இது தீபாவளி சீஸன் மட்டும் இல்லை; மாரத்தான் சீஸனும்தான்.

இந்தியாவில், அதுவும் சென்னையில் ஒவ்வொரு டிசம்பரும் மாரத்தான் ஜுரம் தொற்றிக்கொண்டுவிடும். ''உலகிலேயே மிகவும் சுலபமான விளையாட்டும் இதுதான்; மிகக் கடினமான விளையாட்டும் இதுதான்!'' என மின்னல் வீரர் உசேன் போல்ட் - ஓட்டப் பந்தயத்தைப் பற்றிச் சொல்வது, நீங்கள் பயிற்சியில் ஈடுபட்டால்தான் தெரியும். மற்ற விளையாட்டுப் போட்டிகள்போல இதற்கு முதலீடு, பண வசதி எதுவும் தேவைஇல்லை; அதனால், இது சுலபமான விளையாட்டு. அதேபோல், திறமை சம்பந்தப்படாமல், இது முழுக்க முழுக்க உங்கள் உள்ளுரத்தை (Stamina Level) மட்டுமே நம்பிச் செயல்படும் விஷயம் என்பதால், இது உலகிலேயே கடினமான விளையாட்டு. சென்னையில் ஒவ்வொரு டிசம்பர் மாதம் மிகப் பெரிய அளவில், அதாவது 42 கி.மீ கொண்ட முழு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. ஆனால், உலக அளவில் அதிபயங்கரமான மாரத்தான் போட்டிகள் ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நினைப்பதற்கே செம த்ரில்லிங்கான, நாள்கணக்கில் நடைபெறும் டாப்-7 மாரத்தான்கள் இவை...

டிராகன்ஸ் பேக் ரேஸ்

தூரம்: 300 கி.மீ

நேரம்: 120 மணி நேரம்

இடம்: வேல்ஸ், ஸ்காட்லாண்ட்

சிக்கல்கள்: குளிர், மலை ஆடுகள், நேவிகேஷன் பிரச்னை

முதன்முதலில் 1992-ம் ஆண்டு செப்டம்பரில்தான் இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. மலையேற்றம் செய்து பழக்கப்பட்டவர்கள் இதில் கலந்துகொள்வதுதான் உத்தமம். காரணம், 16,000 மீட்டர் தூரத்தை நீங்கள் மலை ஏறியே கடக்க வேண்டும். ஐந்து நாட்கள் நடக்கும் இந்தப் போட்டியில் காடு, மலை, பாதையே இல்லாத சாலைகள், தொலைந்து போனால் கண்டுபிடிக்க முடியாத வழிகள் அதிகம். இதில் மிகப் பெரிய சிக்கலாகக் கருதப்படுவது, வழித்தடம்தான். அதாவது, எந்தப் பாதையில் செல்வது என்பது இங்கு மிகக் குழப்பமாகவே இருக்குமாம். இதில் கலந்துகொண்ட ஒருவர், காட்டுப் பாதையில் தொலைந்துபோய் ஏழாவது நாள் திரும்பக் கிடைத்தாராம். இதில் அவர் 300 கி.மீ-க்கும் மேல் பல கி.மீ. தூரம் ஓடியும் எல்லையைத் தொட முடியவில்லை. இதில் மேலும் ஒரு சிக்கலான சிக்கல் - நடுநடுவே ஆயிரக்கணக்கில் உள்ளே புகும் மலை ஆடுகள் உங்கள் வழித்தடத்தை மாற்றும் அபாயமும் உண்டு. ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை காலை-மாலை-இரவு என ஒவ்வொரு வேளையிலும் சரியான எல்லைக் கோடுகளில் சந்தித்து, நீங்கள் சாப்பாடு வாங்கினாலே பாதி வெற்றி நிச்சயம். இதில், ஒவ்வோர் ஆண்டும் ரூட் மேப் மாறிக்கொண்டே இருக்கும்.

ஆர்க்டிக் அல்ட்ரா மாரத்தான்

தூரம்: 700 கி.மீ

நேரம்: 312 மணி நேரம்

இடம்: கனடா

சிக்கல்கள்: வெப்பக் குறைபாடு, கடுங்குளிர், பாதங்கள் ஆற்றலற்றுப் போதல்.

உலகின் சில்லென்ற மாரத்தான் இது. ஆனால், கனடாவின் பனிப் பிரதேசத்தில், சில நேரங்களில் மைனஸ் டிகிரியில் ஓட வேண்டியிருக்கும். மொத்தம் மூன்று பகுதிகளாக இந்த ஓட்டம் பிரிக்கப்படுகிறது. முதல் மூன்று நாட்களில் 100 மைல்; எட்டு நாட்கள் - 12 மணி நேரத்துக்குள் 300 மைல்; அடுத்து வரும் நாட்களில் மீதம் இருக்கும் ஜஸ்ட் 130 மைல்களைக் கடந்துவிட்டால், நீங்கள்தான் வின்னர். ஒரு குரூப்புக்கு ஒரு கைடு உதவியுடன் ஒரு 'ஸ்னோ வேன்’ அல்லது 'நாய் வண்டி’ உங்களைப் பின்தொடர்ந்து வரும் என்பதால், பனிப் புயலில் சிக்கினாலும் அபாயம் இருக்காது. ஒவ்வொரு செக் பாயின்ட்டிலும், நீங்கள் கிராஸ் செய்வதற்கான அத்தாட்சியாக கையெழுத்து போட மறக்கக் கூடாது. ஆனால், நீங்கள் கையெழுத்திடும் நேரத்துக்கும் உங்கள் டைமிங்குக்கும் சம்பந்தம் இல்லை. எல்லைக்கோட்டைத் தொடுவதுதான் விஷயம். கமிட்டியினர் கொடுக்கும் உணவு போதவில்லை என்றால், அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் சூப்பர் மார்க்கெட் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் எக்ஸ்ட்ரா மீல்ஸ் வாங்கிக்கொள்ளலாம். இதில் பொதுவாக, தனியாகக் கலந்துகொள்வதைவிட, கும்பலாகக் கலந்துகொள்வதுதான் பெஸ்ட். ஏனென்றால், தூங்குவதற்கு கட்டில், டென்ட், ஹெட் டார்ச், பேட்டரிகள், லைட்டர்கள், காம்பஸ் என எல்லாமே நீங்கள்தான் எடுத்துக்கொண்டு ஓட வேண்டும். ஓட்டப் போட்டி என்றாலே வியர்த்து விறுவிறுத்துத்தான் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்; இதில் சில்லென்ற குளிரில் ஓடி, வெயிலுக்கே தண்ணி காட்டலாம்.

ஜங்கிள் அமேஸான் அல்ட்ரா

தூரம்: 254 கி.மீ

நேரம்: 168 மணி நேரம்

இடம்: அமேஸான் காடு, பிரேஸில்

சிக்கல்கள்: புதை குழிகள், ஜாகுவார், அனகோண்டா, பிரானா போன்ற காட்டு விலங்குகள், கொசுத் தொல்லை, அட்டைப் பூச்சிக்கடி...

'மாரத்தான்களிலேயே மிகவும் டஃப்பெஸ்ட் மாரத்தான்’ என இதை அழைக்கிறார்கள். 'தினமும் 30 நிமிஷத்துல 10 கி.மீ ஓடி பயிற்சி எடுத்துட்டிருக்கேன்’ என்று சொல்பவர்கள்கூட, இதில் ஒரு கி.மீ தூரத்தைக் கடப்பதற்கு, கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் ஆகலாம். காரணம், அடர்த்தியான அமேஸான் காடு. எர்வாமாட்டின் தயாரிப்பதற்கு மூலிகைகள் கிடைக்கிறதோ இல்லையோ, உயிருக்கு உலை வைக்கக்கூடிய விஷயங்கள் அமேஸானில் நிறைய உள்ளன. யானைகளை விழ வைப்பதற்காக வெட்டி வைக்கப்பட்டிருக்கும் குழி; நெருப்புக் கண்களுடன் திடீரென உங்களைப் பின்தொடரும் ஜாகுவார்; கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் உணவுப் பொருட்களைத் திருட வரும் கன்னாபின்னா குரங்கு வகைகள்; லஞ்ச் பிரேக்கில் மெதுவாக ஊர்ந்து செல்லும் அனகோண்டா பாம்புகள்; ஆற்றுப் படுகைகளைக் கடக்கும்போது கடிக்கும் பிரானா மீன்கள்; இரவு உங்களுக்கு என வழங்கப்பட்ட 'ஹாம்மக்’ எனும் தொங்கு தொட்டில் அடித்துத் தங்கும்போது, முதுகில் கும்மியடிக்கும் அட்டைப் பூச்சிகள் - இவை எல்லாவற்றுக்கும் 'பெப்பே’காட்டிவிட்டு, எல்லைக்கோட்டைத் தொட வேண்டும். மொத்தம் ஐந்து ஸ்டேஜ்களாக இது நடத்தப்படும். ஒன்றிரண்டு ஸ்டேஜ்களைக்கூடக் கடக்க முடியாமல், 'இப்பவே கண்ணைக் கட்டுது’ என்று வாபஸ் வாங்கியவர்கள் பலர். இதில் கலந்துகொள்வதற்கு முன்பு, இதற்காகக் கொடுக்கப்படும் பிரத்யேகப் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்த பிறகுதான், இந்த மாரத்தானுக்கான அப்ளிகேஷனை நீங்கள் நிரப்ப முடியும்.http://www.junglemarathon.com/#/ எனும் இதன் வலைதளப் பக்கமே செம மிரட்டல்!

Marathon des Sables

தூரம்: 251 கி.மீ

நேரம்: 72 மணி நேரம்

இடம்: சஹாரா பாலைவனம்

சிக்கல்கள்: நுரையீரல் வறட்சி, தண்ணீர் தாகம், மணல் புயல், கடுமையான வெயில்.

1986-ம் ஆண்டில் பேட்ரிக் பூவர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இது, உலகின் மிக நீளமான, சிக்கலான மாரத்தான் போட்டிகளில் ஒன்று. முழுக்க முழுக்க சஹாரா பாலைவனத்தில் மட்டுமே நடக்கும் இந்த ரேஸை, சொற்பமானவர்கள் மட்டுமே நிறைவு செய்து வெற்றியடைந்து இருக்கிறார்கள். சஹாரா பாலைவனத்தின் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் நடக்கும் இந்த ரேஸில் நீங்கள் கலந்துகொள்ள, கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமே முடியும். இது முழுக்க முழுக்க மணற்பகுதியில் நடைபெறுவதால், ஒவ்வொரு தடவையும் கால் புதைந்துவிடும் வாய்ப்பும் உள்ளது. சில உயரமான மணல் முகடுகளையும் கடக்க வேண்டியிருக்கும் என்பதால், ட்ரெக்கிங் செல்வதுபோலவும் இருக்கும். எனவே, கால் பகுதி முழுவதும் கோணிச் சாக்குகளைக்கொண்டு கவர் செய்து நீங்கள் போட்டியில் கலந்துகொள்வது பெஸ்ட். தண்ணீர், முறையான சாப்பாடு, ஜூஸ் வகைகள், நடுவே டென்ட் அடித்துத் தங்க கூடாரம் எனப் பல முன்னேற்பாடுகள் செய்து தரப்படும். மொத்தம் 156 மைல்கள், அதாவது 251 கி.மீ தூரத்தை மூன்று நாட்களில் கடந்து முடிக்கும் சாதனையாளர்களுக்கு, மிகப் பெரிய பரிசுத்தொகையும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சியர்ஸ் கேர்ள்ஸின் முத்தங்களும் பரவசப்படுத்தும்.

லா அல்ட்ரா - தி ஹை

தூரம்: 333 கி.மீ

நேரம்: 72 மணி நேரம்

இடம்: இமயமலை, இந்தியா

சிக்கல்கள்: ஆக்ஸிஜன் குறைபாடு, மூச்சுத் திணறல், மலைத் தொடர்கள், வெயில், குளிர்.

பனிக்கு மட்டும் அல்ல; உயரம் என்று வந்துவிட்டாலும் இமயமலையை அடித்துக்கொள்ள எந்த மலையாலும் முடியாது. சிங்கிள் ஸ்டேஜ் போட்டியாக நடக்கும் இதைச் செல்லமாக 'தி ஹை’ என்றும் அழைக்கிறார்கள். கடுமையான குளிர், வெயில், மூச்சுத் திணறல், மைனஸுக்கு நெருக்கமான டிகிரியில் க்ராஸ் ஆகும் கால்வாய் - இவை எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் 333 கி.மீ தூரத்தை 72 மணி நேரத்தில் கடக்க வேண்டும். ஆரம்பநிலைப் போட்டியாளர்களுக்காக, 222 கி.மீ மற்றும் 111 கி.மீ ஆப்ஷனும் உள்ளன. இந்த மாரத்தானில் கலந்துகொள்ள, அதிக பயிற்சியும் தன்னம்பிக்கையும் தேவை. ஏனென்றால், சில உயரமான இடங்களில் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்து, வெறும் 40 சதவிகித அளவுக்கு மட்டுமே கிடைக்கும் அபாயம் உண்டு. இதனால், சிலர் இறந்துபோன சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. 'லின் ஹ்யூவெட்’ எனும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவர் 222 கி.மீ பிரிவில் கலந்துகொண்டு நிறைவு செய்தவர், ''ஐந்து நாட்களில் ஐந்து மாரத்தான்களை நிறைவுசெய்த அனுபவம் எனக்கு உண்டு. ஆனால், நான் கலந்துகொண்டவற்றிலேயே மிகவும் கொடூரமான மாரத்தான் இதுதான். லே-வில் இருந்து லடாக் வரை 222 கி.மீ பாதங்கள் விறைக்க ஓடி வந்ததை நினைத்தால், இப்போதும் கதி கலங்குகிறது'' என்கிறார்.

ஹார்டுராக் எண்ட்யூரன்ஸ்

தூரம்: 160 கி.மீ

நேரம்: 48 மணி நேரம்

இடம்: கொலாரேடோ, அமெரிக்கா

சிக்கல்கள்: புயல், ஆழமான பள்ளத்தாக்குகள், கடல் மட்டத்தில் இருந்து 3,500 மீட்டர் உயரம்.

'ஹார்டு ராக்’ என்று பெயருக்கு ஏற்றது போலவே, இந்தப் போட்டியும் சாதாரணமானது இல்லை. திடீர் திடீரென முளைக்கும் மலைப் பாறைகள், தடாலென இறங்கும் பள்ளத்தாக்குகள். கடல் மட்டத்தில் இருந்து 11,000 அடி உயரமான 'சில்வர்டன்’ என்ற இடத்தில்தான் இந்தப் போட்டி நடைபெறும். எனவே, விறைக்கவைக்கும் குளிர், திடீர் வெயில் போன்றவற்றைச் சமாளிக்கப் பழகவேண்டும். நடுவே, புல்வெளி, பூக்கள் நிறைந்த தோட்டங்களைக் கடப்பது இயற்கை ஆர்வலர்களுக்குக் கொஞ்சம் ஆறுதல். மலைகள் நிறைந்த பள்ளத்தாக்குகளில் சில சமயம், பக்கத்தில் தெரியும் வானவில்லுடன் இணைந்து நின்று செல்ஃபி எடுத்துவிட்டு, ரிலாக்ஸாகவும் ஓடலாம். டர்ட் ட்ரெய்ல், 4WD சாலைகள், க்ராஸ் கன்ட்ரி என கலந்து கலந்து ஓட வேண்டியிருக்கும் என்பதால், குளிர், வெயில் என்று பருவ நிலை மாற்றத்துக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்பவர்களால் மட்டும்தான் இந்த மாதிரிப் போட்டிகளில் கலந்து கொண்டு வெல்ல முடியும். இந்தப் போட்டியில் ஓடும் தூரத்தில் கால்வாசி தூரம், அதாவது 10,000 மீட்டர் உயரத்தை ஏறித்தான் கடக்க வேண்டும். போட்டி நிறைவடையும் தருவாயில், அங்கே இருக்கும் 'ஹார்டுராக்’ என்னும் பாறையை நீங்கள் முத்தமிட்டுத்தான் போட்டியை நிறைவு செய்யவேண்டும் என்பது கண்டிஷன். ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் நடக்கும் இந்த ரேஸ், 1992, 2002 ஆகிய இரண்டு வருடங்கள் மட்டும் நடக்கவில்லை. காரணம், அதிகபட்ச குளிர் மற்றும் காட்டுத் தீ!

டூர் ஆஃப் ஜயன்ட்ஸ் (Tor des Géants )

தூரம்: 336 கி.மீ

நாள்: 168 மணி நேரம்

இடம்: அசோட்டா பள்ளத்தாக்கு, ஆல்ப்ஸ் மலை, இத்தாலி

சிக்கல்கள்: குளிர், ஆழமான பள்ளத்தாக்குகள், மாயைத் தோற்றம்.

சுருக்கமாக இதை TDG என்கிறார்கள். இத்தாலியில் இதற்கு 'டூர் ஆஃப் ஜயன்ட்ஸ்’ என்று அர்த்தம். அதாவது, 'உலகம் சுற்றும் காட்டான்கள்’ என்று சொல்லலாம். மொத்தம் 336 கி.மீ தூரம் அடங்கிய இந்த ரேஸில், 24,000 மீட்டர் உயரம் ஏற வேண்டும். இதில் மூன்று நாட்களில் 25 மலைகளைக் கடந்து 2,000 மீட்டர் ஏறினால், நீங்கள் பாதி வின்னர். உறையவைக்கும் குளிர், இடி-மின்னல், மழை போன்றவைதான் இதன் மைனஸ். வெயில் நேரங்களில் நமக்குத் தோன்றும் கானல் தோற்றம்போலவே, இங்கு குளிர் நேரங்களில் பனிச் சரிவு ஏற்படுவதுபோல ஒரு மாயத் தோற்றம் உண்டாகி, வெலவெலக்கவைத்துவிடுமாம். இதனாலேயே நிறைய நேரம் வீணாக வாய்ப்பு உண்டு. இந்தப் போட்டியில் மொத்தம் 700 பேருக்குத்தான் அனுமதி. இதையும் மீறி புக்கிங்குகள் குவிகின்றனவாம். ஏனென்றால், குறைந்த கட்டணத்தில் (500 யூரோ) நடக்கும் போட்டி இது. இந்தப் போட்டியில் மிக முக்கியமான ஒரு கண்டிஷன் - ஜூஸ் குடித்துவிட்டு, உணவருந்திவிட்டு, அழகான ஆல்ப்ஸ் மலைத் தொடரைக் குப்பைக் கூடையாகப் பயன்படுத்தினால், உடனே போட்டியிலிருந்து நீங்கள் எலிமினேட்தான்!