

லண்டனில் வசிக்கும் மார்செலா கிரக்கோவா இரு குழந்தைகளுக்குத் தாய் ஆனதும் உடல் பெருத்துப்போனார். உடல் பருமனைக் குறைக்க சாப்பாட்டின் அளவைக் குறைத்துப் பார்த்தார். இதனால் சோர்வு அதிக மானதே தவிர, உடல் பருமன் குறைந்தபாடில்லை. யோசித்தார் மார்செலா. தினமும் தன் இரு குழந்தைகளையும் தள்ளுவண்டியில் உட்காரவைத்து, அதைத் தள்ளிக்கொண்டே எட்டு மைல் தூரம் ஜாகிங் செய்யத் தொடங்கினார். இதனால் உடல் பருமனைக் குறைத்ததோடு மட்டுமில்லாமல், கேம்பிரிட்ஜ் நகர்வாசிகளின் கண்களையும் ஈர்த்துள்ளார். அவர்கள் இவரை 'சூப்பர் மாம்' என்று கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஓடி ஓடி குறைக்கணும்..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism