<p>சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்கன் ஓப்பன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெற்றிக் கோப்பையை பெற்ற சானியா மிர்சா, 'அந்தக் கோப்பையை புத்தம் புதிய மாநிலமான தெலங்கானாவுக்கு அர்ப்பணம்’ என்று சொல்லியிருக்கிறார். சமீபத்தில் அவரை தெலங்கானாவின் நல்லெண்ணத் தூதராக தெலங்கானா அரசு நியமித்தது. அப்போது எழுந்த சர்ச்சைகளுக்கு தனது இந்த வெற்றி சமர்ப்பணத்தின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார். விளையாட்டுக் களத்தில் மட்டும் அல்ல; அரசியல் களத்திலும் தான் கில்லி என்று நிரூபித்து இருக்கிறார். கூடவே, 'நான் எப்போதும் தெலங்கானாவின் செல்ல மகள்தான்’ என்று பஞ்ச் வேறு வைத்து இருக்கிறார்.</p>.<p>டென்னிஸ் போட்டிகளில் ஆஸ்திரேலியா, ஃபிரெஞ்சு, அமெரிக்கா ஓப்பன் என மூன்று கிராண்ட் ஸ்லாம் பதக்கங்களை வென்ற இந்தியப் பெண்மணி இவர் மட்டும்தான். லியாண்டர் பயஸுடன் இணைந்து விளையாடி இரண்டு முறையும், 2014 அமெரிக்கன் ஓப்பன் போட்டியில் பிரேசிலின் ப்ரூனோ சோர்ஸ் உடன் இணைந்தும் பெற்று இருக்கிறார். இப்போது கலப்பு இரட்டையர் பிரிவில் இவர்கள் இணைதான் முன்னணியில் உள்ளது.</p>