திருமணம் நிச்சயம் ஆனதும் மண்டபம் பிடிக்கிறோமோ இல்லையோ, பலரும் முதலில் ஒப்பந்தம்செய்வது போட்டோகிராபரையும் வீடியோகிராபரையும்தான். பல வருடங்கள் கடந்தும், இனிய நினைவுகளைத் தக்கவைத்துக்கொள்ளும் பொக்கிஷம், புகைப்படங்களே! திருமணம், குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகள், சுற்றுலா என அத்தனை மகிழ்ச்சியான தருணங்களையும் அவரவருக்குப் பிடித்த மாதிரி, வசதிக்கு ஏற்ப படம் எடுத்துக்கொள்கிறோம். இன்றைக்கு நாமே செல்ஃபி, குரூஃபி எனக் கலக்கலாக எடுத்துத்தள்ளுகிறோம் என்றாலும், சில அற்புதமான தருணங்களை கைதேர்ந்த கலைஞர்களால்தான் மறக்க முடியாத நினைவுகளாக மாற்ற முடியும்.

வெளிநாடுகளில் திருமணங்களைப் புகைப்படம் எடுக்கும் கலைஞர்கள், இன்னும் ஒரு படி மேலே போய், இதில் பல வித்தியாசங்களைப் புகுத்தத் தொடங்கிவிட்டார்கள். 'கிரேன் போட்டோகிராபி’, ஹெலிகேம் எனப்படும் குட்டி ஹெலிகாப்டரை வைத்து எடுக்கப்படும் 'ஏரியல் போட்டோகிராபி’ என வளர்ந்த இந்தத் தொழில்நுட்பம் இப்போது புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. அது, தண்ணீருக்கு அடியில் புகைப்படங்கள் எடுக்கும் 'அண்டர்வாட்டர் போட்டோகிராபி’.

திருமணங்களையும் முக்கிய நிகழ்வுகளையும் தண்ணீருக்கு அடியில் புகைப்படம் எடுக்கும் கான்செப்ட்டை உருவாக்கியிருக்கிறது 'டெல் சோல்’ (del sol) என்கிற மெக்ஸிக்கோ நிறுவனம்.

'தண்ணீர் நம்மைக் குளுமைப் படுத்தும் முக்கிய விஷயம். ஏற்கெனவே திருமணக் குதூகலிப்பில், களிப்பில் மிதக்கும் புதுமணத் தம்பதியரை நீருக்குள் இறக்கும்போது இன்னும் அதிக சந்தோஷத்தையும் அதற்கான உணர்வுகளையும் வெளிப்படுத்துவார்கள். தண்ணீருக்குள் முழுமையாக அமிழ்ந்த நிலையில் கனம் குறைந்து மிதக்கும்போது, நம்மையும் அறியாமல் பல ரசனையான காட்சிகள் சிக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக தண்ணீர்ப் புகைப்படங்கள், வித்தியாசமான வேறு ஓர் உலத்தைப் பிரதிபலிக்கும். ஒருவரை ஒருவர் விட்டுவிடாமல் பிடித்திருப்பது, முத்தங்களைப் பரிமாறிக்கொள்வது என தம்பதியர் இருப்பார்கள். காதல் திருமணம் செய்துகொள்ளும் பலர் தங்களின் ரொமான்டிக் தருணங்களை அப்படியே பதிவுசெய்துதரக் கேட்கின்றனர்.

புதுமணத் தம்பதியர் மட்டும் இல்லாது, கர்ப்பமான பெண்கள், குடும்பங்கள் எனப் பலரும் ஆசையுடன் இந்தத் தண்ணீர் புகைப்படங்களை எடுத்துக்கொள்கிறார்கள். சிலர் தண்ணீரைக் கண்டாலே பயப்படு வார்கள். அவர்களை ஆழமான கடலில் இறக்கிவிட முடியாது. சிலரால் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் மூச்சை அடக்க முடியாது. இவை எல்லாம் சரியாக அமைந்தாலும், ஒரு புகைப்படத்தைக் கச்சிதமாக எடுக்க குறைந்தபட்சம் ஒரு நாள் ஆகும். கடலுக்குள் கண்ணாடிக் கூண்டுகள் அமைப்பதிலும் சில பிரச்னைகள் உள்ளன. எனவே, கடல் செட்டிங்கை அப்படியே ஸ்டூடியோவிலும் போட்டு வைத்திருக்கிறோம். ஒரு ஹாலிவுட் படத்தின் காட்சியை எடுப்பதுபோல இதற்கும் மெனெக்கெடுகிறோம்’ என்கிறார்கள்.

நம் இந்திய மதிப்பில் லட்சங்கள் முதல் கோடிகளைத் தொடுகின்றன இவர்களின் புகைப்பட பேக்கேஜ்கள்!