நிறுவனம்: 'சுரானா குடும்பம்’.

தலைவர்: பி.எஸ்.சுரானா

நிர்வாகம்: மனைவி லீலாவதி, மருமகள் ரஷ்மி

வாடிக்கையாளர்கள்: வீட்டில் உள்ள குழந்தைகள், ஆண்கள், பிற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள். அவர்களைத் திருப்தியாகக் கவனித்துக்கொள்வதே 'சுரானா குடும்பம்’ என்கிற இந்த நிறுவனத்தின் பிரதான நோக்கம்.

ஐ.எஸ்.ஓ (ISO) என்பது, 'ஒரு நிறுவனத்தின் செயல்பாடு சீராக, முறைப்படி நடக்கிறது; எல்லாம் ஓர் ஒழுங்கமைவுக்குள் இருக்கின்றன’ என்பதை ஆராய்ந்து தரப்படும் தரச் சான்றிதழ். உலக அளவில் மதிப்பு வாய்ந்த இந்த தரச் சான்றிதழை, முதன்முதலில் பெற்ற நிறுவனம், ஒரு சிகை அலங்காரக் கடை. சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம்கூட ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்றிருக்கிறது. நம் பிரதமர் மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, குஜராத் அரசுக்கு ஐ.எஸ்.ஓ வாங்கினார். இப்போது இந்திய அரசுக்கே ஐ.எஸ்.ஓ வாங்கி, உலகில் முதல் ஐ.எஸ்.ஓ தர அரசாக ஆக்க முயற்சி செய்கிறார்(?).

அப்படிப்பட்ட சான்றிதழை, நாம் வாழும் வீட்டுக்கு வாங்க முடியுமா? முடியும் என நிரூபித்திருக்கிறது ஒரு குடும்பம். அந்த வீடு இருப்பது சென்னையில். 'வீட்டுக்குத் தரச் சான்றிதழா?’ என்ற ஆச்சர்யத்துடன், மைலாப்பூரில் உள்ள அந்த வீட்டுக்கு விசிட் செய்தோம்.

ஒரு நிறுவனத்துக்கான ஒழுங்குமுறையோடு குடும்பத்தையும் நடத்துவதால், இந்த வீட்டுக்குக் கிடைத்திருக்கிறது 'ஐ.எஸ்.ஓ 9001’ தரச் சான்றிதழ். குடும்பத்துக்கு, நிறுவனத்தைப்போல ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள்... 'சுரானா குடும்பம்’. தலைவர் - பி.எஸ்.சுரானா. நிர்வாகம் - அவரது மனைவி லீலாவதியும், மருமகள் ரஷ்மியும். வாடிக்கையாளர்கள் - வீட்டில் உள்ள குழந்தைகள், ஆண்கள், பிற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள். அவர்களைத் திருப்தியாகக் கவனித்துக் கொள்வதே 'சுரானா குடும்பம்’ என்கிற இந்த நிறுவனத்தின் பிரதான நோக்கம்.

வீட்டில் நடைபெறும் எல்லா வேலைகளுக்கும், 'ஸ்டாண்டர்டு ஆபரேட்டிங் புரொசிஜர்’ என்ற ஆவண முறையைப் பின்பற்றுகிறார்கள். அடுத்த வாரம்... எந்தெந்தக் கிழமைகளில், என்னென்ன உணவு வகைகளைத் தயாரிப்பது என்பதை முன்னதாகவே முடிவு எடுக்கிறார்கள்; அதைக் குறித்து வைத்துக்கொள்கிறார்கள். அவற்றுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி, கழுவி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுகிறார்கள். காய்கறிகளைப் பராமரிப்பதற்கும்கூட முறை உண்டு. காய்களும் கனிகளும் தண்ணீரில் சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கப்பட்டு, அதில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகள் நீக்கப்படுகின்றன. பிறகு சுத்தம் செய்யப்பட்டு, பிளாஸ்டிக் கவரில் போட்டு சீல் செய்து ஃப்ரிட்ஜில் வைக்கிறார்கள். கிருமிநாசினியான எலுமிச்சைப் பழத்தைக்கூட இப்படிச் சுத்தப்படுத்தித்தான் ஃப்ரிட்ஜில் வைக்கிறார்கள். சமையலை வீட்டில் உள்ள பெண்களே செய்துவிடுகிறார்கள் என்பதால், அது ஆரோக்கியமானதாக இருக்கிறது. ஒருவேளை குழந்தைகளுக்கோ, விருந்தினர்களுக்கோ மெனுவில் மாற்றம் தேவைப்பட்டால், அதற்கு புரொசிஜரில் விதிவிலக்கு உண்டு.

சுரானாவின் குடும்பத்தில் எல்லோருமே வழக்குரைஞர்கள். திருமணத்துக்குப் பிறகுதான் லீவாவதியும் ரஷ்மியும் வழக்குரைஞர்கள் ஆகியிருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தினர் நடத்தும் சட்ட மையம்தான் 'இந்தியாவில் ஐ.எஸ்.ஓ பெற்ற முதல் சட்ட மையம்’.

வீட்டுக்கு ஐ.எஸ்.ஓ வாங்க வேண்டும் என்ற யோசனை எப்போது, எப்படி வந்தது?

பி.எஸ்.சுரானாவின் மகன் வினோத் சுரானா. இவரது மனைவி ரஷ்மிக்குத்தான் இந்த எண்ணம் முதலில் வந்திருக்கிறது. ரஷ்மி, 2002-ம் ஆண்டு திருமணமாகி இந்தக் குடும்பத்துக்கு வந்தார். வீட்டில் அத்தனை பேரும் வழக்குரைஞர்களாக இருக்க, 'நாமும் எதாவது செய்ய வேண்டும்’ என்ற ஆர்வம் ரஷ்மிக்கு வந்திருக்கிறது. அந்தச் சமயத்தில், அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ-வுக்கான ஆடிட் நடந்திருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களிடம், ''வீட்டுக்கும் வாங்கலாமே!'' என்று ரஷ்மி சொல்ல, எல்லோரும் கலந்துபேசி அதற்கான முடிவையும் எடுத்திருக்கிறார்கள். அதை 2004-ம் ஆண்டில் வெற்றிகரமாகப் பெற்றும்விட்டார் ரஷ்மி. இந்தச் சான்றிதழை மத்திய அரசின் இந்திய தர நிர்ணய அமைப்பான பி.ஐ.எஸ் (Bureau of Indian Standards) வழங்கி இருப்பது சிறப்பு. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சான்றிதழைப் புதுப்பிக்க வேண்டும். அதையும் தொடர்ந்து செய்துவருகிறார் ரஷ்மி.

நாம் ஒருமுறை சுரானா வீட்டுக்குச் சென்றுவிட்டால், ஒவ்வோர் ஆண்டும் நம் பிறந்தநாளுக்கு அவர் கையெழுத்திட்ட வாழ்த்து மடல் வீடு தேடி வரும். இதற்கும் தனி செக் லிஸ்ட் வைத்திருக்கிறார்கள். ரஷ்மி சுரானா ஒவ்வொரு மாதமும் ஒரு டிஸைன் செய்து, அவரே கையெழுத்தும் இடுகிறார். இவர்களது வீட்டில் ஒவ்வொரு நாளும் 20 வாழ்த்து மடல்களாவது கொரியர் அனுப்புவதற்காகக் காத்திருக்கின்றன. அதோடு, பண்டிகைக் காலங்களில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சர்க்கரை கலப்பில்லாத இயற்கை இனிப்புகளை அனுப்பி வைக்கிறார்கள்.

இப்படி இந்த வீட்டில் ஒவ்வொரு செயலும் முறையாக நடைபெறுகிறது. யார் எந்த வேலையை, எத்தனை நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும் என்பது தொடங்கி, அனைத்து விஷயங்களையும் நோட்டீஸ் போர்டில் ஒட்டி வைத்துவிடுகிறார்கள்.

''பெரியவர்களுக்குச் சரி; குழந்தைகளுக்கு இந்த விதிகள் எல்லாம் பிடித்திருக்கிறதா; அவர்களுக்கு சரியாக வருமா?’ என்று கேட்டோம். ''ஒரு மீனுக்கு, அது இருக்கும் தண்ணீர்தான் உலகம். அதைவிட்டு வெளிய வந்தால் எப்படி இருக்கும்னு தெரியாது. அது ஒரு மாதிரி பழகிடும். அப்படித்தான் இதுவும்' என்கிறார் வினோத் சுரானா. இருந்தாலும் பள்ளிகளில் அவ்வபோது சிக்கல்களைச் சந்திக்கிறார்கள், பிள்ளைகள் கீர்த்தி (வயது 14), தேவ் கார்த்திக் (13) இருவரும்.

சமீபத்தில் பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடந்திருக்கிறது. ஓட்டப் பந்தயத்துக்கான டிராக் நீளவாக்கில் இருக்கும். எனவே, ஆரம்பப் புள்ளி நேர்க்கோடாக இருக்கும். ஆனால், இவர்கள் பள்ளியிலோ, போட்டி நடந்த இடம் வட்டமான டிராக். அதனால், ஆரம்பப் புள்ளி ஒவ்வொரு டிராக்கிலும் மாறியிருக்கிறது. கோடு போட்டவர் நேராகப் போட்டுவிட்டார். ஓடுகிறவர்களுக்கு நல்லதுதான், குறைவான தூரம் ஓடினாலே போதும். ஆனால், அதை ஏற்காமல் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள் இந்தக் குழந்தைகள்; பள்ளியில் உள்ளவர்கள் கேட்கவில்லை. யோசித்துப் பார்த்து, போட்டியில் இருந்தே விலகிவிட்டார்கள் குட்டி சுரானாக்கள். எதுவும் முறைப்படி நடக்காதபோது எடுத்துச் சொல்வது; முடியவில்லை என்றால் விலகிக்கொள்வது இவர்கள் குடும்பத்தின் வழக்கம். அதற்குப் பிள்ளைகளும் தயாராகிவிட்டார்கள்.

நாம் வரப்போகிறோம்; போட்டோ எடுக்கப்போகிறோம் என பிள்ளைகளிடம் சொல்லியிருக்கிறார், வினோத் சுரானா. அதற்கும் கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். 'நம்ம வீட்ட ஏம்ப்பா அவங்க போட்டோ எடுக்கணும்? வீட்டுக்கு வரலாம். ஆனா, அதை ஏன் மத்தவங்க படிக்கிற மாதிரி எழுதணும்' என்று சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவு விளக்கியும் அவர்கள் சமரசம் ஆகவே இல்லை. புகைப்படத்தில் அவர்களைச் சிரிக்கவைக்க, நம் புகைப்படக் கலைஞர் படாதபாடு பட்டுவிட்டார்.

''எங்கே விதிமுறைகள் இருக்கின்றனவோ, அங்கே முன்னேற்றம் இருக்கும். வீட்டில் பொருட்கள் கலைந்துகிடந்தால், நம் சிந்தனையும் அப்படித்தான் இருக்கும். எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், மனம் சீராக இருக்கும். இது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லையே' என்கிறார், மருமகளான ரஷ்மி. வீட்டின் மூத்த உறுப்பினரான பி.எஸ்.சுரானாவுக்கு என்ன வயதாகிறது என்றால், சீரியஸாக '35 இருக்கும்' என்கிறார் மகன் வினோத் சுரானா. அந்த அளவுக்கு 65 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார். இதற்கும், ''தனது வாழ்க்கை முறையே காரணம்'' என்கிறார்.

''இதற்கு உறவினர்களின் ரியாக்ஷன் எப்படி?''

'இப்படிப்பட்ட ஒரு வீட்டின் உரிமையாளர்கள், தங்களுக்கு உறவுங்கிறதை பெருமையாத்தான் நினைக்கிறாங்க. நிறையப் பேர் முயற்சி செய்றாங்க. ஆனா, முடியலைனு சொல்றாங்க. ஐ.எஸ்.ஓ வாங்குறது விஷயம் இல்லை. அது இல்லாமலேயே நமக்குனு கட்டுப்பாடு வேணும். அது இருந்தா எல்லாம் தானா நடக்கும். நாங்க எல்லாரும் அதிகமா டி.வி பார்க்கிறது இல்லை. புத்தகங்களைத்தான் அதிகம் படிக்கிறோம்' என்கிறார் சுரானா வீட்டின் தலைவி லீலாவதி.

இந்த வீட்டுக்கு வரும் விருந்தினர்களின் கருத்துக்களைப் பதிவுசெய்ய ஒரு, 'ஃபீட்பேக் ரெஜிஸ்டர்’ இருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ரோசையா, நடிகை ஜெயப்ரதா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வெளிநாடுகளின் தூதுவர்கள் என பல வி.வி.ஐ.பி-கள் வந்து, இந்த வீட்டில் தங்கி, உணவருந்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அப்படி வந்தவர்கள் வியந்து, தங்களுடைய கருத்துக்களைப் பதிவும் செய்திருக்கிறார்கள்.

நீதிபதி கற்பக விநாயகம், 'இது வீடு அல்ல... கோயில் என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல குடும்பம்... நல்ல பல்கலைக்கழகம்’ என்று எழுதி இருக்கிறார். நாமும் நமது சந்தோஷத்தைப் பதிவு செய்துவிட்டு, நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

வெற்றிக்கான ஃபார்முலா எளிமையானது. ''சொன்னதைச் செய்யுங்கள்; செய்வதைச் சொல்லுங்கள்' என்கிறார்கள் சுரானா குடும்பத்தினர்!