கடற்கரைக்குச் சென்றால், ஹாயாக சன்பாத் எடுத்துவிட்டுத் திரும்புவார்கள்; பார்த்திருக்கிறோம்! ஆனால், அந்த நேரத்தை விரயம் செய்வதாக யாரோ ஒரு புத்தகப் புழுவுக்கு மனசில் பட்டிருக்கிறது. சன்பாத் வாங்குகிற கையோடு, உருப் படியாக ஏதேனும் புத்தகங்களையும் படிக்கலாமே என்று தோன்ற, கடற் கரையில் நூலகம் அமைக்கலாமே என்று யோசனை கூறியிருப்பார் போலும்!

பல்கேரியாவில் உள்ள ஒயிட் ஸாண்டட் அல்பெனா ரிஸார்ட்டில் (White sanded Albena resort) கடற்கரையில் காற்று வாங்க, சன்பாத் எடுக்க வரும் சுற்றுலா பயணிகளுக்காக, பத்து மொழிகளில் 2500-க்கும் மேற்பட்ட பிரபலமான புத்தகங்களைக் கொண்டு ஒரு நூலகத்தை அமைத்திருக்கிறார்கள். காற்று, மழையால் புத்தகங்கள் சேதாரம் ஆகாமல் இருக்க ஜிப் வைத்த பாலித்தீன் கவரில் புத்தகங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.

ஆக, காற்று வாங்கப் போய், கவிதை படித்து வரலாம்!