இந்தியாவில் ஆண்டுதோறும் 'ஃப்ளெமிங்கோ ஃபெஸ்டிவல்’ என்று ஒன்று நடப்பது பலருக்குத் தெரிந்திருக்காது. ஜனவரி 9, 10, 11 தினங்களில் அந்த விழாவை ஆந்திர அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. 'அப்படியா’ என ஆச்சரியப்படும் சிலருக்கு, இன்னும் ஓர் ஆச்சர்யம். அந்த விழாவை அலங்கரிப்பது தமிழகத்தைச் சேர்ந்த கேமரா கலைஞர் அமர்நாத் எடுத்த புகைப்படங்கள்.

இப்போது திருப்பதி தேவஸ்தானத்தில் தலைமை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் அமர்நாத்தின் ஆர்வம், வைல்டுலைஃப் போட்டோகிராபி. ''சிறுவயதில் கானுயிர் போட்டோகிராபர் சேகர் தத்தாரியின் பேட்டி ஒன்றை படித்ததனால், அந்த ஆர்வம் தொற்றிக்கொண்டது'' என்கிறார்.

பறவைகள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் மனிதருக்கு ஆர்வம் ஊற்றெடுக்கிறது. ''பெலிகன் பறவையிடம் ஒரு காதல் நாகரிகம் உண்டு. ஆண் பறவை, தான் விரும்பும் பெண் பெலிகனிடம் ஒரு குச்சியைக் கொண்டுவந்து கொடுக்கும். அதை பெண் பறவை வாங்கி, தன் கால்களுக்கு அடியில் வைத்துக்கொண்டால், 'ஐ டூ லவ் யூ’ என்று அர்த்தம். தட்டிவிட்டுப் போய்விட்டால், காதல் மறுக்கப்பட்டது என்று அர்த்தம். பொதுவாக, ஆண் பறவை மூன்று முறை தன் காதலைத் தெரிவிக்க முயற்சி செய்கிறது. மூன்று முறையும் குச்சி தட்டிவிடப்பட்டால், வேறு முயற்சியில் இறங்குகிறது. மனிதர்கள் செய்வதுபோல ஆசிட் அடிப்பது இல்லை.

தன் நீண்ட அலகுகளை ஒரு பை போல பயன்படுத்தும் வசதி பெலிகன் பறவைகளுக்கு உண்டு.

அதில், சுமார் மூன்று கிலோ எடை வரை இரையைச் சுமந்து செல்லும்!'' என்கிறார்.

அரிதான 70-க்கும் அதிகமான பறவைகளைப் படம் பிடித்து வைத்திருக்கிறார் அமர்.

ரெட் புல் என்று ஒரு பறவையை, அதன் காதல் பருவம் முதல் குஞ்சு பொரித்து, அந்தக் குஞ்சுகள் பறக்கிற வரை புகைப்பட ஆவணமாக எடுத்திருக்கிறார். ''குஞ்சு பொரித்த நான்காம் நாளிலேயே பறக்கக்கூடிய பறவை இது. தைரியமான பறவை'' என்று சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறார்.

ஐ.டி.சி நிறுவனம், தாங்கள் தயாரிக்கும் நோட்டுப் புத்தகங்களுக்கு இவருடைய பறவைகள் படங்களைப் பிரசுரிக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். மும்பை நேச்சுரல் ஹிஸ்ட்ரி சொஸைட்டியின் காலண்டர், டைரிகளில் இவர் படங்கள்தான்.

''திருப்பதி மலையில் நான்கு பருவக் காலங்களை சித்திரிக்கும் டாக்குமென்ட் மன நிறைவான பணியாக இருந்தது'' என்பவர், திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படிக்கும்போது முதன்முதலாக இயற்கை விவசாயத்தைப் பற்றிய ஆவணப்படம் எடுத்தார். 2006-ம் ஆண்டில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் தனக்கு மட்டுமல்ல; இயற்கை விஞ்ஞானிக்கும் முதல் ஆவணப் பட அனுபவமாக இருந்தது'' என்று நெகிழ்கிறார்.

''நம்மாழ்வார் இறப்பதற்கு முன் நெல் திருவிழா பற்றியும் ஓர் ஆவணப்படம் எடுக்குமாறு சொன்னார். அவர் உயிருடன் இருக்கும்போதே அதை நிறைவேற்றத் தவறிவிட்டது மன வருத்தம்தான். விரைவில், அவருடைய ஆசையை நிறைவேற்றுவேன்'' என்கிறார் அமர்நாத்.