ஈரானில் பிறந்த மரியம் மிர்ஸாகானி, கணிதத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான 'ஃபீல்ட்ஸ்’ பதக்கம் பெற்றிருக்கிறார்.

கணிதத் துறைக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது இல்லை. ஆனால், அதற்கு இணையான பெருமையுடையது இந்த ஃபீல்ட்ஸ் பதக்கம். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச கணிதக் கழகத்தினால் அளிக்கப்படும் இந்த விருது, சமீபத்தில் தென்கொரியாவின் சியோலில் நடைபெற்ற சர்வதேச கணித மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

மிர்சாகானி, இந்த விருதைப் பெறும் முதல் பெண்மணி மட்டுமல்ல... முதல் ஈரானியரும் கூட! 37 வயதாகும் இவர், இப்போது அமெரிக் காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். 'சிமெட்ரி ஆஃப் கர்வ்டு சர்ஃபேஸ்’ என்னும் கணித ஆராய்ச்சி செய்தமைக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.