ஈழத்தில் போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. நேரடி யுத்தத்தில் சிதைந்த ஈழம், அதற்குப் பிறகான உளவியல் யுத்தத்தால் மேலும் சிதைந்தது. ஒவ்வொரு வீட்டிலும் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்திருக்கும் மக்கள் ஓரளவுக்காவது மீண்டிருக்கிறார்களா, பொருளாதாரம், கலாசாரம், தொழில், உரிமை என என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன?

சமீபத்தில் குறும்பட விழா ஒன்றில் பங்கேற்க, ஓவியர் டிராட்ஸ்கி மருதுவும் இயக்குநர் கவிதாபாரதியும் யாழ்ப்பாணம் சென்று வந்திருக்கிறார்கள். கலை, இலக்கியம், சமூகம், மக்களின் இயல்பு வாழ்க்கை என அங்கே நிலவும் சூழலை, அவர்கள் இருவரும் இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள்.

''இலங்கையில் புகழ்பெற்ற தமிழ் ஊடகவியலாளராக இருந்தவர், அமரர் ராஜ ஸ்ரீகாந்தன். அங்குள்ள தினகரன் நாளிதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர். அவருடைய நினைவாக, கரவெட்டியைச் சேர்ந்த் 'அட்சரம்’ எனும் அமைப்பு ஒரு குறும்படப் போட்டியை அறிவித்திருந்தது. அந்த விழாவுக்கு நடுவர்களாக என்னையும் கவிதாபாரதியையும் அழைத்தார்கள். மௌனகுருவும் உமா வரதராஜனும் குறும்படங்களைப் பரிசீலித்து எங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

ஈழத்தில் வசிக்கும் இளைஞர்களும் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வசிக்கும் இளைஞர்களும் பரவலாகக் குறும்படங்கள் எடுக்கிறார்கள். அவர்களில் சிலர், சர்வதேச அளவில் கவனம் பெறவும் தொடங்கியிருக்கிறார்கள். உலகுக்குச் சொல்ல அவர்களிடம் வலிமிகுந்த அனுபவங்கள் உள்ளன. பயிற்சியும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் கூடிவரும்போது, இன்னும் பல நல்ல படைப்புகள் அவர்களிடம் இருந்து வரும்'' என்கிறார் மருது நம்பிக்கையோடு.

''நாங்கள் சென்ற தமிழர் பகுதியில் உள்ள மக்கள், யுத்தத்தின் பாதிப்புகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் அனுபவித்தவர்கள். இப்போது யுத்தம் இல்லை. ஆனால், கண்காணிப்புக் கெடுபிடி இருக்கிறது. அவர்களுக்கு சொல்ல நிறையக் கதைகள் இருக்கின்றன. ஆனால், அதை திரைப்படங்கள் மூலமாகவோ, குறும்படங்கள் மூலமாகவோ நேரடியாகச் சொல்வதற்கான சூழ்நிலை அங்கு இல்லை. அதை மீறித்தான் அந்தப் படைப்பாளிகள் இயங்க வேண்டிஇருக்கிறது' என்கிறார் கவிதாபாரதி.

''நம் மண்ணின் கலைகள், மொழி, கலாசாரம் ஆகியவற்றை நாம் தொலைத்துவிட்டோம். அதைப் பற்றிய தெளிவு நமக்கு இல்லை. ஆனால், கலாசாரத்தையும் பண்பாட்டையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் எனும் முனைப்பும் தெளிவும் ஈழத் தமிழர்களிடம் அதிகமாக இருக்கிறது'' - இது மருதுவின் கருத்து.

''அந்த யுத்த பூமியில் உருவாகியுள்ள வெற்றிடத்தை தேர்தல் அரசியல் நிரப்பி விடாது. அந்த வெற்றிடத்தின் வேதனைகளையும் துக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் பேச, அவர்கள் கலை இலக்கியத்தைத்தான் கருவியாக நம்பியிருக்கிறார்கள். சோவியத் மக்களின் போராட்ட நினைவுகள், வெறும் அதன் வரலாற்றில் இல்லை; அது படைத்த இலக்கியங்களில் நிற்கின்றன என்பதுபோல, ஈழத்திலும் இன்னும் மிக வீரியமான கலை இலக்கியப் படைப்புகள் உருவாகும். அதற்கான அடிப்படைத் தேவையும் முயற்சிகளும் அங்கு நிறைய இருக்கின்றன'' என்கிறார் கவிதாபாரதி.

மருதுவின் வன்னி அனுபவங்கள்....

''மூன்றாவது முறையாக வன்னிப் பெருநிலம் எனச் சொல்லக்கூடிய வட மாகாணத்துக்குச் சென்றுவந்தேன். கடந்த இரண்டு முறையும் மக்களிடம், தங்கள் லட்சியம் நிறைவேறும் நம்பிக்கையை மட்டுமே பார்த்தேன். ஆனால், இப்போது அவர்கள் தங்கள் கனவு கொடூரமாகச் சிதைக்கப்பட்ட வலியோடும் தோற்கடிக்கப்பட்ட மனநிலையோடும் இருக்கிறார்கள்.

வெளிப்படையான ராணுவக் கட்டுப்பாடுகள் இப்போது இல்லை. ஆனால், நான்கு பேர் அமர்ந்து

பேசும்போது, அதில் ஒருவர் தெரியாதவராக இருந்தால், மனம் திறந்து பேசத் தயங்குகிறார்கள். பொதுவாக, தங்களின் அடிப்படைத் தேவைகளுக்கு அப்பால் வேறு எதைப் பற்றியும் தங்களுக்குள்ளாகவே பேசிக்கொள்ளத் தயங்குகிறார்கள். யுத்தத்தின் வலியும் அதன் பின்னர் கிடைத்த அனுபவங்களும் அப்படி ஓர் அவநம்பிக்கையை அவர்களிடம் உருவாக்கியிருக்கிறது. முன்னர் இருந்த நிலை மாறி பிரமாண்டமான, பளபளப்பான சாலைகள் நிலங்களைக் கிழித்துக்கொண்டு பாய்கின்றன. ஆனால், இதுவும் ஒருவகையில் அதிகாரத்தின் குறியீடாகத்தான் எனக்குத் தோன்றியது. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வீடுகளுக்குச் சென்றால், ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் அந்தக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு மாவீரரின் படமாவது இருக்கும். அந்தப் படங்களின் கீழ்தான் புலம்பெயர் தமிழர்களின் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் வளர்கிறார்கள். இப்போது எங்கள் பயணத்தில் கிளிநொச்சியில் இருக்கிற கவிஞர் தீபச்செல்வனின் வீட்டுக்குச் சென்றோம். அவர் வீட்டில் வீர மரணமடைந்த அவரது அண்ணனின் ஓவியத்தை மாட்டிவைத்திருந்தார். அது, நான் வரைந்து கொடுத்த ஓவியம் என்பது எனக்குச் சிலிர்ப்பூட்டியது.

வன்னிப் பகுதி முழுக்க மாவீரர்கள் துயிலும் இல்லங்கள் சிதைக்கப்பட்டு, ராணுவத்தின் வெற்றிச் சின்னங்கள் ஆகியிருக்கின்றன. ஈழ மக்களின் மனங்களில் இருந்து அந்த நினைவுகளை அழிக்க முயல்கிறார்கள். ஆனால், மக்களின் மனங்களில் இருக்கும் மாவீரர்களின் நினைவுகள் எதையும் அழித்துவிட முடியாது என்பதை உணர முடிந்தது'' என்கிறார் மருது.

''இப்போது ஈழ மக்களுக்கு உடனடித் தேவை நிம்மதியான ஒரு வாழ்க்கை. நீண்ட கால யுத்தம் துரத்திய வடுக்கள் ஆற, ஆண்டுகள் பல ஆகும் எனும் நிலையில், நிரந்தரமான அமைதியையே அவர்கள் கேட்டு நிற்கிறார்கள். அரசியல் தேவைகள் ஒரு பக்கம் இருந்தாலும், அன்றாடத் தேவைகளே பெரும்பாடாக இருக்கின்றன. யுத்தத்தின் சிதிலங்களில் இருந்து மீண்டு எழ நினைக்கும் ஒரு சமூகத்தின் போராட்டமே, இப்போதைய ஈழத் தமிழர் வாழ்க்கை. நீண்ட காலத்துக்குப் பிறகு மெள்ள மெள்ள இப்போதுதான் விவசாயம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இனி, மீண்டு எல்லாம் தளிர்த்து வளர வேண்டும்'' என்கிறார் கவிதாபாரதி

மருது தொடர்கிறார்... ''யாழ் கலைஞர்கள் சிலரைச் சந்தித்து உரையாடுவதற்கு எனது நீண்ட நாள் நண்பரும், வடக்கு மாகாண அமைச்சருமான ஐங்கரநேசன் ஏற்பாடு செய்திருந்தார். இந்தச் சந்திப்பில் யேசுராசா, ஓவியர் ஆசை ராசய்யா மற்றும் சில எழுத்தாளர்களையும், இளம் குறும்பட இயக்குநர்களையும் சந்தித்து உரையாடினோம். யாழ் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப் பேராசிரியர்கள் சனாதனன், அகிலன் ஆகியோரையும் சந்தித்து உரையாடினோம்.

சனாதனன் ஓர் ஓவியர், கலை விமர்சகர். போரால் இடம் பெயர்ந்த எளிய மக்களிடம் அவர்கள் வீடு பற்றிய நினைவுகளை, அவர்களைக் கொண்டே ஓவியமாக வரையச் செய்து, அதையொட்டிய ஓவியங்களையும் சேர்த்து ஓவியக் கோவையாக ஒரு புத்தகத்தை அவர் வெளியிட்டிருக்கிறார். அதன் உள்ளடக்கமும் நேர்த்தியும் எங்களை மிகவும் கவர்ந்தன.

கொழும்பில் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவையும், கலாநிதி கைலாசபதி அவர்களின் துணைவியாரையும் சந்திப்பதற்கு மேமன்கவி ஏற்பாடு செய்திருந்தார். உடல்நலக் குறைவால் களைப்புற்றிருந்த ஜீவாவுடன் அதிக நேரம் பேச இயலவில்லை. எனினும், திருமதி கைலாசபதியுடன் பல கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது. மேமன் கவியும் அவரது நண்பர்களும் சிங்கள மொழிப் படைப்புகளைத் தமிழுக்கும், தமிழ்ப் படைப்புகளை சிங்கள மொழிக்கும் மொழியாக்கம் செய்கிறார்கள். இது, கலாசாரப் பரிவர்த்தனைபோல கொழும்பில் நடக்கிறது. இன்னொரு பக்கம் முள்ளிவாய்க்கால் போர் வடுக்களும் ஓவியங்கள் ஆகியிருக்கின்றன.

முள்ளிவாய்க்கால் செல்லும் வழியில், ராணுவம் ஒரு திறந்தவெளிக் கண்காட்சி வைத்திருக்கிறது. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை, தங்கள் வெற்றிச் சின்னங்களாக அங்கே காட்சிப்படுத்தியிருக்கிறது இலங்கை ராணுவம். ஓர் ஆள் மட்டுமே பயணிக்க முடியும் சிறு படகு முதல், மாபெரும் நீர் மூழ்கிக் கப்பல்கள் வரை அங்கே உள்ளன. டாங்கிகள், பிரமாண்ட வெடிகுண்டுகள் ஆகியவற்றையும் அங்கே பார்க்க முடிந்தது. வல்லரசு நாடுகள் மட்டுமே தயாரிக்க இயலும் யுத்தத் தளவாடங்களை எளிய சாதனங்களைக்கொண்டு தயாரித்துப் பயன்படுத்திய புலிகளின் தொழில்நுட்ப அறிவு வியக்கவைத்தது.

அங்கு நடந்த விடுதலைப் போரைத் தோற்கடித்து, அதன் சின்னமாக நிறுவப்பட்ட ஆயுதக் கண்காட்சியின் முன்பாக இரண்டு தமிழ் இளைஞர்கள், அந்தக் கண்காட்சியைச் சுற்றிப் பார்ப்பவர்கள் கொறிக்க, வறுத்த வேர்க்கடலையை விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இறுதிப் போரில் கால்களை இழந்தவர்கள். போருக்குப் பிந்தைய அவர்களின் வாழ்வின் முரண் இதுதான்' என்கிறார் மருது!