வில் என்ற சொல்லைக் கேட்ட உடனேயே, நம் சிந்தனையில் இருவர் தோன்றுவர். ஒருவர், ராமாயணத்தின் கதாநாயகனாகிய ராமபிரான்; மற்றவர், மகாபாரதத்தில் வரும் வில் விஜயனான அர்ஜுனன். இருவருமே வில்லாற்றல்மிக்கவர்கள் என்பது மட்டும் அல்ல... போரில் அவர்களது வெற்றிக்கும் காரணமாக இருந்தது, அந்த 'வில்’ ஒன்றே!

'சிலை, கோதண்டம், சாபம், சார்ங்கம், தனுசு’ போன்ற பல பெயர்களைக் கொண்டது வில். பெண்களின் (நுதல்) நெற்றிப் புருவத்துக்கு உவமை சொல்லும்போது, 'இந்திர வில்’ (இந்த்ர சாபம்) என்ற சொல்லை இலக்கியங்களில் காணலாம்.

கோதண்டராமன்: ராமாயணத்தில் வில்லைப் பற்றிய செய்திகள் இரண்டு. ஒன்று, சிவபெருமானுடைய வில், தக்ஷ யக்ஞத்தில் சிவபிரானின் திருக்கரத்தில் இருந்தது. தக்ஷனது வேள்வியை அழித்த பின், இந்த வில்லை மிதிலையை ஆளுகிற மன்னவனாகிய தேவராதனிடம் கொடுத்து அருளினார் சிவபெருமான். அதன்பின் அந்தக் குலத்தில் வந்தவர்கள் அந்த சிவதனுசை வழிபாடு செய்துவந்தார்கள். அந்த மரபில் வந்தவரே ஜனக மகாராஜன். ஜனகனின் பெண்ணாகிய சீதை, ஒருநாள் பந்து விளையாடும்போது அந்த வில் வைத்திருக்கும் ஆசனத்தின் கீழ் பந்து சிக்கியது. சீதை அந்தப் பந்தை எடுக்கும் பொருட்டு, வில்லை அனாயாசமாக எடுத்து மூலையில் வைத்துவிட்டாள். இதை அறிந்த ஜனகர், சீதையின் பேராற்றலைக் கண்டு வியந்தார். 'இந்த சிவதனுசை வளைப்பவருக்கே சீதையைத் திருமணம் முடிப்பேன்’ என அறிவித்தார். பல அரசர்கள் இந்த வில்லை வளைக்க மாட்டாமல் இளைத்துத் திரும்பி, தோல்வி அடைந்தனர். தசரத குமாரன் ராமன் அந்த வில்லை நாண் ஏற்றும்போது, 'எடுத்தது கண்டனர்: இற்றது கேட்டனர்’ எனக் கூறும் கம்பர், அந்த வரிகளுக்கு ஏற்ப 'வில் ஒடிந்த ஓசையால் மூவுலகங்களும் அஞ்சின’ என வியக்கிறார்.

மற்றொரு வில், பரசுராமர் கரத்தில் இருந்தது. அந்த வில் திருமாலுடையது. அதை ருசிக முனிவரிடம் திருமால் கொடுக்க, அதை அவர் ஜமதக்னி முனிவரிடம் அளித்தார். ஜமதக்னியின் புதல்வரே பரசுராமர். ராமர் சீதையைத் திருமணம் செய்துகொண்டு அயோத்திக்குத் திரும்பும்போது பரசுராமர் எதிர்ப்பட்டார். க்ஷத்திரிய குலத்தின் மீது இருந்த கோபத்தினால் ராமனை நோக்கி, 'இந்த வில்லை வளை; நீ வலிமை உள்ளவனாயின் பிறகு உன்னோடு போர் புரிவேன்!’ என பரசுராமர் சூளுரைக்க, ராமன் அவரிடம் இருந்து அந்த வில்லை வாங்கி ஓர் இமைப்பொழுதில் வளைத்து நாணேற்றினார். இதற்கு இலக்காக தமது தவ வலிமையை பரசுராமர் அளிக்க, அந்த அம்பு பரசுராமரது தவத்தின் ஆற்றலை வாரிக்கொண்டு வந்தது. அந்த வில்தான் 'கோதண்டம்’ என அழைக்கப்படுவது. அதை ஏந்தியதால்,

ராமபிரானது பெயர் 'கோதண்டராமன்’ என ஆனது.

காண்டீப விஜயன்: மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களில் வில்லாற்றல் மிக்க அர்ஜுனனிடம் இருந்த வில் 'காண்டீபம்’ எனப்படும். இந்த அதிசய வில்லை அக்னியிடம் இருந்து பெற்றான். இதைக்கொண்டு பாரதப் போரில் எதிரிகளின் ஆற்றலை முறியடித்தான். பார்த்தனுக்கு அர்ஜுனன், பற்குணன், கிரீடி, தனஞ்செயன், சுவேத வாகனன், விபற்சு, விஜயன், கிருஷ்ணன், சவ்வியசாசி ஆகிய 10 பெயர்கள் உள்ளன. இதில் 'சவ்வியசாசி’ என்றால், இடது, வலது என்ற இரண்டு கைகளாலும் அம்பு தொடுப்பவன் என்று பொருள்.

அர்ஜுனன் தனது வில்லாற்றலைப் பற்றி பெருமையாக, 'இந்த வில்லிக்கு எந்த வில்லி எதிர்வில்லி?’ எனச் சூளுரைப்பானாம்.

'பாசுபதம்’ என்ற உயர்ந்த அஸ்திரத்தைப் பெறவேண்டி தவம் இருந்த பார்த்தனுக்கு எதிரில் கையில் வில், அம்புடன் வேட வடிவில் சிவபெருமான் வந்தார். அர்ஜுனனின் திறமைக்குப் பரிசாக பாசுபதத்தை அளித்தார் பரமன். இந்த வில் ஏந்திய சிவபெருமானை, 'கிராத மூர்த்தி’ (வேட மூர்த்தி) என்றும் 'பாசுபத மூர்த்தி’ என்றும் அழைப்பர். இதனை 'மலர் வரிச் சிலையும் வலக்கை மலர்ப் பாணமும் கொண்டு’ என வர்ணிப்பார் வில்லிப்புத்தூரார். இந்த அழகிய வடிவை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அருகே உள்ள 'திருவேட்களம்’ என்ற தலத்தில் தரிசித்து இன்புறலாம்.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் ஒரு வேட மூர்த்தி வடிவம் உள்ளது. 'பிரளயத்தின்போது சிருஷ்டி பீஜம் வைத்த குடம் வெள்ளத்தில் மிதந்து வர, சிவபெருமான் கையில் வில்லும் அம்பும்கொண்ட வேட உருவில் அந்தக் குடத்தின் மீது அம்பு எய்தி, மீண்டும் சிருஷ்டியைத் தோற்றுவித்தார்’ என தலபுராணம் குறிப்பிடுகிறது.

'வாகை சூடிய சிலை ராமனையும்’, 'வில்வாகை விஜயனையும்’, 'வில்லேந்திய சிவ வேடனையும்’ கண்ட நாம், வில்லைப் பிடித்த வேலனையும் அறிந்துகொள்ள வேண்டும்!

பன்னிரு கரங்களுடன் பலவகை படைக்கலங்களையும் உடையவன் ஆறுமுகப் பெருமான், 'அவனது மலர் போன்ற சிறந்த பாதத்தில் சிலம்பு அணிந்துள்ளான். இடையில் உடை வாள், ஒளிகொண்ட பருத்த தோள்களோடு பன்னிரு காதணிகள் விளங்கும் காதுகள். பாம்பை அடக்கும் மயில், வேல், சேவல், கூர்மையான சூலாயுதம் இவற்றுடன் ஒளிவீசும் நீண்ட வில்லைப் பிடித்த வெற்றியையும் நான் விரும்பித் தியானித்து...’ என முருகனின் வடிவழகைப் போற்றுகிறார் அருணகிரிநாதர்.

'வில்’ என்ற சொல்லுக்கு 'ஒளி’ என்றும் பொருள் உண்டு. எனவேதான், 'ஒளி வீசுகிற நீண்ட வில்லைப் பிடித்த வெற்றியுடையவன்’ என முருகனைப் பாடுகிறார். மாமனைப் போல்

மருமகனுக்கும் 'கோதண்டம்’ சிறப்பான ஆயுதமாகத் திகழ்கிறது ('சூலம், வாள், தண்டு, செஞ்சேவல், கோதண்டமும்...’ - திருச்செந்தூர் திருப்புகழ்).

மூங்கில், சிலை என்னும் மரம் முதலான வளையக்கூடிய நார்மரத்தால் செய்யப்படுவது வில். இந்த வில்லானது இருதலையிலும் தோல் அல்லது நார்க் கயிற்றால் கட்டப்பட்ட நாண் இருக்கும். வில்லை வளைத்து நாணை இறுகக் கட்டி அதன் நடுவில் அம்பைவைத்து விடுவார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு வில்லின் வலிவும் நாணின் உறுதியும் இழுத்து விடுபவனின் பலமும் இருக்கின்றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு அம்பின் வேகமும் அது தைக்கும் வன்மையும் அதிகரிக்கும். நுனியில் விஷம் தோய்த்துவைப்பதும் உண்டு. அதனால், அம்பு பட்டவுடன் இறந்துவிடுவார்கள். அம்பின் நுனி பிறைமதி போன்ற அமைப்பிலும் இருக்கும். இதற்கு 'பிறையம்பு’ என்று பெயர்.

கந்தனது கவின்மிகு கோலங்களில் அவன் வில்லை ஏந்திய வீரக்கோலம் தனிச்சிறப்பு உடையது. இந்த வடிவில் கந்தவேளை 'சம்ஹார மூர்த்தி’ என்று அழைப்பார்கள். சுப்ரமண்யர் அருள் பாலிக்கும் அற்புதத் தலங்களில் 'திருவிடைக்கழி’ என்னும் 'திருக்குராவடி’ குறிப்பிடத்தக்கது. நாகை மாவட்டம் திருக்கடவூர் அருகில் ஆறு கி.மீ தொலைவில் உள்ளது. இந்தக் கோயிலில் கருவறையில் சுப்ரமண்யருக்குப் பின்புறம் தனிக் கருவறையில் பாபநாசப் பெருமான் அருள்பாலிப்பது மிகவும் அதிசய அமைப்பாகும். இந்தத் திருக்கோயிலின் தலவிருட்சம் 'குராமரம்’. இந்த மரத்தடியில் குமரப்பெருமான் உலவியதை அருணகிரியார் திருப்புகழில் போற்றுகிறார். இங்கு உள்ள எல்லா வடிவங்களும் சுப்ரமண்ய சொரூபமாகவே காணப்படுவதும் சிறப்பு அம்சங்களாகும்.

திருவிடைக்கழியில் சூரபத்மனின் இரண்டாவது குமாரனான இரண்யாசூரனை, முருகப் பெருமான் சம்ஹாரம் செய்ததாக அந்தத் தலபுராணம் விவரிக்கிறது. அந்த சம்ஹார தினம் வைகாசி மாதம் சதய நட்சத்திர நாள் என்றும் குறிப்பிடுகிறது. இங்கு உள்ள வில்லேந்திய வேலன் 'இரண்யாசூர சம்ஹார மூர்த்தி’ என்று அழைக்கப் படுகிறார். இந்தத் தலத்தில் நடராஜருக்கு உரிய சபா மண்டபத்தில், முன் வலக்கரம் அம்புக்குப் பதில் வேலை ஏந்தியும் முன் இடக்கரம் வில்லைத் தாங்கியும் அருகில் அம்பிகையுடன் தோன்றும் மிக அற்புதமான வடிவம் உள்ளது. இந்த வடிவை நோக்கும்போது சிவபெருமானின் 'திரிபுரசம்ஹார வடிவம்’ நம் நினைவுக்கு வரும்.

காவிரிப்பூம்பட்டினம் அருகில் உள்ள 'சாயாவனம்’ என்னும் திருச்சாய்க்காடு தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். இந்தத் திருக்கோயிலில் காணப்பெறும் வில் ஏந்திய வடிவம் வரலாற்றுச் சிறப்புடையது. அந்தச் செப்புத் திருமேனியின் கீழ் 'திருச்செந்திலாண்டவன்’ என்று பொரிக்கப் பெற்றுள்ளதைக் காணும் போது, அது திருச்செந்தூர் கோயிலைச் சார்ந்தது என்று அறியலாம். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டினரால் திருச்செந்தூர் கோயிலில் இருந்து இந்தச் சிலை கொள்ளையடிக்கப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டது. கப்பல், புயலில் சிக்கித் தடுமாறவே கொள்ளைக்காரர்கள் செய்வதறியாமல், அதை காவிரிப் பூம்பட்டினத்துக் கடற்கரையில் போட்டனர். சாயாவனத்து மக்கள் அதை எடுத்து தமது ஊரில் உள்ள சிவன் கோயிலில் வைத்துக்கொண்டதாகவும் அறிய முடிகிறது.

வில் ஏந்திய வேலனாம் அவனது திருவுருவ அழகைப் பார்த்து ரசிப்போமா! 'மூன்றடி உயரத்தில் கோதண்டம் ஏந்திய கையனாகக் காட்சி கொடுப்பார். வில்லுக்கு ஏற்ற அம்பு ஒரு திருக்கரமும் சக்திவேல் ஏந்திய ஒரு திருக்கரமும் அந்த உருவை அழகு செய்யும். உயர்ந்து நீண்ட வேல் ஒன்றையும் ஏந்துவதற்காக அவன் அளவிடற்கரிய எழிலோடு இடையினை வளைத்து, தலையினைச் சாய்த்து நிற்கும் நிலை, அவன் கலை உரைக்கும் கற்பனையை எல்லாம் கடந்து நிற்பவன் என்பதைக் காட்டும். தலையில் உயர்ந்து நீண்டு கம்பீரமாக இருக்கும் கிரீடம்; கழுத்தை அலங்கரிக்கும் அணிகொள் முத்தாரம்; தோளில் புரளும் வாகுவலயம்; மார்பிலே இருக்கும் யக்ஞோபவீதம்; இடையிலே இருக்கும் கச்சை; காலிலே கிடக்கும் கழல் எல்லாமே மூர்த்தியின் கம்பீரத்தையும் வீரத்தையும் பறை சாற்றும். இந்த வில் ஏந்திய வீரனின் உதடுகளில் தவழும் புன்னகையோ உங்களை அடிமை கொள்ளும். இந்த மூர்த்தியைக் காண்பதற்காகவே சாயா வனத்துக்குப் போய் வரலாம்’ என அவனது ரூபலாவண்யத்தை ரசித்து எழுதியுள்ளார் அமரர் தொ.மு.பாஸ்கர தொண்டைமான்.

திருவையாறு ஐயாறப்பர் திருக் கோயிலில் திகழும் திருமுருகன், வில் ஏந்திய வடிவத்துடன் வள்ளி தேவ சேனை சமேதராகக் காட்சி அளிப்பார். இந்த மூர்த்தியின் ரூப சௌந்தர்யம் ராமபிரானை நினைவுறுத்தும். 'கனமாய கபடன் மாமுடி... கருணைமால் கவிகோப க்ருபாகரன் மருகோனே’ என இங்குள்ள வில் ஏந்திய வேலனைப் பார்க்கும்போது ராமன் நினைவு வந்ததுபோல் ராமனது வில் வீரத்தையும் பாடி, அவனது மருகோனே என்று திருவையாறு திருப்புகழில் அருணகிரியார் போற்றி மகிழ்கிறார்.

பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் நெய்வேலி நகரில் அமைந்துள்ள 'வில்லுடையான்பட்டு’ என்ற திருக்கோயிலில் உள்ள மூலமூர்த்தி வில் ஏந்திய கோலத்தில் காட்சியளிக்கிறார். சிவலிங்க வடிவில் இருபுறமும் தேவியர்சூழ அமைந்த அரிய அமைப்பு. இந்தப் பகுதி ஒரு காலத்தில் 'அத்திப்பட்டு’ என்று அழைக்கப்பட்டது என்பதை அருணகிரிநாதரின் 'அத்திப்பட்டு திருப்புகழ்’ நமக்கு உணர்த்துகிறது. அத்திப்பட்டில் வில்லுடையவனாகக் காட்சியளிப்பதால், ஊர்ப் பெயர் 'வில்லுடையான்பட்டு’ என்று ஆகியுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கம்பத்து இளையனார் சந்நிதியில் ஓர் அற்புதமான வேலவன் வடிவம் காணக் கிடைக்கிறது. ஒரு முகம் ஆறுகரங்களுடன் கூடிய இந்த அழகான முருகனை வில் ஏந்திய கோலத்தில் காணும்போது இவன் 'கோதண்ட ராமனோ?’ என்கிற ஐயம் எழும். 'ஆதி ரகுராம ஐய மாலின் மருகா பெரிய ஆதி அருணாபுரியில் உறைவோனே’ என்று இந்த வடிவைப் பார்த்து அருணகிரியார் பாடியிருப்பார் போலும்! கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம், தேனுபுரீஸ்வரர் கோயிலில் உள்ள மகா மண்டபத்தூணில் உள்ள வில்லேந்திய வடிவம் தஞ்சை நாயக்கர் காலத்து சிற்ப அழகுடையது. இடது கால் மயில் மேல் கொண்டு கோதண்டம் ஏந்திய வடிவம். வள்ளியும் தேவயானையும் இணைந்து நிற்கும் எழிற்கோலம் தூணின் மறுபுறம் அற்புதமாக உள்ளது.

பஞ்சலோகப் படிமங்களில் அமைந்துள்ள வில் ஏந்திய கோலம் பெரும்பாலும் வலது காலை மயில் மீது வைத்த நிலையிலும், வலது முன்கையில் அம்பும், இடது முன்கையில் வில்லும்கொண்டு, பின் இரு கரங்களில் சக்தியும், வஜ்ரமும்கொண்டு விளங்குகிறது. இந்த மாதிரியான வடிவங்கள் திருப்போரூர், திருவேற்காடு, சேயூர், சிவபுரம், முஷ்ணம், திருக்கடவூர் மயானம், மேலக்கடம்பூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், திருவாவடுதுறை, சுவாமிமலை, சீர்காழி போன்ற 60-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்சியளிப்பது, இதன் அருமையையும் பெருமையையும் உணர்த்தும்.

'திருவேரகம்’ என்னும் சுவாமிமலை திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில், வள்ளி திருமணவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். முதல் நாள் சுவாமி மலைக்கு அருகில், அரசலாற்றின் தென்கரை யில் அமைந்துள்ள திருவலஞ்சுழி திருக் கோயிலில் வள்ளியம்மை தினைப்புனம் காட்சி அற்புதமாக இருக்கும். இதற்காக சில மாதங்களுக்கு முன்னதாக அங்கு தினை விதைத்து, அதனை நன்கு வளரச் செய்வார்கள். அதன் நடுவே வள்ளிஅம்மையை எழுந்தருளச் செய்து 'ஆயல் ஓட்டும் அழகு வள்ளி’யை அலங்கரிப்பர். தினைப்புனம் எதிரில் முருகன் வேங்கை மரமாகவும், வேடனாகவும், விருத்தனாகவும், தெய்வக்குமரனாகவும் ஒரே மூர்த்தியில் பல்வேறு நிலைகளில் காட்சியளிப்பான். விடியற்காலையில் அரசலாற்றில் வள்ளியை யானை விரட்டுதல், வள்ளி, முருகனை மணக்க சம்மதித்தல் முதலான ஐதீகக் காட்சிகள் நடைபெறுகின்றன. இதில் விநாயகர், முருகனின் வேண்டுகோளை ஏற்று யானை வடிவில் வந்து வள்ளியைத் துரத்தும் (நிஜ யானை) காட்சியைக் காணும்போது தத்ரூபமாக நம்மைப் பரவசமடையச் செய்யும். இதில் முருகனின் வில் ஏந்திய வடிவையும் வள்ளியின் தினைப்புனம் காக்கும் வடிவையும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது... கண்டவர் விண்டிலர்!