உங்கள் உற்சாகத்தில் பங்கெடுக்கவும் பங்களிக்கவும் ஒவ்வோர் ஆண்டும் 'தீபாவளி மலர்’ மூலம் உங்கள் இல்லங்களுக்குள் நுழைந்து மணம் பரப்பி வருகிறான் விகடன். இதோ, இந்த ஆண்டும் கலை, இலக்கிய வாசனைகளோடு விகடன் தீபாவளி மலர் தயார். சிறப்புச் சிறுகதைகள்,

கவிதைகள், கட்டுரைகள், சினிமா, சுற்றுலா, ஆன்மிகம் என பல்சுவை விருந்தாக இது பரிமாறப்பட்டிருப்பதை, புரட்டும்போதே உங்களால் உணர முடியும்.

இறையருள் ஓவியர் சில்பி வரைந்த அற்புதமான ஏழு ஓவியங்கள் இந்த இதழில் உங்கள் மனதை நெகிழ்த்தும். அதேபோல், 108 வைணவ திருத்தலங்களில் 'அஞ்சுவை அமிர்தம்’ என்று வைணவ அடியார்கள் போற்றும் முக்கியமான ஐந்து தலங்கள் உங்களை பக்தியில் ஆழ்த்தும்.

விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவைத் தெரியாதவர் உண்டா? அவர் இப்போது எங்கே, என்ன செய்துகொண்டிருக்கிறார்? அவரைத் தேடிப் பிடித்துப் பேசவைத்திருக்கிறோம். ஊட்டியைக் கண்டுபிடித்த, உருவாக்கிய ஜான் சல்லிவன் என்ற ஆங்கிலேயரின் வரலாறு; வீட்டுக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ் வாங்கிய ஆச்சரியக் கட்டுரை; நம் நாட்டு மகாராஜாக்களின் விநோத, விசித்திரப் பழக்கவழங்கங்கள் என சிரிக்க, சிந்திக்க, ரசித்து மகிழ ஏராளமான விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

நமது தீபாவளியில் சினிமாவுக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு. சினிமா பிரபலங்களை தனது கேமரா வித்தையால் கவரும் புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம், பிரபலங்களை இயக்கிய சுவாரஸ்ய தருணங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

இந்தியத் திரையுலகில் தனித்துவமான ஆளுமைகொண்ட, தைரியமான கதாநாயகிகள் குறித்து கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. பாலிவுட்டின் புதிய அலை சினிமா இயக்குநர் அனுராக் காஷ்யப் பேட்டி உங்களை ஆச்சர்யப்படுத்தும். பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை தேர்ந்தெடுத்துத் தகவல்களை நேர்த்தியாகத் தந்திருக்கிறோம். தமிழ்த் திரைத்துறையில் தடம்பதித்து பொன்விழா கொண்டாடும் நடிகர் சிவகுமார், நெஞ்சம் திறந்து பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

அஜித் இதுவரை நடித்த 'வேதாளம்’ வரை மொத்தம் 56 திரைப்படங்கள் குறித்து, வாசகர்கள் இதுவரை அறியாத பல தகவல்களைத் தொகுத்தளித்துள்ளோம்.

அனைவருக்கும் விகடனின் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!

அன்புடன்

ஆசிரியர்