Published:Updated:

அமைதி தூதர்கள்!

அமைதி தூதர்கள்!

அமைதி தூதர்கள்!

அமைதி தூதர்கள்!

Published:Updated:
அமைதி தூதர்கள்!
அமைதி தூதர்கள்!

மெக்ஸிகோவில் தினம் தினம் வன்முறைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. கடந்த மூன்று வருடங்களில் 9 ஆயிரம் கொலைகள்! இதைத் தடுக்க அரசாங்கம் பல்வேறு வழிகளில் முயன்றும், வன்முறைகள் குறையவில்லை. அந்நாட்டு இளைஞர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு வன்முறைகளைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில், வார இறுதி நாட்களில், நகரங்களின் முக்கிய வீதிகளிலும், சாலை சந்திப்புகளிலும் அமைதி தூதர் உடை அணிந்து, வன்முறை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்களுடன் அசையாமல் சிலை போல் நிற்கிறார்கள். 'இதைப் பார்த்து வன்முறையாளர்கள் உடனே திருந்தி விடுவார்கள் என்று சொல்ல முடியாது தான். ஆனாலும், ஒரு சிலராவது சிந்திப்பார்கள் அல்லவா?’ என்கிறார் அமைதி தூதர்களில் ஒருவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்புச் சிலைகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism