நான் கவிஞன் ஆனதுக்கும் எழுத்தாளன் ஆனதுக்கும் என் கர்மவினைதான் காரணம்னு முழுசா நம்புறேன். ஆனா, நடிகன் ஆனது எனக்கும் என் குடும்பத்துக்கும் நல்வினையா, தீவினையானு எனக்குச் சொல்லத் தெரியலை. 'நீர் வழிப் படூஉம் புணை’ போல இந்த வாழ்க்கை என்னை அதன் போக்கில் அடிச்சிட்டுப் போகுது. நான் வாழ்வென்னும் நதி தீரத்தில் ஏகாந்தமா மிதக்கிறேன். அதைச் சரியாவே செய்றேன்'' - அதிர அதிரச் சிரிக்கிறார் கவிஞர் விக்ரமாதித்தன். நெஞ்சம் வரை இறங்கி வழியும் வெண்தாடி, நரைப்பூத்த தலைக் கேசம், அதை ஆமோதிப்பதுபோல காற்றில் ஆடுகின்றன. ''தமிழின் முக்கியக் கவிஞராக இருந்துகொண்டு சினிமாவில் துக்கடா கேரக்டர்களில் நடிகிறீர்களே?'' எனக் கேட்டதற்குத்தான் அந்தப் பதில்.

'' 'எனக்குப் பிடித்த கவிஞர் விக்ரமாதித்தன் பிச்சைக்காரராக நடித்ததைப் பார்த்தபோது, என் கண்கள் கலங்கிவிட்டன’ என எழுத்தாளர் எம்.டி.முத்துக்குமாரசாமி வருந்தியிருந்தார். அந்த வருத்தம் உங்களுக்கும் உண்டா?''

''என் மீதுள்ள அன்பின் மிகுதியால் அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். அவருக்கு என் நன்றி. ஆனா, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் வேலையைச் சிறப்பா செய்தேன். இயக்குநர் பாலா என்னை கவிஞர் என்ற மரியாதையோடு தான் நடத்தினார். தவிரவும், 'உங்களை நடிக்கவெக்கலாம்னு பாலா சார் விரும்புறார். உங்களுக்கு விருப்பமா?’னு என்கிட்ட முதலில் கேட்டது, அப்போ ஒளிப்பதிவாளர் செழியனிடம் உதவியாளரா இருந்த என் இளைய மகன் சந்தோஷ் ஸ்ரீராம்தான். அதனால் வருத்தம் துளிகூட இல்லை. நான் ஒண்ணும் முழுமையான நடிகன் கிடையாது. சந்திரபாபு, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், காக்கா ராதாகிருஷ்ணன்... இவங்களைப் போன்ற ஜீனியஸ் கோலோச்சிய சினிமா உலகத்துல நான் எப்படிச் சொல்லிக்க முடியும், 'நானும் ஒரு நடிகன்தான்’னு. என் அப்பா என்.ஏ.சுந்தரம் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட். அதுதான் எனக்கும் சினிமாவுக்கும் இருக்கும் சின்ன பந்தம்!''

''உங்கள் அப்பா ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா?''

''ஆமாம்... 'கப்பலோட்டிய தமிழன்’ படத்துல சோல்ஜரா வருவார். 'இருவர் உள்ளம்’ படத்துல வக்கீல் கேரக்டர். 'ஆடிப்பெருக்கு’ படத்துல டி.டி.ஆர் வேடத்துல நடிச்சிருப்பார். அவர் பண்ணினதுலேயே பெரிய கேரக்டர்னா ருத்ரய்யாவோட ரெண்டாவது படம் 'கிராமத்து அத்தியாயம்’ல கதாநாயகனுக்கு அப்பா கேரக்டர்!''

''சினிமால நீங்க யார் ரசிகர்?''

''சிவாஜி கணேசன். 'தங்கப் பதுமை’, 'நானே ராஜா’, 'பராசக்தி’ 'துளி விஷம்’, 'இல்லற ஜோதி’, 'தெய்வப் பிறவி’... படங்கள்ல நடிச்ச ஆரம்ப கால சிவாஜி ரசிகன்.''

''உங்கள் பால்யம் பற்றிச் சொல்லுங்க?''

''வறுமையும் வேதனையும் பசியும் நிறைஞ்சது என் பால்யம். அஞ்சாவது பாஸ் பண்ணின பிறகு, 1958-ம் ஆண்டு தொடங்கி ஏழு வருஷம் குழந்தைத் தொழிலாளியா, நான் பார்க்காத வேலைகளே கிடையாது. மளிகைக் கடைப் பையன், சித்தாள் வேலை, இட்லி விக்கிறவன், காயலாங்கடை உதவியாளர், ஹோட்டல் கிளீனர், கட்பீஸ் ஸ்டோர் உதவியாளர்னு ஏகப்பட்ட வேலைகள். அதுக்குப் பிறகு அஞ்சு வருஷம் கழிச்சி சென்னை மேற்கு மாம்பலம் கார்ப்பரேஷன் ஸ்கூல்ல, ஆறாம் வகுப்பு சேரப் போனபோது டெஸ்ட் வெச்சாங்க. அதுல 'பொன்’கிற வார்த்தைக்கு 'பொண்’னு எழுதினேன். அதனால மறுபடியும் அஞ்சாங் கிளாஸ்லயே போட்டுட்டாங்க. அப்படிப் பார்த்தா என்னோட 16 வயசுலதான் நான் ஆறாம் கிளாஸ் படிச்சேன். அப்போ எங்க வீட்டுல வறுமை உச்சத்துல இருந்த காலம். படிப்பு கெட்டுடக் கூடாதுன்னு என் அக்கா வீட்டுக்காரர் என்னை சீர்காழிக்குப் பக்கத்துல இருக்கிற முத்துஸ்வாமி விஸ்வநாதன் இலவச உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில சேர்த்துவிட்டார். அங்க தங்கித்தான் படிச்சேன். படிச்சேன்னு சொல்றதைவிட அங்க தங்கிட்டு சீர்காழிக்கும் சிதம்பரத்துக்கும் படம் பார்க்க போய்ட்டு வருவேன். செலவுக்கு அப்பா அனுப்புற காசை படம் பார்க்க சேர்த்து வெச்சுப்பேன். 'நவராத்திரி’, 'காதலிக்க நேரமில்லை’, 'வேட்டைக்காரன்’ படங்கள் எல்லாம் சிதம்பரம் வடுகநாதன் தியேட்டர்லதான் பார்த்தேன். ஒரு பள்ளிக்கூட நாள்ல என்னைத் தியேட்டர்ல பார்த்த என் பெரியம்மா பையன் வீட்டுல சொல்லிட்டான். லீவுல பெரியம்மா வீட்டுக்குப் போனப்போ ஏக கலவரமாகிருச்சு. பெரியம்மா, 'ஏன்டா இப்படி வீட்டுக் கஷ்டம் தெரியாம இருக்கியே...’ன்னாங்க. அம்மாவும் இதையே சொன்னாங்க... இப்போ என் மனைவியும் சொல்லிட்டு இருக்காங்க..!'' (அதிர அதிரச் சிரிக்கிறார்)

''இதுக்கு இடையில நீங்க எப்போ கவிதை எழுத ஆரம்பிச்சீங்க?''

''நான் கவிதை எழுதுறதுக்குக் காரணம் சென்னையும் கண்ணதாசனும்தான். அப்போ, புரட்சி நடிகர் மன்றம், எஸ்.எஸ்.ஆர் மன்றம், அண்ணா மன்றம், நாவலர் மன்றம்னு தெருவுக்குத் தெரு தி.மு.க மன்றங்கள் இருக்கும். அங்கே கிடைக்கிற பத்திரிகைகளை வாசிப்பேன். அப்படி வாசிச்ச புத்தகங்கள்ல ஒண்ணுதான், 'கண்ணதாசன் கவிதைகள்’. கவிதைகளோட சொல்லாட்சி எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. கவிதை எழுதணும்னு எனக்கு உந்துதல் வந்தது அப்போதான். தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில் கவியரங்கம் நடக்கும்; தவறவே விடமாட்டேன். என் மனசு முழுக்க கண்ணதாசன் இருந்த காலகட்டம் அது.''

''உங்க கவிதைகளை கண்ணதாசன்கிட்ட காண்பிச்சிருக்கீங்களா... அவர் என்ன சொன்னார்?’

''என் ஒரு கவிதையைக்கூட காண்பிச்சது இல்லை. ஆனா, ரெண்டு முறை அவரை பேட்டி எடுத்திருக்கேன். எம்.எஸ்.உதயமூர்த்தி ஆரம்பிச்சு மணியன் பொறுப்பில் வெளிவந்த 'மயன்’ பத்திரிகையில நான் புரூஃப் ரீடர். அப்போ கண்ணதாசனோட 'சேரமான் காதலி’ நாவல் சாகித்ய அகாடமி விருது வாங்கியது. அப்பவும், 'துக்ளக்’ பத்திரிகையிலேர்ந்து அனந்து வெளியே வந்து ஆரம்பிச்ச 'விசிட்டர்’ பத்திரிகையின் மதுவிலக்கு கவர்ஸ்டோரி சம்பந்தமாகவும் அவரைப் பேட்டி எடுத்திருக்கேன்!''

''மதுவிலக்கு சம்பந்தமா கண்ணதாசன் பேட்டியா... ஆச்சர்யமா இருக்கே?''

(சிரிக்கிறார்). ''ஆமாம்... அப்போ எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம். கண்ணதாசன் அரசவைக் கவிஞர். ஆனா, அவர் மதுவிலக்குக்கு எதிராத்தான் பேசினார். 'மதுவிலக்கு தினம்தினம் தோல்வி அடைந்து கொண்டிருக்கிறது. அது எப்போது வென்றது, இப்போது வெல்வதற்கு? உலக சோஷலிச நாடுகளிலோ, முதலாளித்துவ நாடுகளிலோ இதுபோன்ற ஒரு பிரச்னை கிளம்பியதே இல்லை. காரணம், அது நடைமுறை சாத்தியமில்லைனு எல்லோருக்கும் தெரியும். மதுவிலக்கு பற்றிப் பேசுபவர்கள் தேசிய வருமானத்தைப் பாழடிக்கிறார்கள் என்பதே பொருள். பரம ஏழை நாடுகள் தொழில்துறை மூலம் முன்னேறினவே தவிர, பொருளாதாரத்துக்கும் மதுவுக்கும் முடிச்சு போட்டது இல்லை. மதுவிலக்கால் ஏழ்மை ஒழிந்துவிடாது. காந்திக்குப் பிடித்த சித்த பிரமை வேறு சிலருக்கும் பிடித்திருக்கிறது. மது, பஞ்சமா பாதகங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டி ருக்கலாம். பஞ்ச மாபாதகங்களாக காதலும் பொய் சொல்லுதலும் கூடத்தான் சொல்லப்பட்டிருக்கின்றன. மதுவிலக்கு பற்றிப் பேசுகிற எந்த அரசியல்வாதி பொய் சொல்லாமல் இருக்கிறான்? மது பாதகமானது அல்ல; அதை அருந்திவிட்டு வேண்டுமென்றே சிலர் செய்கிற ஆர்ப்பாட்டங்கள்தான் பாதகமானவை. 'மது உடல் நலத்துக்கு கேடு’ என்பது அவனவன் தார்மீகமான மனோபாவத்தைப் பொறுத்தது. இதையெல்லாம் சட்டம்போட்டு தடுத்துவிட முடியாது. அவனவன் ஆரோக்கியத்துக்குக் கேடு வரும்போது அவனே நிறுத்திக்கொள்வான். உலகத்தின் ஆரோக்கியத்துக்கு அரசாங்கமா பொறுப்பேற்க முடியும்? அப்படியென்றால் சில உணவு வகைகளையே அல்லவா தடை செய்ய வேண்டியிருக்கும்! மதுவிலக்கு அரசின் கொள்கையாக இருக்கலாம். அரசின் கொள்கை தவறு என்றால், அதைக் கண்டிப்பது அரசவைக் கவிஞனின் வேலை. நான் அரசவைக் கவிஞனே அன்றி, அரசவை மேளம் அல்ல (விசிட்டர் 15.9.79)’ எனக் கண்ணதாசன் அந்தப் பேட்டியில் சொன்னார்.''

''குழந்தைத் தொழிலாளி, ஹோட்டல் சர்வர், கேஷியர், பத்திரிகையாளர்... இன்னும் என்னென்ன வேலைகள் எல்லாம் செஞ்சுருக்கீங்க?''

''பெரும்பாலான நவீன இலக்கியவாதிகள் புத்தகத்துக்கு புரூஃப் பார்த்திருக்கேன். பிரமிள், சுகுமாரன், தேவதேவன், வண்ணதாசன், கலாப்ரியா... இவங்களோட புத்தகங்களில் பெரும்பாலானவை என்னால் புரூஃப் பார்க்கப்பட்டவை. அவர்கள் அதற்காக எனக்கு சன்மானம் தருவார்கள். பிரமிள் தந்தது கிடையாது. ஆனால், அதை வேறு வழியில் வாங்கிவிடுவேன். அப்புறம் குன்றக்குடி அடிகளார் ஆதீனத்தில் அட்டெண்டர் வேலை... அவருக்கு வருகிற திருமணப் பத்திரிகைகளுக்கு வாழ்த்து எழுதித் தருவது. அதில் நான் தொடர்ந்து இருந்திருந்தால், வாழ்க்கையில் செட்டில் ஆகியிருப்பேன். ஆனால், 'இது என் வேலை அல்ல’ என மூணாவது நாளே தூக்கிப் போட்டுட்டு வந்துட்டேன்.''

''அப்படின்னா உங்க வேலைதான் என்ன?''

''நான் ஆரம்பத்துல சொன்னதுபோல, நான் கவிஞனா இருப்பது என் கர்மவினை. கவிதை எழுதுறதும் கவிதை பற்றி எழுதுறதும்தான் என் வேலை. ஒரு கவிஞன் மிஞ்சி மிஞ்சிப் போனால், ஒரு பத்தாண்டு காலம் கவிதை எழுதலாம். அதன் பிறகு கவிதை எழுத காலமும் மொழியும் அவனை அனுமதிக்காது. மொழியில் சகல பாண்டித்தியமும் இருந்தால், இன்னும் ஒரு பத்தாண்டுகள் அனுமதிக்கும். அந்தக் காலத்துக்குள் அவன் எழுதிய நல்ல கவிதைகள் பத்தா இருவதா, முப்பதா, நாற்பதாங்கிறது அவனவன் கொடுப்பினை. அதுக்கு மேல ஒரு கவிஞனால் ஒன்றும் செய்துவிட முடியாது. நாமளாவே நம்மை ஏறக்கட்டிக்கிறது நல்லது. அல்லது வேற வேலை பார்க்கப் போயிடணும்.''

''அந்தக் கணக்குப்படி பார்த்தா நீங்க கடைசிக்காலத்துல இருக்கீங்கனு சொல்லலாமா?''

''கடைசிக்காலம் இல்லை... கவிதையில் என் காலம் முடிஞ்சிருச்சுங்கிறதுதான் யதார்த்தம். மனசு அதை ஒப்புக்க மாட்டேங்குது. இதைச் சொல்றதால எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை.''

''நீங்க காதலிச்சிருக்கீங்களா?''

''அடேயப்பா... எத்தனை காதல்கள் (பெருங்குரலெடுத்துச் சிரிக்கிறார்) எதைச் சொல்ல, எதை விட? ஆனா, ஒரு நல்ல காதலனால் மட்டும்தான் நல்ல கவிஞனாக இருக்க முடியும். பெண்மையைக் கொண்டாடத் தெரியாதவனால் ஒரு கவிதைகூட எழுதிவிட முடியாது.''

''நீங்க எவ்ளோ போதையில இருந்தாலும் சைவம்தான் சாப்பிடுவீங்களாமே?''

''ஆமாம்... 'பொய் சொல்லக் கூடாது, ஏமாத்தக் கூடாது, போட்டி போடக் கூடாது’னு நல் இயல்புகளைச் சொல்லித்தானே நம்மை வளர்த்திருப்பாங்க. மெட்டீரியல் லைஃப்ல இதுபோன்ற நல்லியல்புகள் எல்லாம் நம்மளைவிட்டுப் போயிருச்சு. அதனால, சின்ன வயசுலேர்ந்து நான் பழகிட்டு வந்த சைவ உணவுப் பழக்கத்தை விடக் கூடாதுன்னு உறுதியா இருக்கேன். சைவ உணவு சாப்பிடறதுனால நான் நல்லவன்னு சிலர் நம்புறாங்க. இது ஒரு கிரெடிட்தானே? மற்றபடி, அசைவ உணவுப் பழக்கம்கொண்ட எல்லா நண்பர்கள் வீட்டுலயும் சைவ உணவு சாப்பிட்டிருக்கேன்!'

''நீங்க சொல்றதுபடி பார்த்தா அசைவ உணவு சாப்பிடறது கெட்ட பழக்கம்னு ஆகுதே?''

''என் நாற்பது வயசுல இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தா... 'ஆமாங்க அசைவ உணவு ஏற்புடையது அல்ல’னு ஏதாவது சொல்லியிருப்பேன். இப்போ இந்தக் கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லைனுதான் சொல்லணும். அப்புறம் நாம எல்லாருமே புலால் உணவு சாப்பிட்டு அதுலேர்ந்து மாறி வந்தவங்கதானே? எனக்கு இருப்பது சாதி சார்ந்த சைவப் பற்று அல்ல. தமிழ்ப் பற்று, கவிதைப் பற்று மாதிரி இருக்கிற சைவப் பற்று. மற்றவர்களின் உணவுப் பழக்கத்தை நல்லது கெட்டதுன்னு சொல்ல நாம் யார்?''

''இவ்வளவு காலத்துக்குப் பிறகு இந்த வாழ்க்கை உங்களுக்கு என்ன சொல்லுது?''

''என் உலகம் ரொம்பச் சுருங்கிருச்சு. 'அண்ணாச்சி வர வர முதுமக்கள் தாழி ஆகிட்டார்’னு விளையாட்டா சொல்வார் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன். இந்த வாழ்வே ஒரு கர்மவினைதான். கர்மவினைனு சொன்னதும் இந்து மதம் சொல்ற கர்மவினைனு நினைச்சுக்காதீங்க. விக்ரமாதித்தன் இந்துத்துவம் பேசுறான்னும் நினைச்சிராதீங்க. நான் சொல்ற கர்மவினை... 'தீதும் நன்றும் பிறர்தர வாரா’னு கணியன் பூங்குன்றனார் சொன்ன, 'நீர் வழிப் படூஉம் புணைபோல... ஆரூயிர் முறைவழிப் படும்’ கர்மவினை. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’னு வாழ்வைக் கொண்டாடச் சொல்லும் கர்மவினை!''