‘ப்ராங்க்’ (Prank)..! ஏதாவது ஒரு கான்செப்ட் எடுத்துக்கொண்டு, கேண்டிட் கேமரா, காலர் மைக் உதவியுடன் பொது இடங்களில் யாரையேனும் கலாய்த்து, அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றி ஹிட்ஸ் அள்ளுவது. இதைத் தொழில்முறையாகச் செய்கிறது 'ஆக்வர்டுனெஸ் அன்லிமிட்டெட்’... 'எல்லையில்லா அருவருப்பு’ என்ற பொருள்படும் ஒரு வீடியோ சேனல். வினு கார்த்திக், ஹர்ஷ் கோத்தாரி, அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பவ்ஜோத் ஆனந்த் என்ற நான்கு நண்பர்கள் இணைந்து நடத்துகிறார்கள்.

வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வெவ்வேறு வேலைகளில் இருந்தாலும், இவர்களை இணைத்திருப்பது 'ப்ராங்க்’ என்ற ஒற்றை வார்த்தைதான்.

''அடிப்படையில் நான் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்; மாடல். அதனால, கூச்சமே இல்லாம ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு காசு இல்லைனு ரியாக்ஷன் கொடுக்கிறது; என் பெண் தோழியை வெச்சு ஈவ் டீஸிங் டிராமா பண்ணி பப்ளிக் ரியாக்ஷன் பார்க்கிறதுனு நிறைய பண்ணியிருக்கேன். இதன்மூலம் கிடைச்ச வாய்ப்புல நான் தமிழ் சினிமா ஹீரோவா நடிச்சுட்டேன். 'மூணே மூணு வார்த்தை’ படத்தோட ஹீரோ நான்தான் பாஸ்! 'உங்க டீம் வீடியோஸ் செம ஜாலி குறும்புடா பசங்களா!’னு அதிர அதிர சிரிச்சுப் பாராட்டினார் பாடகர் எஸ்.பி.பி சார்!'' என்று ஓப்பனிங் கொடுக்கிறார், இந்த குறும்பு டீமின் யூத் ஹீரோ அர்ஜுன் சிதம்பரம்.

ஷாப்பிங் மால்களில் போர்வை தலையணையோடு போய் படுத்துத் தூங்கி எல்லோரையும் கதறவிடுவது, சிக்னலில் காரை நிறுத்தி புரியாத ஏலியன்ஸ் பாஷையில் ரூட் விசாரிப்பது, சாலையில் தண்ணீர் பாட்டிலை வீசி யார் பொறுப்பாக எடுத்து குப்பைத் தொட்டியில் போடுகிறார்கள் எனப் பதிவு செய்வது... என இவர்களின் வீடியோவில் செம வெரைட்டி. இந்த டெரர் டீமின் தலைவர் பவ்ஜோத் ஆனந்த், பார்க்க பஞ்சாபி சிங் போல இருக்கிறார்.

''ஆனா, நான் பக்கா சென்னைப் பையன். நாங்க எல்லாரும் அண்ணா நகர்ல ஒண்ணா படிச்ச ஸ்கூல் மேட்ஸ். அப்பவே ஏதாச்சும் ஏடாகூடமா குறும்பு பண்ணிட்டே இருப்போம். இப்போ டீம் செட்டாகி இறங்கி அடிக்க ஆரம்பிச்சுட்டோம். ஒரு வருஷம் ஆச்சு. நிறைய டி.வி சேனல் வாய்ப்புகள் வருது. வெறும் கிறுக்குத்தனமா மட்டும் இல்லாம, சமுதாயத்துக்குச் சில பயனுள்ள யோசனைகளையும் சொல்லணும்னு ஐடியா!'' எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ''ஹலோ போதும் மிஸ்டர் கருத்து சிங்... வாங்க அண்ணா நகர் டவர் பார்க் ஏரியாலயே ஒரு சோஷியல் எக்ஸ்பெரிமென்ட் பண்ணுவோம்'' என்று லீட் கொடுத்தார் வினு கார்த்திக்.

டவர் பார்க்கினுள் வட்டமாக உட்கார்ந்து சத்தமாக ஏதோ பேசிக் கொண்டிருந்த வட இந்தியப் பெண்கள் டீமை டார்க்கெட் செய்தார்கள். ஹர்ஷ் கோத்தாரியும் அர்ஜுன் சிதம்பரமும் விறுவிறுவென அவர்கள் முன் போய் நின்றார்கள்.

''ஹலோ லேடீஸ்! நாங்க க்ளீன் இந்தியா மூவ்மென்ட்ல இருந்து வந்திருக்கோம். நீங்க ரொம்ப நேரமா இங்கே நாய்ஸ் பொல்யூஷன் பண்ணிட்டு இருக்கீங்கனு தகவல் வந்துச்சு. பாருங்க வாய்ஸ் மீட்டர்ல 120 டெசிபல் ரீடிங் காட்டுது'' என எதையோ மொபைலில் எடுத்துக் காட்டினார் ஹர்ஷ். பக்கத்தில் நின்ற ஹர்ஷ், ''ஸ்பாட் ஃபைன் 120 ருப்பீஸ்! உடனே கட்டுறீங்களா... இல்லை, உங்க வீட்டுக்கு சம்மன் அனுப்பணுமா?'' என மிரட்ட, அந்த லேடீஸ் கும்பல் நம்புவதா, வேண்டாமா என குழப்பத்தோடு பார்த்தது.

கும்பலின் தலைவிபோல இருந்த ஒரு பெண் சுதாரித்து, ''நீங்க என்னைக் கலாய்க்குறீங்கனு நினைக்கிறேன். நம்ப மாட்டேன். சத்தமா பேசுனா... தப்பா? உங்க ஐ.டி கார்டு காட்டுங்க'' என விவரமாகக் கேட்க, பதிலுக்கு இவர்கள் ஆங்கிலத்தில் லா பாயின்ட்ஸை அள்ளிவிட, நிஜமாகவே அந்தப் பெண்கள் தெறித்துப் போனார்கள்.

வழிப்போக்கர்கள் போல வந்த பவ்ஜோத் சிங்கும், வினு கார்த்திக்கும் ''ஹலோ, என்ன இங்கே பிரச்னை?'' எனக் கேட்க, அவர்களிடம் முறையிட்டார் ஒரு பெண்.

''திருட்டுப்பசங்க மேடம். நாலு சாத்து சாத்துனா அடங்குவாங்க... போன மாசம் பிக்பாக்கெட் கேஸ்ல நானே உள்ளே தள்ளினேன். நான் ஹோம்கார்டு போலீஸ்தான்...'' என சொல்லிக்கொண்டே ஓங்கி அர்ஜுன் சிதம்பரம் முகத்தில் அறைந்தார் பவ்ஜோத். சற்று நேரத்தில் நான்கு பேரும் கட்டிப்பிடித்துப் புரள... ஏரியாவே வேடிக்கை பார்த்தது. பயந்துபோன பெண்கள் அங்கு நின்ற நிஜ போலீஸை அழைத்துவர... சடசடவென சமாதானப்படலம் அரங்கேறியது.

பவ்ஜோத்தும் அர்ஜுன் சிதம்பரமும் 'ஆக்வர்டுனெஸ் அன்லிமிட்டெட்’ பற்றி சொல்ல, எல்லோர் முகத்திலும் ஒரே சிரிப்பு.

பட்டையைக் கிளப்புங்க பாய்ஸ்!

இவர்களின் ப்ராங் சேட்டைகளைப் பார்க்க... www.youtube.com/user/AwkwardnessUnlimited/videos