Published:Updated:

"சேலை கட்டுவது செம ஈஸி!”

ஷாப்பிங்: ஷாலினி நியூட்டன்

"சேலை கட்டுவது செம ஈஸி!”

ஷாப்பிங்: ஷாலினி நியூட்டன்

Published:Updated:

''இன்னிக்கு வீட்ல பூஜை. இன்னிக்காவது அந்தச் சேலையை எடுத்துக் கட்டேண்டி!'' - அம்மாக்களின் இந்த ஆதங்க வார்த்தையைக் கேட்காத இளம் வயதுப் பெண்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு, சேலை கட்டுவது என்பது இளம்பெண்களுக்குச் சிரமமான விஷயமாக மாறிவிட்டது. அவசர வாழ்க்கை, நவீன சமுதாயம், கூட்ட நெரிசல், இரு சக்கர வாகனப் பயணம்... என, சேலை உடுத்துவதைச் சிரமமாக்க நிறைய விஷயங்கள் இன்று பெண்களைச் சுற்றி இருக்கின்றன. ஆனாலும், சேலையைப் பிடிக்காத பெண்கள் இருக்க மாட்டார்கள். சேலையைக் கட்டிக்கொண்டு அலுவலகம் சென்றால், ஒரு நாள் முழுக்க எப்படி இருப்பது, சேலையின் முன்மடிப்பு, பின்மடிப்பு கலையாமல் எப்படிப் பாதுகாப்பது என்ற கேள்விகளால்தான் சேலையை எதிரியாகப் பார்க்கிறார்கள் சில பெண்கள். 'சேலை கட்ட ஏன் இவ்ளோ சிரமப்படணும்? வாங்க, ஈஸியா கட்டலாம்’ என்று ஏகப்பட்ட 'ரெடி டு வேர்’ சேலைகளைக் கண் முன்னால் கொட்டினார்கள் நம்ம தி.நகர் வியாபாரக் காந்தங்கள். அதில் சில வகைகளை இங்கே பார்க்கலாம்.

"சேலை கட்டுவது செம ஈஸி!”

பட்டர்ஃபிளை சேலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேருக்கேத்த மாதிரி சேலை அகண்டு, நீளமா தோள்பட்டைகிட்ட சேரும். பல்லூவோட ஆரம்பத்துல குறுகி, மறுபடியும் விரியும். சரியா தோள்பட்டை மேலே அழகான வேலைப்பாடுகளோட இருக்கற இந்த சேலையில, முந்திக்கு மெனக்கெடத் தேவையே இல்லை. ஆனாலும் முன் கொசுவத்துக்கு மடிப்பு வைக்கணும். இந்த சேலை எவ்ளோ குண்டான பெண் களையும் ஒல்லியா காண்பிக்கும். கூடவே ரொம்ப ஆடம்பரமா வும் இருக்கும். பாக்குற எல்லாரையும் உங்க பக்கம் திரும்பவும் வைக்கும். இந்தச் சேலைக்குக் கூடுதல் அழகு, சாதாரண பூனம் சேலையில செய்யப்பட்ட ஜர்தோஸி வேலைகள் தான். இதோட விலை ரூ2,000-ல இருந்து ஆரம்பிக்குது.

"சேலை கட்டுவது செம ஈஸி!”

ஆஃப் லெஹெங்கா சேலை

லெஹெங்கா அப்படின் னாலே அது மிடி வகைதான். அதையும் சேலையோட மிக்ஸ் பண்ணி சேலை கட்டுறதை ஈஸி ஆக்கிட் டாங்க. இதுல முன்கொசுவம் மட்டும் வைக்க வேண்டாம். அப்படியே சுத்திக் கொண்டு வந்து முந்திக்கு மடிப்பு வெச்சா மட்டும் போதும்... இதோட விலை ரூ.1,500-ல இருந்து ஆரம்பம்.

"சேலை கட்டுவது செம ஈஸி!”

ஃபுல் லெஹெங்கா

இதுல முன்கொசுவம் பின்கொசுவம் எல்லாமே ஏற்கெனவே வெச்சே இருக்கும். அப்படியே ஒரு சுத்து சுத்தி தோள்ல போட்டுகிட்டுப் போகலாம். இந்த சேலை ரொம்ப ஆடம்பரமா கார்ல போற பெண்களுக்கு அம்சமா இருக்கும். இந்தச் சேலையைக் கட்டிக்கிட்டு ஒரு கல்யாண வீட்டுக்குப் போனா, கல்யாணப் பொண்ணே டம்மியா தெரிவா. அவ்ளோ கிராண்டா இருக்கும். இந்த சேலை இடுப்பு, தொடைப் பகுதிகளை சின்னதா காட்டும். பார்க்க தேவலோக ரம்பை மாதிரியான தோற்றத்தைத் தரும். இந்தச் சேலையோட விலை ரூ.5000-த்தில் இருந்து ஆரம்பம்.

"சேலை கட்டுவது செம ஈஸி!”

ரெடி ஃப்ளிட் சேலை

இதுல முன்கொசுவம் மட்டும் சேலைக்கு சம்பந்தமே இல்லாத மெட்டீரியல்ல உருவானது. முழுச் சேலையும் பூனமாவோ இல்ல ஜார் ஜெட்டாவோ இருக்கும். முன் கொசுவம் மட்டும் வலை மாதிரி இருக்கும். முன்கொசு வத்தைத் தனியா எடுத்துக் காட்டுற இந்தச் சேலை, ஒரு வட இந்திய வரவு. இதுலேயும் முன் கொசுவத்துக்கு வேலை இல்லை. முந்தி, திக்கான துணியில இருக்கிறதுனால சிங்கிளா விட்டுட்டுப் போலாம். விலை ரூ.2500-ல இருந்து ஆரம்பம்.

"சேலை கட்டுவது செம ஈஸி!”

அனார்கலி சேலை

அனார்கலி எங்க சேலை கட்டினாங்க? இதானே உங்க கேள்வி? அதாவது அனார்கலி சுடிதாரோட ஸ்பெஷல் - நெஞ்சு கிட்டேர்ந்து விரியற டாப்தான். அதே பாணியில தான் இந்தச் சேலையும் இருக்கும். ஆனா, இதுல பாவாடை, இடுப்புலருந்து கணுக்கால் வரைக்கும்  அடுக்கடுக்கா இருக்க, பாவாடையோடு ஒரு முந்தி சேர்ந்து வரும். இதுவும் முன் கொசுவத்துக்கு வேலையில்லாத சேலை. முந்தியும் மடிப்பு வைக்காம அப்படியே சிங்கிளா விட்டா, கூடுதல் அழகு! இந்தப் பாவாடைல வேலைப்பாடுகள் அதிகம். அதனால விலையும் கொஞ்சம் அதிகம்தான். ரூ.6000-த்துல இருந்து ஆரம்பம்.

"சேலை கட்டுவது செம ஈஸி!”

மயில் சேலை

இந்தச் சேலை உங்களை அழகு மயிலாவே காட்டும். பல்லூ முழுக்கப் பார்க்குற வங்களை ஏங்க வைக்கிற அளவுக்கு அழகான மயில் டிசைன். இதுல நீங்க பல்லூவுக்கு மெனெக்கெட்டு மடிப்பு வைக்க வேண்டிய அவசியமே இல்லை. இது பெரும்பாலும் நீலமும் பச்சையும் கலந்த கலர்ல, மயிலோட உடல் மாதிரியே சேலை முழுவதும் இருக்கும். கட்டினா 'மயில்போல பொண்ணு ஒண்ணு’ன்னு பாட்டே பாடுவாங்க. இதோட விலை ஆரம்பமே ரூ.5000.

"சேலை கட்டுவது செம ஈஸி!”

காக்ரா சேலை

காக்ரா சோளி கேள்வி பட்டிருப்போம். இது சேலை. இது ஒரு ஆஃப் சோளி டைப் சேலை. காக்ரா சோளி எப்படி மீன் வால் மாதிரி பாவாடையோட இருக்குமோ, அதே பாணியில ஒரு பாவாடை, அதோட சேர்ந்த முந்தி. இது ஆஃப் ஸாரி டைப் என்பதால் 16 முதல் 23 வயசுப் பெண்களுக்கு ரொம்ப கச்சிதமா இருக்கும். 27 வயசுக்கு அதிகமா  உள்ளவங்களுக்கு இந்த சேலை அவ்ளோ சரியா இருக்காது. இதோட விலை ரூ.4000-ல இருந்து ஆரம்பம். இதுல முந்தி மடிப்பு மட்டும் வெச்சா போதும்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism