ஓவியக் கலையுலகில் எத்தனையோ ஆயிரம் ஓவியர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்; அழியாப் புகழ்கொண்ட ஓவியங்களைப் படைத்திருக்கிறார்கள்; ஓவியக் கலைக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார்கள்; வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

ஆனால், 'இறையருள் ஓவியர்’ என்னும் அடைமொழி ஒரே ஒருவருக்குத்தான் பொருந்தும். அவர் ஓவியர் சில்பி.

உதடுகளில் எப்போதும் உறைந்திருக்கும் புன்னகை, நெற்றியை எப்போதும் அலங்கரிக்கும் திருநீற்றுப் பட்டை, சதா முணுமுணுக்கும் ஐந்தெழுத்து நமசிவாய மந்திரம்... இவைதான் ஓவியர் சில்பியின் அடையாளங்கள்.

புலியூர் மகாதேவன் ஸ்ரீனிவாசன் என்பது இயற்பெயர். மனிதர்களை, பிரபலங்களை லைஃப் ஸ்கெட்ச்சாக வரைந்துகொண்டிருந்த ஸ்ரீனிவாசன், ஒரு கட்டத்தில் இனி இறையுருவங்களை, கோயில்களை மட்டுமே வரைவது எனத் தீர்மானித்தார். 'இறையுருவங்களைக் கல்லில் வடிக்கிறார் சிற்பி; நீ காகிதத்தில் வடிக்கிறாய். அவ்வளவுதான் வித்தியாசம். அதனால், இனிமேல் நீ 'சில்பி’ என்ற பெயரிலேயே வரைவாயாக' என ஸ்ரீனிவாசனை 'சில்பி’ ஆக்கியவர் ஓவியர் மாலி.

1919-ல் பிறந்தவர் ஓவியர் சில்பி. அவரின் தந்தையார் மகாதேவன் நாமக்கல்லில் மரக்கடை வைத்திருந்தார். சில்பி அந்த ஊர் பள்ளியிலேயே சேர்ந்து படித்தார். ஆனால், படிப்பைவிட சித்திரங்கள் வரைவதில்தான் மிகவும் ஆர்வம். அடிக்கடி நாமக்கல்

ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று, அங்கேயே அமர்ந்து, அங்கு உள்ள சிற்பங்களைப் பார்த்து வரைந்துகொண்டிருப்பார்.

இதை ஒருநாள் கவனித்தார் 'நாமக்கல் கவிஞர்’ வெ.இராமலிங்கம் பிள்ளை. அவர் கவிஞர் மட்டும் அல்ல; சிறந்த ஓவியரும்கூட. எனவே, அவர் சிறுவன் ஸ்ரீனிவாசனின் ஆர்வத்தை உணர்ந்து, அவரை சென்னை எழும்பூரில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் சேர்ந்து ஓவியம் கற்கும்படி ஆலோசனை சொன்னார். அதேபோல், அப்போது அந்த ஓவியப் பள்ளியின் முதல்வராக இருந்த தேவி பிரசாத் ராய் சௌத்ரி, சிறுவன் ஸ்ரீனிவாசனின் ஓவியத் திறமையைப் பாராட்டி, ஓவியப் பள்ளியில் சேர்த்துக்கொண்டதோடு, அவருக்குப் பக்கபலமாக இருந்து ஊக்கம் கொடுத்தார். சிறுவன் ஸ்ரீனிவாசனும் சுகதுக்கங்கள் எதையும் பொருட்படுத்தாமல், கன்னிகா பரமேஸ்வரி தர்மசாலையில் தங்கி, ஒரு தவம்போல் ஓவியம் பயின்றார்.

1941-ம் ஆண்டில் இருந்தே 'ஆனந்த விகடன்’ பத்திரிகையில் படங்கள் வரையத் தொடங்கி விட்டார் சில்பி. அப்போதெல்லாம் 'பி.எம்.ஸ்ரீனிவாசன்’ என்றுதான் கையெழுத்திடுவார். 1945-ம் ஆண்டு முதல் சில்பி, விகடனில் முழு நேர ஓவியராகச் சேர்ந்தார். 20 ஆண்டுகளுக்கு மேல் விகடனில் பணியாற்றினார். 1948-ல், விகடனில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய 'தேவன்’ (மகாதேவன்) அளித்த உற்சாகத்தின்பேரில், ஒவ்வொரு கோயிலாகச் சென்று, இறையுருவங்களையும், கோயில்களையும் கோட்டுச் சித்திரங்களாக வரையத் தொடங்கினார் சில்பி. அவை 'தென்னாட்டுச் செல்வங்கள்’ என்னும் தலைப்பில் விகடனில் பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடராக வெளியாகி, வாசகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றன. அந்த ஓவிய மேதையை கௌரவிக்கும் விதமாகவும், அவரின் திறமையை உலகுக்கு உணர்த்தும் விதமாகவும் சமீபத்தில் 'தென்னாட்டுச் செல்வங்கள்’ தொகுப்பை இரண்டு பாகங்களாக வெளியிட்டுள்ளது 'விகடன் பிரசுரம்.’

எந்தக் கோயிலுக்கு வரைவதற்குச் சென்றாலும், முதலில் மகா பெரியவாளைப் போய்ப் பார்த்து ஆசி பெற்றுத்தான் செல் வார் சில்பி. காஞ்சி பரமாச்சார்யாரின் விசேஷ அனுமதியின்பேரில், கோயில் நடை சார்த்தியவுடன் ஓவியர் சில்பியை கோயிலின் கருவறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டுச் சென்றுவிடுவார்களாம். சில்பி இரவு முழுக்க மூலவருடன் தனிமையில் இருந்து, நுணுக்கமாக அந்த இறையுருவத்தை வரைவாராம். இந்தப் பாக்கியம் வேறு எந்த ஓவியருக்கும் கிடைத்தது இல்லை.

'கோயில் கருவறையில் இருக்கும் தூங்காவிளக்கின் மிகச் சன்னமான வெளிச்சத்தில், எப்படித்தான் அந்த அருள்முகத்தைப் பார்த்து நுணுக்கமாக வரைகிறீர்களோ?!’ என்று பலரும் வியப்புடன் கேட்பது உண்டு. மிகுந்த தன்னடக்கத்தோடு அவர்களுக்குப் பதில் சொல்வார் சில்பி...

'வண்ணத்தின் கலவைகளைச் சரியான விதத்தில் அமைத்துக்கொள்வது மட்டுமே என் செயல். தரிசனம் கொடுக்கும் அந்தத் தெய்வம்தான் என் விரல்களோடு இணைந்து தன்னையே வரைந்துகொள்ளும். படைப்பின் முழுமைக்குக் காரணம் அந்தத் தெய்வம்தான்!'

ஆசார, அனுஷ்டானங்களில் இருந்து சிறிதும் பிறழாமல், தமது இறுதிக்காலம் வரையில் ஒரு துறவியைப்போல் வாழ்ந்த ஓவியர் சில்பி, காலமெல்லாம் தமது விரல் களால் காகிதத்தில் இறைவனைப் படைத்துக்கொண்டிருந்த அந்த ஓவிய மேதை, 1983-ம் ஆண்டு, ஜனவரி மாதம் தாம் பூஜித்த ஈசனுடனேயே ஐக்கியமாகி விட்டார்!

இப்பூவுலகம் உள்ளவரையில் அவர் புகழ் நிலைத்திருக்கும்!

திருவரங்கநாதர், திருவரங்கம்.

ஸச்சித்தசாயீ புஜகேந்த்ரசாயீ

நந்தாங்கசாயீ கமலாங்க சாயீ

க்ஷீராப்திசாயீ வடபத்ர சாயீ

ஸ்ரீரங்க சாயீ ரமதாம் மனோ மே

கருத்து: ஸத் ஜனங்களின் சித்தத்தில் சயனித்திருப்பவரும், ஆதிசேஷன் மீது படுத்திருப்பவரும், நந்தன் மடியில் படுத்திருப்பவரும், பிராட்டியின் மடியில் சயனித்திருப்பவரும், பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பவரும், ஆலிலையில் துயில்பவரும், ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டிருப்பவருமான பகவானிடம் என் மனம் ரமிக்கட்டும்.

(ஸ்ரீரங்கநாதாஷ்டகம் - ஆதிசங்கரர்)

பார்த்தசாரதி ஸ்வாமி, திருவல்லிக்கேணி

ஸ்ரீருக்மிணி சமேத ஸ்ரீவேங்கடகிருஷ்ணன்

திரிந்துழஞ்சிந்தைதனைச் செவ்வே நிறுத்திப்

புரிந்து புகன்மின் புகன்றால் மருந்தாம்

கருவல்லிக்கேணியாமாக்கதிக்குக் கண்ணன்

திருவல்லிக்கேணி யான் சீர்.

(நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி, பிள்ளைப் பெருமாளய்யங்கார்)

சுமதி என்ற மன்னர், திருவேங்கடமுடையானை பலகாலம் ஆராதித்தார். அவருடைய உள்ளம் 'அயம் ஹி தஸ்மின் ஸங்க்ராமே ஸாரத்யம் து கிரீடிந: சக்ரே தயா பரவஸ: ஸாக்ஷாச் சக்ரதரோ ஹரி:’ எனப் பிரார்த்தித்தது. அதாவது... 'சக்கரம் ஏந்திய இந்த ஸ்வாமியானவர், மிகுந்த தயையுடன் பாரத யுத்தத்தில் அர்ஜுனனுக்காக ஸாரத்யம் செய்தார். பார்த்தனுக்குச் சாரதியாக இருந்து தேரோட்டிய அந்தத் திருக்கோலத்தில் அடியேனுக்குக் காட்சி அளிப்பாரா?’ எனப் பிரார்த்தித்தார். அந்த உத்தமரின் வேண்டுகோளுக்கு இணங்கித் திருவேங்கடமுடையான், பார்த்தசாரதிப் பெருமாளாகக் காட்சி அளித்த திருத்தலம் திருவல்லிக்கேணி.

ஸ்ரீ காஞ்சீ காமாக்ஷி, காஞ்சிபுரம்

யஸ்யா வாடி ஹ்ருதய கமலம்

கௌஸுமீ யோகபாஜாம்

யஸ்யா: பீடீ ஸதத சிசிரா

சீகரை: மாகரந்தை:

யஸ்யா: பேடீ ச்ருதி பரிசலன்

மௌலிரத்னஸ்ய காஞ்சீ

ஸா மே ஸோமாபரண மஹிஷீ

ஸாதயேத் காங்க்ஷிதானி

கருத்து: யோகிகளின் உள்ளமாகிய குளத்தில் தாமரையாக விளங்குபவளும், தன் திருவடிகளால் பீடத்தை அண்டுகிற பக்தர்களைக் குளுமையாகச் செய்பவளும், வேதங்களின் முடிவாகிய பெட்டிக்கு ஒட்டியாணமாக விளங்குபவளும், அந்த சந்திரனை முடியில்கொண்ட பரமனின் மஹிஷியாகிய காமாக்ஷி எனக்கு வேண்டியதை எல்லாம் கொடுத்தருளட்டும்!

(ஸ்ரீ மூக பஞ்சசதி ஸ்ரீ மூக கவி)

ஸ்ரீ யோக ஆஞ்சநேயர், சோளிங்கர்.

அஞ்சிலே ஒன்றுபெற்றான்

அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்றாறாக

ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே

ஒன்று பெற்றஅணங்கைக்

கண்டு அயலாரூரில்அஞ்சிலே

ஒன்று வைத்தான் அவனம்மை

அளித்துக்காப்பான்

(கம்பர்)

'வாயு(1) பகவானின் புத்திரான ஆஞ்சநேயர், சமுத்திரத்தை(2) தாவித் தாண்டி, ஆகாய(3) மார்க்கமாகச் சென்று, பூமாதேவியின்(4) மகளான சீதாதேவியைக் கண்டு, இலங்கையில் நெருப்பை(5) இட்டார். அப்படிப்பட்ட ஆஞ்சநேயர் நம்மைக் காத்து அருளட்டும்’ என, ஐம்பூதங்களையும் உள்ளடக்கி, கம்பர் செய்த அற்புதமான ஆஞ்சநேய ஸ்துதி இது!

ஸ்ரீ செல்வ முத்துக்குமார ஸ்வாமி, வைத்தீஸ்வரன்கோவில்

உரத்துறை போதத் தனியான

உனைச் சிறிதோதத் தெரியாது

மரத்துறை போலுற் றடியேனும்

மலத்திருள் மூடிக் கெடலாமோ

பரத்துறை சீலத் தவர்வாழ்வே

பணித்தடி வாழ்வுற் றருள்வோனே

வரத்துறை நீதர்க் கொருசேயே

வயித்திய நாதப்பெருமாளே!

(திருப்புகழ் - அருணகிரிநாதர்)

ஜடாயு, ரிக் வேதம், முருகப்பெருமான், சூரியன் ஆகியோர் பூஜித்ததால், 'புள்ளிருக்குவேளூர்’ எனவும், 4,448 விதமான நோய்களைக் குணப்படுத்துவதால் 'வைத்தீஸ்வரன்கோவில்’ எனவும் புகழப்பெற்ற திருத்தலத்தில், தனிச் சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் இந்த மூலவரின் திருநாமம் செல்வ முத்துக்குமார ஸ்வாமி!

ஸ்ரீ தியாகேசர், திருவாரூர்.

கீசான ஸ்ரீமுசுகுந்த பூப

ஸம்ப்ரார்த்தனாத் பூதலமாகதாய

கோசாந்தரஸ்தாய குமாரபித்ரே

ஸ்ரீத்யாகராஜாய நமோ நமஸ்தே

கருத்து: 'வானர முகம் கொண்ட ஸ்ரீமுசுகுந்த சக்ரவர்த்தியின் வேண்டுகோளுக்காகப் பூவுலகுக்கு எழுந்தருளியவரும், அன்ன மயம் முதலான கோசங்களுக்கு அப்பாற்பட்டு விளங்குபவரும், ஸ்ரீமுருகப் பெருமானுக்குத் தந்தையாக இருப்பவரும், ஸ்ரீதியாகராஜப் பெருமானுமான தங்களுக்குப் பல நமஸ்காரங்களைச் செய்கிறேன்!’

(ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் - ஸ்ரீதியாகராஜாஷ்டகம்)

ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை, திருவெண்காடு.

அடையலர் தம்புரமூன்றும் அடர்த்த பிரான்

புவனம் உய்ய வாடா நிற்பான்

பெடைதழுவும் சுவேதனம் புடைசூழும்

சுவேதவனப் பெருமானார் தம்

தொடை திகழு மணிப்புயமும் திருமார்பும்

குழைத்தகொங்கைத் துணையினாளை

இடைசிறிய நாயகியை அருள் பெரிய

நாயகியை இறைஞ்சு வாமே !

(சைவ எல்லப்ப நாவலர் - திருவெண்காட்டுப்புராணம்)

'ச்வேதாரண்யம்’ எனும் திருவெண்காடு என்ற திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இந்த அம்பிகைக்கு ஸ்ரீதிருவெண்காடு தேவர் நம்பிராட்டியார், வேயனதோளி நாச்சியார், பெரியநாயகி எனப் பல திருநாமங்கள் உண்டு. பிரம்மனுக்கு வித்தையைக் கற்பித்ததால், 'பிரம்ம வித்யாம்பிகை’ எனும் திருநாமம்கொண்ட இந்த அம்பிகை, நான்கு திருக்கரங்கள்கொண்டு, இடது மேற்கரத்தில் தனம் தரும் தாமரைப்பூவையும், வலது மேற்கரத்தில் கல்வி தரும் அக்க(ருத்ராக்ஷ)மாலையையும் வைத்துள்ளார். வலது கீழ்க்கரம், தளர்வறியா மனம் தரும் அபய கரமாகவும், திருவடிகளைக் காட்டும் இடது கீழ்க்கரம், தம் திருவடிகளைத் தொழுது சேர்ந்தவர் தெய்வ வடிவம் பெறுமாறும் அருள்கிறது.