உலகில் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகிறது. அதனால், விவசாய நிலங்கள், காடுகள் எல்லாம் கட்டடங்களாக மாறி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், தைவானைச் சேர்ந்த ஒரு முதியவர், தன்னுடைய ஓவியங்களால் தன் கிராமத்தையே காப்பாற்றியுள்ளார்.

மத்திய தைவானில் அமைந்துள்ள தைச்சுங் (Taichung) கிராமம்தான் அது. முதலில், 1,200 வீடுகள் இருந்துள்ளன. காலப்போக்கில், அங்கு வசித்த மக்களால் வீடுகள் கைவிடப்பட்டன. ஒரு கட்டத்தில், 12 வீடுகளில் மட்டுமே இருந்தன. தைவான் அரசிடம் இருந்து ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்தது. அதில், 'இந்தப் பழைய வீடுகளை இடித்துவிட்டு, புதுக் கட்டடங்களைக் கட்டப்போகிறோம். வீடுகளைக் காலிசெய்யுங்கள். தகுந்த இழப்பீடு வழங்குகிறோம்’ என்று இருந்தது.

பிறந்து வளர்ந்த கிராமத்தைவிட்டு வெளியேற அவர்களுக்கு மனம் வரவில்லை. தங்களின் கிராமம் தரைமட்டமாகப் போகிறது எனும் செய்தியையும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. முன்னாள் ராணுவ வீரரான 93 வயது ஹுவாங் யுங்பூ (Huang Yung-fu) தாத்தாவுக்கு துக்கம் தாங்க முடியவில்லை. தன் கிராமத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தார்.

அப்போது அவருக்கு, திடீரென ஒரு ஐடியா தோன்றியது. பெயின்ட் டப்பாக்கள், பிரஷ்களைக் கையில் எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று ஓவியங்களை வரைய ஆரம்பித்தார். விதவிதமான விலங்குகள், பறவைகளை சுவர்களில் வரைந்து, கிராமத்தையே 'ரெயின்போ வில்லேஜ்’ ஆக மாற்றிவிட்டார்.

ஹுவாங் யுங்பூ, தினமும் அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து வீட்டுச் சுவர்களில் ஓவியங்களை வரைவார். வீடுகள் மட்டும் அல்லாமல் கிராமத்தின் சாலைகளையும் வண்ணமாக்கும் ரெயின்போ தாத்தாவாக மாறினார். புதியவர்கள் யாராவது இந்த கிராமத்தில் நுழைந்துவிட்டால், வானவில் உலகுக்கு வந்துவிட்டோமோ எனத் தோன்றும்.

தைச்சுங் கிராமத்தின் பெயர் தைவான் முழுக்க ஒலித்தது. 'கிராமத்தை இடிக்கப் போவதாக வந்த செய்தி எங்கள் தூக்கத்தைக் கெடுத்தது. எப்படியாவது வீடுகளைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தேன். இதுதான் சரியான வழி என்று தோன்றியது’ என்று கூறும் ஹுவாங் யுங்பூ, ''ஐந்து வயது இருக்கும்போதே எனக்கு ஓவியம் வரையக் கற்றுத்தந்தது என் அப்பா. அது இப்போது உதவியது'' என்று பெருமையோடு கூறுகிறார்.

கிராமத்தைக் காப்பாற்ற ஹுவாங் படும் கஷ்டத்தைப் பார்த்த கல்லூரி மாணவர்கள், இவருடன் கை கோத்து நின்று உதவினர். சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் அதிகரித்தது. இதனால், கிராமத்தை இடிக்கும் திட்டத்தை அரசு கைவிட்டது. தற்போது, தைச்சுங் கிராமம் தைவானின் முக்கிய சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த வானவில் கிராமத்தைக் கண்டு ரசிக்கிறார்கள். இந்தப் புகழ், ரெயின்போ தாத்தாவுக்குத்தான் (Rainbow Grandpa) சொந்தம் என்கிறார்கள் கிராமவாசிகள்.