ல் அர்ஜென்டினாவுக்கு அண்டர்-20 சேம்பியன்ஷிப் கோப்பையைப் பெற்றுத்தந்தார்.

பல முறை, 'வேர்ல்டு பிளேயர் ஆஃப் ஃபுட்பால்’ இவருக்குத்தான். சமீபத்தில், பிரேஸிலில் நடந்த உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டி வரை அர்ஜென்டினாவை அழைத்துச் சென்ற பெருமை மெஸ்ஸிக்கே உரியது. இந்தப் போட்டித் தொடரின் நாயகனும் மெஸ்ஸிதான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism