கடல் பயணங்களுக்கும் விதவிதமான கப்பல்களுக்கும் பெயர் பெற்றவர்கள், டச்சுக்காரர்கள். நெதர்லாந்து நாட்டின் அழகிய நகரமான ஆம்ஸ்டர்டாமில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது, 'செயில் ஆம்ஸ்டர்டாம்’ என்ற படகுத் திருவிழா. ஆம்ஸ்டர்டாம் நகரின் 700-வது பிறந்தநாளைக் கொண்டாட, 1975-ம் ஆண்டு முதன்முறையாகப் படகுத் திருவிழா நடத்தப்பட்டது. அதற்குக் கிடைத்த 'லைக்ஸ்,’ இந்த விழாவை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வைத்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 19 முதல் 23 வரை நடந்த படகுத் திருவிழாவில் 600 படகுகள் கலந்துகொள்ள... கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் என படகுத் திருவிழா நடக்கும் ஐஜே நதி ஜெகஜோதியாக ஜொலித்தது.

நிகழ்ச்சி நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே, படகுகளைத் தேர்வு செய்யும் வேலைகளில் இறங்கிவிடுகிறது விழாக் குழு. உலகின் உயரமான படகுகள், அழகான படகுகள் என பல்வேறு பிரிவுகளில் படகுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்காக, உலகின் எல்லா நாடுகளுக்கும் இந்தக் குழு பயணிக்கிறது. தேர்வாகும் படகுகளை மட்டுமே ஆம்ஸ்டர்டாம் நகருக்கு வரவழைக்கிறார்கள். ஒவ்வொரு படகுக்கும் நேரமும் வழித்தடமும் தந்துவிடுவார்கள். அந்த வழியே சிக்கல் இல்லாமல் 600 படகுகளும் பயணித்துத் திரும்பும்.

நதியில் ஒற்றைப் படகை பார்ப்பதே அலாதியான அழகு. அதில், நூற்றுக்கணக்கான படகுகள் ஒன்றாகச் செல்வதை பார்ப்பது..! இதற்காகத்தான் படகுத் திருவிழாவின்போது 25 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள், இந்த நகரை நோக்கிப் பறந்து வருகிறார்கள். நதி ஒரு திசையில் பயணிக்கும்; அதில் செல்லும் படகு இரண்டு திசைகளிலும் பயணிக்கும். அதை ரசிக்கும் ரசிகனின் மனது, எத்தனை திசைகளில் வேண்டுமென்றாலும் பயணிக்கும். அந்தப் பரவசத்தை அனுபவிக்க, ஒருமுறையாவது படகுத் திருவிழாவைக் காண, ஆம்ஸ்டர்டாம் நகரத்துக்குச் செல்ல வேண்டும்!