அகதா ஓலக்ஸியக் (Agata Oleksiak) போலந்து நாட்டில் பிறந்தவர். இப்போது நியூயார்க்கில் வசிக்கிறார்.

அகதாவுக்கு நியூயார்க் நகர மக்களின் கடின உழைப்பும், திறமையை அங்கீகரிக்கும் பண்பும் பிடித்து இருக்கிறதாம். ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என கையில் எடுத்த மீடியம்தான் நூல். பாட்டிகள் ஸ்வெட்டர் பின்னுவார்களே.. அதே உல்லன் நூல்தான். ''மிகச் சிறிய நரம்புகள்தானே பின்னிப் பிணைந்து உலகத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் உருவமாக மாற்றுகிறது. நானும் உருவங்களைப் படைக்கிறேன். நரம்புகளுக்குப் பதில், என் கையில் நூல்'' என்று சிரிக்கிறார். பார்க்கும் எல்லாவற்றையும் உல்லன் நூலால் போர்த்திவிடுவதுதான் இவருடைய பாணி.

''வாழ்க்கையும் கலையும் எனக்கு வேறு வேறு இல்லை. என் உலகில் நுழையும் யாராக இருந்தாலும் என் படைப்புகளின் பகுதியாகிவிடுவார்கள். நண்பர்கள், அந்நியர்கள், உறவுகள், காதலன் என யாராக இருந்தாலும் இதுதான். பின்னர் அவர்களைச் சுற்றி நூலால் நெய்ய ஆரம்பிப்பேன். முடிவில் உள்ளிருக்கும் அவர்கள் முழுமையாகக் காணாமல் போயிருப்பார்கள். என் கலை மட்டுமே பிரதானமாக இருக்கும்'' எனத் தத்துவார்த்தமாகப் பேசுகிறார்.

மரம், கார், ரயில், வீடு என்று மட்டும் இல்லாமல் புகழ்பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிலை, வால் ஸ்ட்ரீட்டின் காளை சிலை என ஒன்றையும் இவர் விடவில்லை. சென்ற ஆண்டு டெல்லியில் நடந்த ஸ்ட்ரீட் ஆர்ட் ஃபெஸ்டிவெலில்கூட அங்கு ஆதரவற்ற மக்கள் வாழும் ஒரு பெரிய ஷெட்டை தனது கைவண்ணத்தால் கலர்ஃபுல் ஆக்கினார் அகதா.