தாய்லாந்துக்குச் செல்ல நினைத்தால், கலர்ஃபுல் குடைத் திருவிழா நடக்கும் ஜனவரியின் கடைசி இரண்டு வாரங்களைத் தேர்ந்தெடுங்கள்.

தாய்லாந்து நாட்டில் இருக்கும் ஒரு சின்ன கிராமம்தான் போ சாங். இந்த ஊரைச் சேர்ந்த ஒருவர், 40-களில் மியான்மர் நாட்டுக்குச் சென்றபோது, அங்கே 'சா’ எனும் ஒருவித காகிதத்தால் குடை செய்யப்படுவதைப் பார்த்தார். 'இதை எப்படிப்பா தயாரிக்கிறீங்க’ என வார்த்தைகளாலே மேனுவலை வாங்கிவந்து, ஊர் மக்களுக்குச் சொல்லித் தந்தார். முதலில் பார்ட் டைமாக ஆரம்பித்த மக்கள், வியாபாரம் சூடு பிடிக்கவே... இதையே தொழிலாக மாற்றிக்கொண்டார்கள். இவர்களின் ஆண்டுக் கண்காட்சிதான், குடைத் திருவிழா.

விவசாயிகள் திருவிழாவும் ஜனவரி மாதம்தான் என்பதால், மழை தொடங்கியதும் நாற்று நட்ட பிறகு, பிரமாண்டக் குடைத் திருவிழாவை ஆரம்பிப்பார்கள். போ சாங் நகரத் தெருக்கள் வண்ண வண்ணக் குடைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இப்போது சில்க், காட்டன், பேப்பர் என விதவிதமான குடைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் குடைகளை திருவிழா முடிந்த பின்பு வெயிலுக்கும் பயன்படுத்தலாம். குடைகளின் அழகை ரசிக்கவும், வாங்கவும், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இங்கு குவிகிறார்கள். மழையும் பெய்ய.. வண்ண வண்ண குடைகளும் அலங்கரிக்கப்பட்டிக்க... போ சாங் ஊரே... வாவ்... வாவ்!