தங்க நிற மணற்குன்றுகளுக்கும் ஓங்கி உயர்ந்த அரண்மனைகளுக்கும் புகழ்பெற்றது ராஜஸ்தான் மாநிலம். இதன் வடமேற்கு எல்லையில் பழைமையும் பாரம்பர்யப் பெருமையும் கொண்ட நகரம், பிகானிர். இந்த நகரத்தின் இன்னொரு சிறப்பு... ஒட்டகத் திருவிழா!

மாநில சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் இரண்டு நாட்கள் நடத்தப்படும் 'பிகானிர் ஒட்டகத் திருவிழா’ உலகப் பிரசித்தம். உள்ளூர் இசைக்கருவிகள் முழங்க, அந்த இசைக்கு ஒட்டகங்கள் ஆடும் நடனம், விழாவின் பிரதான நிகழ்வு. அதைக் காண்பதற்காகவே வெளிநாடுகளில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் பார்வையாளர்கள் ஏராளமாகக் குவிகிறார்கள்.

ஒட்டகங்களின் ஓட்டப் பந்தயம், அழகுப் போட்டி, விளையாட்டு, பலவிதமான ஒட்டகங்கள் பங்குபெறும் ஒட்டகக் கண்காட்சி என புருவம் உயர்த்தவைக்கும் வைபவம் இது. கிராப் வெட்டப்பட்ட விதவிதமான ஒட்டகங்களின் அணிவகுப்பு கலக்கல்; உலக அழகிகளின் 'கேட் வாக்’ இதற்கு முன்னால் சும்மா!

முதல் நாள் திருவிழாவில், பாலை மணல்வெளியில் ஒட்டகங்கள் அலங்கரிக்கப்பட்டு அவற்றின்

அணிவகுப்பை நடத்துகிறார்கள். வண்ண உடை, நகைநட்டுகளுடன் ஓட்டப் பந்தயம் நடக்கிறது.

ஒட்டகங்கள், அவர்கள் இடும் கட்டளைகளுக்கு ஏற்ப நடனம் ஆடுவது, வேகமாக ஓடி மைதானத்தைச் சுற்றி வருவது எல்லாம் நடக்கும். முன்னங்கால் ஒன்றை மட்டும் தூக்கிக்கொண்டு தாளம் தப்பாமல் நடனமாடுவது கண்கொள்ளாக் காட்சி. ஒருவர் கீழே படுத்திருப்பார்; அவர் உடலின் மேல் ஒட்டகம் தன் முன்னங்கால்களை மாற்றி மாற்றிவைத்து நடனமாடும்; நம்மை மிரளவைக்கும் காட்சி அது.

மாலை நிகழ்வில், நன்றாக அலங்கரிக்கப்பட்ட ஒட்டகம், முடி அலங்காரத்தில் கலக்கும் ஒட்டகம், அதிகப் பால் கறக்கும் ஒட்டகம் எனப் போட்டிகள் நடத்தி, ஒட்டக உரிமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

முதல் நாள் விழா முடிவில் மாலையில் ஒட்டகப் பாலில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள், ராஜஸ்தானின் பாரம்பர்ய உணவுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. விற்பனையும் ஜோராக நடக்கும். பிகானிரில் கிடைக்கும் 'புஜியா’ எனப்படும் மொறுமொறுப்பான தின்பண்டம் சுற்றுலாப் பயணிகளின் நாவைச் சுண்டி இழுக்கும் பதார்த்தம். கடலை மாவு, மசாலா, சிறு பயறு, உப்பு, மிளகாய், ஏலக்காய், கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் அசத்தல் உணவு இது.

ஒட்டகங்களில் அமர்ந்துகொண்டே கால்பந்து விளையாடுவது, ஒட்டக சவாரி, உள்ளூர் நடனக் கலைஞர்களின் நடனம், இசைக் கச்சேரி, சாகச நிகழ்ச்சிகள் என இரண்டாம் நாள் உற்சாகம் புரளும். அன்று இரவு பிகானிரில் உள்ள ஜுனாகர் கோட்டை, ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும்.

இந்த விழாவில் ஒட்டகங்களின் முடி அலங்காரம்தான் சிறப்பு. அவற்றின் ரோமங்களை மிக நேர்த்தியாக, அழகாக வெட்டி கலைஞர்கள் தங்கள் கைவண்ணத்தைக் காண்பித்து இருப்பார்கள்.

ஒட்டகத்தின் உடலில் காட்சிகளாக செதுக்கப்பட்டிருக்கும். அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிச்செல்வது, வீரன் ஒருவன் குதிரையில் செல்வது, சிறுத்தை முயலை வேட்டையாடுவது, முனிவர் தவம் இருப்பது, பறவை மரத்தில் உட்கார்ந்திருப்பது, பசு கன்றுக்குப் பால் கொடுப்பது, ஒரு பெண் தலையில் தண்ணீர் பானையைச் சுமந்து செல்வது, அந்தப் பெண்ணின் பானையில் உள்ள தண்ணீரை காகம் அருந்துவது, ஒட்டகத்தின் மீது ஒருவர் சவாரி செல்வது, ஒருவன் துப்பாக்கியால் மானை வேட்டையாடுவது என ஒட்டகத்தின் ரோமங்களில் செய்யப்பட்டிருக்கும் இந்தக் கலைஞர்களின் கைவண்ணம் பார்க்கிறவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் அதிசயம்!

வழக்கமாக இரண்டு நாட்கள் நடைபெறும் 'பிகானிர் ஒட்டகத் திருவிழா’, 2016-ம் ஆண்டு ஜனவரி 22, 23, 24 என மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது. அப்புறம் என்ன... இப்பவே டிக்கெட் புக் பண்ணுங்க!