Published:Updated:

நல்ல(தொரு) குடும்பம்!

தகவல்: என்.மல்லிகார்ஜுனா

நல்ல(தொரு) குடும்பம்!

தகவல்: என்.மல்லிகார்ஜுனா

Published:Updated:

தகவல்: என்.மல்லிகார்ஜுனா

''ஆபீஸ் விட்டால் ஒழுங்கு மரியாதையாக நேரத்துடன் வீட்டுக்கு வருவது கிடையாது. வீட்டை அலங்கோலமாக வைத்திருக்கிறார்; எல்லாம் போட்டது போட்டபடி இருக்கிறது. ஒரு பொறுப்பு கிடையாது. சதா காலம் சோம்பேறித்தனமாக உட்கார்ந்திருக்கிறார். எல்லாவற்றையும் நானேதான் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய வேண்டியிருக்கிறது. எல்லாம் என் தலையெழுத்து!'' என்று மனைவிமார்கள் சிலர் தங்கள் கணவர்கள் பற்றி அலுத்துக்கொள்வது உண்டு.

நல்ல(தொரு) குடும்பம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த 'சுஸேன் ஹைய்ன்ஸ்’ (Suzanne Heintz) ஆனால், அவளையும் சுஸேன் ஒன்றும் சொல்வதில்லை; திட்டுவதில்லை. சொல்லப் போனால், ''என் சமையல் சரி என்று என் கணவர் குத்திக் காட்ட மாட்டார். அதே போல், என் மகளும் என்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டாள். 'இது வேண்டாம்... அது வேண்டும்’ என்று அடம் பிடிக்க மாட்டாள். எனக்கு இது போதுமே!'' என்று இருவரைப் பற்றியும் சுஸேன் மகிழ்ச்சியோடே சொல்கிறாள்.

நல்ல(தொரு) குடும்பம்!

எங்கு சென்றாலும் மூவரும் ஒன்றாகத்தான் செல்வார்கள். பார்ப்பவர்கள் எல்லாம், 'ஆஹா... இதுவல்லவோ குடும்பம்! எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள்!’ என்று பொறாமைப்படுவார்கள்.

அப்படி என்னதான் ரகசியம்?

சுஸேன் ஒரு போட்டோகிராஃபர். தனது வேலையில் எந்நேரமும் பிஸியாக இருப்பவர். குடும்பம் என்றால், எந்தச் சண்டை சச்சரவும் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர். 'மனசுக்கு ஏற்ற கணவர் அமையவில்லை என்றால், குடும்பப் பொறுப்புகளில் சிக்கி, வேறு எதையுமே பெண்களால் சாதிக்க முடியாது. தங்களுக்கான வாழ்க்கையை வாழ முடியாது’ என்பதில் திடமான நம்பிக்கை உள்ளவர். 

நல்ல(தொரு) குடும்பம்!

ஆனாலும், தனியாக எப்படி வாழ்வது? குடும்பம் என்று ஒன்று வேண்டுமே! அதனால், அவர் ஒரு காரியம் செய்தார். இளம் வாலிபர் பொம்மை ஒன்றையும், சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி பொம்மையையும் விலைக்கு வாங்கி, வீட்டில் வைத்துக்கொண்டு, அவற்றையே தன் கணவர், மகளாக வரித்துக் கொண்டுவிட்டார்.

இந்தப் போட்டோக்களில் நீங்கள் காண்பது பொம்மைகள்தான். திருமணமே செய்துகொள்ளாமல் இப்படி பொம்மைகளுடன்  கடந்த 14 வருடங்களாக வாழ்ந்து வருகிறார் சுஸேன்.

நல்ல(தொரு) குடும்பம்!

அதுமட்டுமா, உள்ளூரில் தியேட்டர், ஷாப்பிங் மால் போன்ற இடங்களுக்கு மட்டுமல்ல... வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றாலும்கூட, இந்த பொம்மைகளோடுதான் செல்கிறார் சுஸேன். பிரபலமான இடங்களில் அந்த பொம்மைகளுடன் போட்டோக்கள் எடுத்துக்கொண்டு, 'இதுதான் என் குடும்பம்! என் சாதனைகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாத, என்னை என் விருப்பப்படி வாழ அனுமதித்துள்ள அன்பான குடும்பம்!’ என்று எல்லோருக்கும் காண்பித்து மகிழ்கிறார்.

இப்படியும் ஒரு பெண்ணா?! ஆச்சர்யம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism