நம் பாரத பூமியில் இம்மைக்கும் மறுமைக்கும் அருளும் தெய்வ க்ஷேத்திரங்கள் ஏராளம். அவற்றுள் சில தலங்கள்... அங்கே கோயில் கொண்டிருக்கும் தெய்வ மூர்த்தங்களாலும், புண்ணியக் கதைகளாலும் சிறப்புற்று விளங்கும். ஒரு சில திருத்தலங்கள் மட்டுமே புனிததீர்த்தங்களால் புகழ்பெற்றுத் திகழ்கின்றன அத்தகைய தீர்த்த திருத்தலங்கள் சிலவற்றைக் காணலாம்.

மகாமகம் காணும் கும்பகோணம்

வடக்கே கும்பமேளா வைபவத்தால் புகழ்பெற்ற தலம் திரிவேணி சங்கமம் என்றால், தென்னகத்தில் அதே போன்று 12 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் மகாமகம் எனும் விழாவால் பேறு பெற்ற தலம் கும்பகோணம். மகாமக தீர்த்தக் குளம் இந்தத் தலத்தின் தனிச் சிறப்பு. அந்தக் குளத்தின் திருக்கதை இது.

ஊழிக்காலம் நெருங்கியது. பெரும் பிரளயத்தில், படைப்புத் தொழிலுக்கு மூலாதாரமான சிருஷ்டி பீஜத்துக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்துவிடக்கூடாதே என்றுயோசித்த பிரம்மன், பரமேஸ்வரரைப் பிரார்த்தித் தான். பரம்பொருள் திருவருள் புரிந்தது.

அவரது கட்டளைப்படி, அமிர்தத்தில் மண்ணைக் குழைத்துச் செய்யப்பட்ட குடம் ஒன்றில் சிருஷ்டி பீஜத்தை இட்டுவைத்தார். அதன் நான்குபுறமும் வேதம், வேதாங்கம், ஆகமம், இதிகாசம் ஆகியவற்றைப் பரப்பி வைத்து, மேரு மலையில், உறி ஒன்றில் அந்தக் குடத்தை வைத்து தர்ப்பைகளால் கட்டி பத்திரப்படுத்தினார். அத்துடன் அனுதினமும் அமுதம் தெளித்து, வில்வத்தாலும் அர்ச்சித்து வழிபட்டார்.

பிரளயம் வந்தது. உலகை மூழ்கடித்த பெருவெள்ளத்தில், அந்தக் கும்பம் (குடம்) மட்டும் ஆடிஅசைந்தபடி மிதந்து வந்து, ஓரிடத்தில் நிலைகொண்டது. ஊழிக்காலம் முடிந்ததும் வேடனாக உருக்கொண்டார் சிவனார். எம்பெருமான் குடத்தின் மூக்கை அம்பெய்து உடைக்க, குடத்தின் மூக்கிலிருந்து அமுதம் பரவியதால் திருக்குடமூக்கு என்று பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகிறது. கும்பத்தின் ஒரு கோணல் பகுதி சற்று தொலைவில் சென்று விழுந்தது, அங்கே ஒரு லிங்கம் தோன்றியது. அந்த லிங்கமூர்த்திக்கு ஸ்ரீகோணேசர் என்று பெயர். இதையொட்டியே இந்தத் தலத்துக்கு கும்பகோணம் என்றும் பெயராம்.

சிருஷ்டியை ஆரம்பித்த பிறகு, இந்தத் தலத்தில் அமிர்தம் ஊறிக் கிடந்த மண்ணையே லிங்கமாக்கி, சுயம்புவாய் எழுந்தருளினார் இறைவன். ஆதி பராபரமாகியக் கடவுள், கும்பத்தில் இருந்து தோன்றியதால், ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் எனப் பெயர் கொண்டார். அமிர்தத்தில் தோன்றியவர் ஸ்ரீஅமுதேசர் என்ற திருப்பெயரும் உண்டு. அம்பிகையின் திருப்பெயர், ஸ்ரீமங்களாம்பிகை!

எம்பெருமான் பாணம் எய்து குடத்தின் மூக்கை உடைத்தபோது, அதிலிருந்து வழிந்து பெருகியோடிய அமிர்தம், குறிப்பிட்ட இரண்டு இடங்களில் ஒன்றுதிரண்டு தீர்த்தமாகத் தேங்கி நின்றதாம். ஒன்று பொற்றாமரைத் தீர்த்தம்; மற்றொன்று மகாமகத் தீர்த்தம்!

இந்தத் தீர்த்தக்குளம்தான் 12 ஆண்டு களுக்கு ஒருமுறை... குரு பகவான் சிம்ம ராசியிலும்; சூரியன் கும்ப ராசியிலும் இருக்க, மாசி மாதம் மக நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் புண்ணியத் திருநாளில், மகாமகப் பெருவிழா காண்கிறது. இந்தத் திருக்குளம் இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம் போன்ற பல்வேறு தீர்த்தங்களைக் கொண்டது. அவை ஒவ்வொன்றும் ஒரு வகையில் நற்பலன்கள் அளிப்பவை.

மகம் பிறந்த நல்லூர்!

மகாமகத்துக்கு கும்பகோணம் எனில் வருடாந்திர மாசி மகத்துக்குப் பேறுபெற்ற திருத்தலம், நல்லூர். தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் உள்ளது திருநல்லூர் எனப்படும் நல்லூர். இங்கே, குடி கொண்டிருக்கும் இறை வன் ஸ்ரீகல்யாணசுந்தரர்; இறைவி ஸ்ரீகிரி சுந்தரி.

குழந்தை கர்ணனை ஒரு பெட்டியில் இட்டு, ஆற்றில் விட்ட காரணத்தால், குந்திதேவியும் சிசுஹத்தி தோஷத்துக்கு ஆளாகிப் பல துன்பங்களை அடைந்தாள். தோஷம் நீங்க, தலங்கள் பலவற்றுக்கும் சென்று, இறைவனை மனமுருக வேண்டினாள். 'மாசி மகத்தன்று திருநல்லூர் தலத்துக்குச் சென்று, ஏழு கடல்களில் ஸ்நானம் செய்து, ஈசனை வணங்கினால், தோஷம் நீங்கும்’ என அசரீரி ஒலித்தது. அதன்படி, மாசியில், மகம் நட்சத்திர நாளில் இங்கே வந்தாள் குந்திதேவி. ஆனால், 'ஏழு கடல்களில் நீராடுவது எப்படி? சாத்தியமே இல்லையே! ஏழு கடல்களுக்கு எங்கே செல்வது?’ எனக் கதறியழுதாள். அப் போது, கோயிலுக்கு அருகில் உள்ள திருக்குளத்தில், ஏழு கடல்களில் இருந்தும் தண்ணீரை சங்கமிக்கச் செய்தார் சிவனார். அதையடுத்து, திருக்குளத்தில் நீராடி, தனது சாபம் நீங்கப் பெற்றாள் குந்திதேவி, என்கிறது ஸ்தல புராணம்.

ஏழு கடல்களின் நீரும் சேர்ந்ததால், இந்தக் கோயிலின் தீர்த்தத்துக்கு, 'சப்த சாகர தீர்த்தக்குளம்’ எனும் பெயர் அமைந்தது. மாசிமக நன்னாளில் இங்கே நீராடி, இறைவனை வணங்கினால், நம் பாவங்கள் மொத்தமும் நீங்கும்; தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

ஆரூர் கமலாலயம்!

திருவாரூர் தேரழகு என்பார்கள். தேர் மட்டுமல்ல, இங்குள்ள கமலாலயமும் பேரழகுதான். இந்தக் குளத்தில் ஒருமுறை நீராடினால் மகாமகத் திருக்குளத்தில் 12 முறை நீராடிய புண்ணியம் கிடைக்குமாம். இதில், 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. இதன் நடுவில் யோகாம்பிகை சமேத நடுவணநாதர் (நாகநாதர்) கோயில் கொண்டுள்ளார். இங்கு செல்வதற்குப் படகு வசதி உண்டு.

இந்தக் குளத்தின் கரையில் மாற்று ரைத்த விநாயகர் எழுந்தருளி உள்ளார். விருத்தாசலத்தில் இறைவனிடம் பொன் பெற்ற சுந்தரர் அதை அங் குள்ள மணிமுத்தா நதியில் இட்டு, திருவாரூர் வந்து கமலாலயக் குளத்தில் பெற்றுக் கொண்டார். அந்தப் பொன் தரமானவையா என்று மாற்றுரைத்துப் பார்த்ததால், இந்தப் பெயர்.துர்வாச முனிவருக்காக கமலாலயத் தீர்த்தத்தில் கங்கையை வரவழைத்தார் சிவபெருமான். அதனால் இந்தத் தீர்த்தத்துக்கு 'கங்காஹ் ரதம்’ என்றும், துர்வாசரின் தாகத்தைத் தீர்த்ததால், 'தாபஹாரணீ’ என்றும் திருப்பெயர்கள் உண்டு.

ராமேஸ்வர தீர்த்தங்கள்!

தீர்த்த திருத்தலங்களில் ராமேஸ் வரத்துக்குத் தனி இடம் உண்டு. ஏனென்றால் ஸ்ரீராமன் வழிபட்ட திருத்தலம் இது. தென்னாட்டுப் புண்ணிய க்ஷேத்திரங்களில் குறிப்பிடத்தக்கது!

ராமேஸ்வரத்தில் மொத்தம் 53 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் 22 தீர்த்தங்கள் ஸ்ரீராமநாதஸ்வாமி கோயிலுக் குள்ளும் மற்றவை தலத்தைச் சுற்றிலும் அமைந்துள்ளன. கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தங்களைப் பற்றி மட்டும் பார்க்கலாம். ஸ்ரீமகாலட்சுமி தீர்த்தம், அனுமன் சந்நிதிக்குத் தெற்கே உள்ளது. இதில், தருமராஜன் நீராடி ஐஸ்வரியம் பெற்றார். சாவித்திரி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகிய மூன்றும் அனுமன் சந்நிதிக்கு மேற்கே அமைந்துள்ளன; இவற்றில் நீராடினால் சகல பாவங்களும் தொலையும்.

ஐந்தாவதான சேதுமாதவ தீர்த்தம் மூன்றாம் பிராகாரத்தில் திருக்குளமாகத் திகழும். இதில் நீராடினால் லட்சுமி கடாட்சமும் மகிழ்ச்சியும் பெருகும் ஆறாவதான கந்தமாதன தீர்த்தத்தில் நீராடினால் தரித்திரம் நீங்கும்; தோஷங்கள் அகற்றும் தீர்த்தம் இது.

ஏழாவது சுவாட்ச தீர்த்தம்; நரகம் தவிர்க்கும். எட்டாவதான கவாய தீர்த்தத் தில் நீராட, கற்பக விருட்ஷ வாசம் கிடைக்கும். ஒன்பதாவதான நள தீர்த்தம் சொர்க்கம் தரும். 10-வது தீர்த்தம்- நீள தீர்த்தம். 10-வது நீள தீர்த்தத்தில் நீராடுவதால் அக்னியோக பதவி கிடைக்கும். 11-வது சங்கு தீர்த்தத்தில் நீராடினால், செய்நன்றி மறந்த பாவம் தொலையும். 12-வது சக்கர தீர்த்தம்; சூரியனே அருள்பெற்ற தீர்த்தம். 13-வது பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம். 14-வது சூரிய தீர்த்தம் - முக்காலமும் அறியும் ஞானம் தரும். 15-வது சந்தோஷம் தரும் சந்திர தீர்த்தம்.

இவை தவிர கங்கா தீர்த்தம், யமுனா தீர்த்தம், கயா தீர்த்தம், சிவ தீர்த்தம், சாத்யமிர்த தீர்த்தம், சர்வ தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் மிக்கப் புனிதம் வாய்ந்தவை. 22-வது தீர்த்தம் கோடி தீர்த்தம்; கங்கைக்குச் சமமான தீர்த்தம் என்கிறார்கள்!

திருச்செந்தூர் கடலையும் ஒரு தீர்த்தமாகவே சொல்வார்கள். இந்தக் கடலில் நீராடி, நாழிக்கிணற்றில் குளித்த பின்பே செந்திலாண்டவரை தரிசிப்பது மரபு. இந்த நாழிக்கிணறு ஒரு சதுர அடி பரப்பளவே உள்ளதாயினும் வற்றாமல் நீர் சுரக்கும்.

திருவெண்காடு தலத்தில் சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள் உள்ளன. ஈசன் நடனம் செய்த போது அவர் கண்களில் இருந்து விழுந்த மூன்று துளி ஆனந்தக் கண்ணீரே இந்தத் திருக் குளங்களானதாக தலபுராணம் விவரிக்கிறது.

திருக்கழுக்குன்றம் திருக்குளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறக்கிறது. குரு, கன்னி ராசியில் இருக்கும் போது இந்தக் குளத்தில் நீராடினால் மகத்தான பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை.

திருக்கடல்மல்லை என அழைக்கப்படும் மாமல்லபுரம் கடற்கரைக்கு அர்த்தசேது என்று பெயர் உண்டு. இதில் நீராட ராமேஸ்வரத்தில் நீராடிய பலன் கிடைக்கும்.

திருச்சிக்கு அருகில் உள்ள திருவெள் ளறை புண்டரீகாட்சன் ஆலய திருக் குளம் ஸ்வஸ்திக் வடிவில் உள்ளது. ஒரு கரையில் குளிப்பவர் மறு கரையில் குளிப்பவரை பார்க்க முடியாமல் எதிரும் புதிருமாக இருக்கும். இதனாலேயே இக்குளத்தை மாமியார் - மருமகள் குளம் என்கிறார்கள்!