Published:Updated:

முன்னேற துடிப்பவர்களுக்கு மட்டும்...

ஜி.எஸ்.எஸ்.

முன்னேற துடிப்பவர்களுக்கு மட்டும்...

ஜி.எஸ்.எஸ்.

Published:Updated:

வாழ்க்கை என்பதே தொடர்ந்து கற்றுக்கொள்ளுதல்தான்! கற்பதிலும்கூட பல யுக்திகள், புதிய புதிய நுணுக்கங்கள் உள்ளன. அவற்றை அவ்வப்போது வெளியாகும் சுயமுன்னேற்ற நூல்கள் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றன. இங்கே, ஆங்கில சுயமுன்னேற்ற நூல்கள் சிலவற்றில் இருந்து, வாழ்க்கையின் முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில புதிய கோணங்களைக் காண்போம்.

வெற்றித் தலைவருக்கான ஆறு குணங்கள்!

அழகான தோற்றம் கொண்டவர்கள் உண்டு; அவர்களில் பலருக்கு அற்புதமான தொலைநோக்குப் பார்வையும் உண்டு; அவர்களுக்குப் பெரிய பெரிய வி.ஐ.பி-க்களையும் தெரிந்திருக்கும். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருவார்கள். இது ஏன்? தங்களிடம் உள்ள சாதகமான அம்சத்தைச் சிறப் பாகப் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்குத் தெரிய வில்லை என்பதுதான் காரணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எத்தகைய தன்மைகள், ஆற்றல்கள் மற்றும் நடத்தைகள் சிலரை மிக உச்சத்துக்குக் கொண்டு போகின்றன என்பது குறித்த ஆராய்ச்சி யில் இறங்கினேன். வெற்றியாளர்களிடம் உள்ள பொதுவான அம்சம் என்ன என்பதில் கவனம் செலுத்தினேன். அப்போது ஆழமான சில உண்மைகளை அறிந்துகொண்டேன். அவைதான் அவர் களின் வெற்றிக்கு அடிப்படை என்பதைப் புரிந்துகொண்டேன். அந்த விதத்தில் ஆறு முக்கியமான விஷயங்களை இங்கே சொல்கிறேன்.

முன்னேற துடிப்பவர்களுக்கு மட்டும்...

வளவளவென்று பேசுபவரைவிட, தான் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பவரோடு இணைந்திருப்பதைத்தான் யாருமே விரும்புகிறார்கள்.  

தான் சொல்வது அல்லது செய்வது தவறு என்று இடித்துரைத்துத் திருத்த முற்படாதவர்களிடம்தான் யாருமே பெரும்பாலும் ஒத்துப்போகிறார்கள்.

எந்தவொரு விஷயத்திலும் தாங் களும் பங்குபெறும்படியான ஒரு தீர்வைத் தான் பலர் மதிக்கிறார்கள்.

100 சதவிகிதம் வெற்றி தரும் என்றாலும்கூட, கடினமான செயல்முறையைப் பலர் ஏற்பது இல்லை.

சிறந்ததா, இல்லையா என்பது பிரச்னை இல்லை; தங்களுக்கு எது சௌகரியமோ அந்த வழிமுறையைத்தான் பெரும்பாலானோர் தேர்ந் தெடுக்கிறார்கள்.  

தங்களை முக்கியமானவராகக் கருத வைக்கும் தலைவரைப் பின்பற்றத்தான் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். இந்த ஆறு அம்சங்களுக்கேற்ற ஆறு குணங்களைக் கொண்ட தலைவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள்.

Garrison Wynn எழுதிய ‘The Real Truth about Success’என்ற ​நூலில் இருந்து.

  பாராட்டில் வேண்டாமே எதுகையும் மோனையும்!

மார்க் ட்வைன் ஒரு முறை குறிப்பிட்டார்... 'ஒரு பாராட்டு வார்த்தை நம்மை இரண்டு மாதங்களுக்கு உற்சாகமாக வைத்திருக்கும்!’. எவ்வளவு பெரிய உண்மை இது!

அதற்காகப் பொய்யாகப் புகழ வேண்டும் என்பதில்லை. உண்மையற்ற வெற்றுப் புகழ்ச்சி நாக்குக்கு இனிப்பாக இருக்கலாம். ஆனால், அது வயிற்றுக்குள் அமிலத்தைச் சுரக்க வைக்கும்.  அதேபோல, வார்த்தை விளையாட்டுகளும் எதுகை மோனைகளும் உண்மையான, மனப் பூர்வமான புகழ்ச்சிக்குத் தேவை இல்லாதவை. அவை சில நேரங்களில் பாராட்டின் வீர்யத் தையே குறைத்துவிடும். வர்ணனையற்ற எளிமை யான பாராட்டுக்குதான் அதிக ஆற்றல் உண்டு.

ஒரு பைபிள் வாசகம் உண்டு. ''சரியான சூழலில் வெளிப்படுத்திய வார்த்தைகள், வெள்ளிப் பின்னணியில் அமைந்த தங்க ஆப்பிள்கள் போன்றவை'' என்று சாலமன் கூறுவதாக அது அமைந்திருக்கும்.  

முன்னேற துடிப்பவர்களுக்கு மட்டும்...

இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கத் தளபதி ட்வைட் ஐசன் ஹோவேர், ரைன் நதிக்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, ராணுவ வீரர் ஒருவனைக் கண்டார். அவன் மிகவும் சோகமாக இருந்தான்.  

''எப்படி உணர்கிறாய் மகனே?'' என்று அவர் கேட்டார். ''தளபதி, நான் மிகவும் பயமாக உணர்கிறேன்'' என்றான் அந்த ராணுவ வீரன்.

''நல்லது. நீயும் நானும் சரியான ​ஜோடிதான். ஏனென்றால், எனக்கும் பயமாக இருக்கிறது. இருவரும் கொஞ்ச நேரம் சேர்ந்து நடந்தால், இருவருக்குமே நல்லது!'' என்றார் தளபதி.

எந்த உபதேசமும் இல்லை; ஆலோசனையும் இல்லை. ஆனால், என்ன ஒரு தைரியப்படுத்தும் வார்த்தைகள் மற்றும் செயல்பாடு!

-‘How to be successful, yet happy’ என்ற தொகுப்பு நூலில், Mark Littleton எழுதிய கட்டுரையிலிருந்து.

தள்ளிப் போடுவதைத் தள்ளிப் போடுங்க!

தள்ளிப் போடுவது என்பது ஒரு பெரும் பிரச்னையாக, முன்னேற்றத்துக்கு ஒரு தடைக் கல்லாக அமைய வாய்ப்பு உண்டு. கட்டவேண்டிய தொகையை உரிய நேரத்தில் செலுத்தாமல் இருப்பது, திட்டங்களை உரிய காலத்துக்குள் செயல்படுத்தாமல் இருப்பது, தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்குப் போதிய அளவு தயார் செய்துகொள்ளாமல் இருப்பது போன்றவை விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஓர் எளிய நுட்பத்தைப் பயன்படுத்துவதன் ​மூலம் இந்தத் தள்ளிப் போடும் தன்மையை நம்மால் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.  

ப்ளூமா ஜெயிகர்னிக் என்ற பெண்மணி, வியன்னாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றார். அவர் ஓர் இளம் ரஷ்ய மனவியல் பட்டதாரி. அந்த ஹோட்டலில் உள்ள வெயிட்டர்களும் வாடிக்கையாளர்களும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை அந்தப் பெண்மணி கூர்ந்து கவனித்தபோது, அவருக்கு ஓர் உண்மை புலப்பட்டது.

'சாப்பிட்டாகிவிட்டது; பில்லைக் கொடுங் கள்’ என்று வாடிக்கையாளர் கேட்கும்போது, அவர் என்னென்ன சாப்பிட்டார் என்பதை சம்பந்தப்பட்ட வெயிட்டரால் தெளிவாக நினைவுகூர முடிந்தது. ஆனால், பணத்தைச் செலுத்திவிட்டு வாடிக்கையாளர் சென்ற சில நொடிகளுக்குப் பிறகு இதுகுறித்து அந்த வெயிட்டரிடம் கேட்டால், சுத்தமாக மறந்து போயிருந்தது. ஆக, குறிப்பிட்ட வாடிக்கை யாளர் பணம் செலுத்திவிட்டுச் சென்றதுமே, அவர் தொடர்பான அனைத்தும் வெயிட்ட ரின் நினைவில் இருந்து அழிந்துவிடுகின்றன.  

அந்தப் பெண்மணிக்கு மேலும் இது தொடர்பாகச் சோதனைகள் நடத்திப் பார்க்க ஆவல் அதிகரித்தது. சிலரை ஒன்று திரட்டி, அவர்கள் செய்யவேண்டிய பணிகள் என்னென்ன என்பதற்கான ஒரு பட்டியலைச் சொன்னார். பின்னர் அவற்றை, அதாவது, மரக்கட்டைகளை ஓரிடத்தில் அடுக்க வேண்டும், பொம்மைகளை ஒரு பெட்டிக்குள் வைக்கவேண்டும் என்பதுபோல அடுத்தடுத் துப் பலவிதமான சிறுசிறு செயல்களைச் செய்ய வைத்தார். ஆனால், அவர்கள் பாதி வேலை செய்துகொண்டிருக்கும்போதே அதை நிறுத்தச் சொல்வார். நிறுத்திவிட்டு, அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட எல்லா வேலைகளையும் பட்டியலிடச் சொன்னார். என்ன ஆச்சர்யம்..! இன்னும் என்னென்ன வேலைகள் பாக்கி இருக்கின்றன என்பதைத் தான் அவர்களால் நினைவுகொள்ள

முடிந்ததே தவிர, இதுவரை செய்த செயல்கள் என்ன என்பதில் பலர் தடுமாறினார்கள்.

அதாவது ஒரு செயலை செய்து முடித்த வுடன், நம் மனது பெருமூச்சுவிடுகிறது. அதோடு, செய்த செயல் மறந்துவிடுகிறது. அதே சமயம், ஒரு வேலையை முடிக்கவிடாமல் தடை ஏற்பட்டால், அந்த முழுமையாக்கப்படாத வேலையை மனம் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறது.

எல்லாம் சரிதான்... ஆனால், இதற்கும் தள்ளிப்போடும் தன்மைக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? ஒரு செயலைத் தள்ளிப் போடு வதற்குக் காரணம், அது மிகக் கடினமானது, சுவாரஸ்யம் இல்லாதது, சிக்கலானது என்ப தால்தான். அப்படிப்பட்ட செயலில் பிடிவாத மாக ஈடுபட்டு, சில நிமிடங்கள் செய்துவிட்டால் போதும்; அதன் பிறகு அதை முடிக்கவேண்டும் என்ற இடைவிடாத உந்துதல் உண்டாகிவிடும். அந்தச் செயலை முடிக்கும் வரை நம் மனதில் அமைதி இருக்காது.

-Richard Wiseman எழுதிய ‘59 seconds’ என்ற ​நூலில் இருந்து.

  தீர்மானங்களைத் தீர்மானியுங்கள்!

முன்னேற துடிப்பவர்களுக்கு மட்டும்...

இளமைக் காலத்திலேயே நான் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன். அதுதான் 'தீர்மானங்கள் எடுப்பது!’ நேர்மை யாக இருத்தல், உண்மையாக இருத்தல், புகை- மதுப்பழக்கத்தை மேற்கொள்ளாதிருத்தல், போதைப் பொருளைப் பயன்படுத்தாமல் இருத்தல் ஆகியவற்றில் உறுதியாக இருக்கவேண் டும் என்பதிலிருந்து எனது இந்தத் தீர்மானம் எடுக்கும் பழக்கம் தொடங்கியது.  

''ஒரு மனிதன் சிலவற்றையாவது நம்புவதன்​மூலம்தான் வாழ்கிறான்; பலவற்றை விவாதிப் பதன் மூலம் அல்ல!'' என்கிறார் தாமஸ் கார்லைல்! தீர்மானங்களை எடுத்தவுடன், வாழ்க்கையில் பல சிக்கல்கள் இல்லாமல் போவதை நீங்கள் உணர்வீர்கள். தேவையற்ற விவாதங்களிலும் யூகங்களிலும் உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணாக்க மாட்டீர்கள்.    

‘In pursuit of personal excellence’என்னும் ​நூலில், J.W.Bill Marriott, Jr.எழுதிய கட்டுரையில் இருந்து.

  விரட்டுங்கள் விரக்தியை!

விரக்தி என்பது மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கக்கூடியது. வாழ்வில் நம்பிக்கையின்றி, அர்த்தமற்றுக் காலங்கழிப்பது விரக்தி மனநிலை யின் வெளிப்பாடு!

எந்தவிதமான விரக்திக்கும் அடிப்படை இயலாமைதான். சரி, இயலாமை எப்போது உண்டாகிறது? நமக்குத் தோல்வி ஏற்படும்போது! எனில், ​தோல்வி அடையாமல் இருக்க என்ன செய்யலாம்? நீங்கள் செய்ய வேண்டிய வேலை களை ஒரு பட்டியலாக எழுதிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வேலையாகச் செய்து முடியுங்கள். அப்போது உங்கள் மனதுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதி ஏற்படும். விரக்தி மனப் பான்மை படிப்படியாகக் குறைந்து, பின்பு அடியோடு மறையும்.

'செய்வது மட்டுமே என் கடமை, அதனால் ஏற்படும் பலாபலன்களுக்கு நான் மட்டுமே பொறுப்பில்லை’ என்று எண்ணுவதுகூட விரக்தி மனப்பான்மையைப் போக்கும்.  

மற்றவர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்கள். அது விரக்தி மனப்பான்மையை நீக்கும். ''உங்களுக்கு நரம்புப் பிரச்னை வர விருக்கிறது என்று தோன்றுகிறதா? அதேபோன்ற பிரச்னையால் வேதனைப்பட்டுக்கொண் டிருக்கும் ஒருவருக்கு உங்களால் முடிந்த உதவி களைச் செய்யுங்கள். இதனால் உங்கள் பிரச்னையும் சரியாவதை நீங்கள் உணர்வீர்கள்'' என்கிறார் டாக்டர் கார்ல்​மேனிங்கர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism