திருக்கயிலை

இந்துக்களின் மிகப்பெரிய கோயில் என்று இதைச் சொல்லலாம். சிவனின் ருத்ரத்தால் இந்த மலை உருவானது... அதனால், இதுவே சிவன் என்கிறார்கள் ஆன்மிகவாதிகள். அறிவியல்வாதிகளோ, 'சிலகோடி ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்ட பிரளயத்தால், பூமிப்பந்தின் தென்கோளார்த்தப் பகுதியின் இந்தோ - ஆஸ்திரேலிய நிலப்பரப்பும், வடகோளார்த்தத்தின் அங்கோரா நிலப்பரப்பும் மெள்ள மெள்ள மோதிக்கொண்டன. அதன்விளைவாக, இந்த இரண்டு நிலப்பரப்புக்கும் இடையே - டிதிஸ் பெருங்கடலின் அடி ஆழத்தில் இருந்த படிவுப்பாறைகள் உயரே எழும்பி இமயமலைத் தொடர் உருவானது’ என்கிறார்கள். இயற்கையின் ஆவேசமோ அல்லது இறைவனின் கோபமோ... உலகமே அண்ணாந்து பார்க்கும் உயரத்துக்கு நிற்கிறது இமயமலை.

இமயம் என்றால் பனியால் போர்த்தப்பட்டது என்பது பொருள். பனி போர்த்திய இந்த மலைத்தொடரை இந்துக்கள் மட்டுமின்றி மற்ற மதத்தினரும் போற்றுகின்றனர். இஸ்லாமியர், புத்த, சமண, சீக்கிய மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கும் இந்த மலைத்தொடரில் வழிபாட்டுத் தலங்கள் நிறையவே இருக்கின்றன. இந்துக்களின் தெய்வீகத் திருத்தலமான கயிலாயத்தில் தம்பதி சமேதராக சிவன் காட்சி தருகிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அமர்நாத்தில் பனிலிங்கமாகவும், கேதார்நாத்தில் பனிமுடியாகவும் சிவன் காட்சியளிப்பதைத் தரிசித்தால் இம்மையிலே முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்துமதப் புராணங்கள் எல்லாமே இந்த மலையின் பெருமையை வான ளவுக்குப் போற்றுகின்றன. தட்சனின் யாகத்தீயில் வீழ்ந்த தாட்சாயினி, மறுபிறவியில் பர்வதராஜனின் மகளாக, பார்வதி தேவியாக தோன்றினாள். இங்கு கடும்தவம் இருந்து கயிலைநாதனாம் சிவனாரை மணந்தாள் என்கிறது புராணம்.

மாந்தாதா எனும் முனிவர் கடும் தவம் இருந்து சிவனாரின் திருக்காட்சி கிடைக்கப் பெற்றார். இறைவனிடம் அவர், 'நானும் என் சீடர்களும் எப்போதும் உங்களையே தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும்’ என்று வரம் கேட்டார். அதன்படி, தன் அம்சமாகிய கயிலை மலை எதிரிலேயே... கயிலையங்கிரியை விடவும் உயரமான மலையாக இருந்து, எப்போதும் தன்னை தரிசித்தபடி இருக்கும்படி முனிவருக்கு அருள்பாலித்தார் சிவபெருமான். அப்படி உருவானதே மாந்தாதா மலைச் சிகரமாம்!

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்க வாசகர் ஆகியோரும் திருக்கயிலையைச் சிறப்பித்து பாடியிருக்கிறார்கள். சுந்தரர், சேரமான் நாயனார் ஆகியோரின் திருக்கயிலை யாத்திரை குறித்தும், ஒளவை கயிலாயம் செல் வதற்கு பிள்ளையாரே அருள் செய்த சம்பவத் தையும் தமிழ் புராண இலக் கியங்கள் விவரிக்கின்றன.

அது மட்டுமா? புண்ணிய பூமியாம் திருக்கயிலையில் பாதம் படக்கூடாது என்பதற்காக, காரைக்கால் அம்மையார், தன் தலையை ஊன்றியே கயிலை ஏறிய திருக்கதையும் உண்டு. தள்ளாத வயதில் திருக்கயிலைக்குப் புறப்பட்ட திருநாவுக்கரசருக்கு திருவையாறு தலத்திலேயே 'கயிலைக்காட்சி’ கிடைத் தது என்கிறார்கள்.

திருக்கயிலையின் பனிமுடி சிகரத்தை வலம் வருவதை பரிக்ரமா என்பார்கள். இன்று ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரிக்ரமா செய்கிறார்கள் என்றாலும், இதை முதலில் தொடங்கி வைத்தவர் யார் தெரியுமா? சாட்சாத் பிள்ளையார்தான்!

ஞானப்பழத்துக்காகப் பிள்ளையார் தம் அம்மை - அப்பனையே உலகமாகக் கருதி வலம் வந்தார் அல்லவா? அவர் வழியில் பக்தர்களும் இன்று உமையொரு பாகனின் அம்சமாகக் கருதி பனிமுடி சிகரத்தை வலம் வந்து வழி படுகிறார்கள்!

இமயத்தில்... எவரெஸ்ட் கே-2, நங்கபர்வத், கஞ்சன் ஜங்கா, தவளகிரி, அன்னபூர்ணா என எத்தனையோ சிகரங்களில் எத்தனையோ பேர் ஏறி சாதனை படைத்திருக்கிறார்கள். ஆனால், சுமார் 22,000 அடி உயரம் கொண்ட கயிலை சிகரத்தில் ஏற யாரும் முயற்சிப்பது இல்லை. இந்தச் சிகரத்தின் மேலாக விமானங்களும் பறப்பது இல்லை. அத்தனை புனிதமாக எல்லா நாட்டினரும் மதிக்கிறார்கள்.

திபெத்தியர் இந்த மலையை 'காங்ரிவ்போச்’ என்று அழைக்கிறார்கள். அதாவது, ஈடு இணையில்லாத பனிமலை என்று பொருள். சமண மதத்தினர் வழிபடும் அஷ்டபாதா எனும் புண்ணிய ஸ்தலமும் இங்கு உண்டு. இந்த மலையின் அடிவாரத்தில் இருந்து உயரே செல்லச் செல்ல... அங்கு வளர்ந்து நிற்கும் தாவரங்கள் மனிதனின் இயல்பை உணர்த்துவதாகச் சொல்கிறார்கள். மனிதன் இளமையில் உடல் வலிமையுடனும், ஆசை, கோபம், மதம், பந்தம், பாசம், பற்று ஆகிய குணங்களுடன் திகழ்கிறான். முதுமையில் ஆசைகள் அறுபடுகின்றன. இதையே, இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள வலிமையான ஓக், மகோ கனி, தேவதாரு போன்ற மரங்களும்... உயரே செல்லச் செல்ல மரங்கள் செடிகளாகி பின் பாசி, லிச்சன் எனத் திகழும் தாவரங்களும் உணர்த்துவதாக நம்பிக்கை!

மலையாக மட்டும் இன்றி செடியாகவும் பனியாகவும் காற்றாகவும் மக்களுக்கு நிம்மதி தரும் திருக்கயிலை நாதனை போற்றி வணங்குவோம்!