'எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், நாடகக் கலைஞர், சமூக செயற்பாட்டாளர், மனித உரிமைப் போராளி, பெண்ணியவாதி, பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவர் என்று ஏகப்பட்ட முகங்கள் இருந்தாலும், பாலியல் தொழிலாளி என்பதில்தான் பெருமிதமும், கர்வமும் கொள்கிறேன்’ என்கிறார் நளினி ஜமீலா.

இந்தியாவிலே முதன்முதலாக சுயசரிதம் எழுதிய பாலியல் தொழிலாளி. அவரது 'நரக’ வாழ்க்கை சரிதம் இன்று ஒன்பது மொழிகளில் லட்சக்கணக்கில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. பாலியல் தொழிலாளிகளின் சிக்கல் என்ற குறுகிய பாதையில் பயணிக்காமல், சமூகத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் அடிமட்ட மக்களின் புலம்பல்கள், பழங்குடிகளின் விசும்பல்கள், திருநங்கைகளின் மௌன ஓலங்கள், ஓரினச் சேர்க்கையாளர்களின் ஊமை உணர்வுகளுக்காகவும் பேச ஆரம்பித்திருக்கிறார்.

''24 வயதில் ஓடத் தொடங்கிய என் வாழ்க்கை ரயில், 60 அகவையைத் தொட்டும்... எங்குமே நிற்காமல், பெயர் தெரியாத ஊரை நோக்கி திசை தெரியாமல் பயணித்துக் கொண்டு இருக்கிறது. இருந்தாலும், என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் பிரமிப்பும் பெருமிதமும் ஏற்படுகிறது. என்னை கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் பற்றி நான் கவலையேபடவில்லை.

'உங்களில் ஒரு பாவமும் செய்யாதவன், இந்தப்பெண் மீது முதல் கல்லை எறியட்டும்’ என, மண்ணில் ஓர் புரட்சி வாசகத்தை எழுதினாரே இயேசு கிறிஸ்து... அது எனக்காகவே எழுதபட்டதாகவே உணர்கிறேன். ஊருக்கே கேட்கும் வகையில் கண்ணீர் விட்டுக் கதறிய போது, என் கண்ணீரைத் துடைக்க நீளாத உங்கள் கரங்களுக்கு என் மீது கல் லெறியும் அதிகாரத்தை மட்டும் யார் கொடுத்தது? இன்னொரு மகான் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. 'ஒரு பெண்ணோடு சஞ்சரிப்பது மட்டும் பாலுறவு அல்ல. பார்வையால் கற்பழித்தலும் பாவமே!’ என்றார். அப்படியென்றால், என்னைக் குறைசொல்ல இந்த உலகில் எவருக்கும் அருகதை இல்லை.

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம் கல்லூர் அருகே இருக்கும் அம்பாலூர் தான் என் அன்னை பூமி. மரம், செடி கொடிகளோடு சேர்ந்து மார்க்ஸியமும் வளர்ந்த அற்புத தேசம். என் தந்தை என்னை மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க அனுப்பவில்லை. 'ஊற வைத்த விதை நெல்லையும், அறுத்துச் சேர்த்த அறுவடை நெல்லையும் கணக்குப்போட தெரிந்தால் போதுமடி மகளே’ என்று எனக்கு 'அறிவுரை' தந்தது அவர் மட்டுமல்ல... யதார்த்தவாதம் பேசுகிற கம்யூனிஸ்ட் தோழர்களும்தான். வறுமை என்ற சொல்லை வாழ்க்கையில் அனுபவிக்கும் முன்னே என் அன்னை என்னைத் தனியாக விட்டு செத்துப் போனாள். என்னைக் காப்பாற்றி கரைசேர்க்க வேண்டிய அண்ணனும், அப்பனும் கள்ளைக் குடித்து வீட்டை நாசமாக்கினர். தட்டிக்கேட்ட போதெல்லாம் திட்டித் தீர்த்தனர்.

அன்பாக தலைகோதி விடவும், ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேசவும் ஆளில்லை. படுக்க வீடில்லை. அந்த நேரத்தில் எனக்கு உதவ வந்தவன்தான் சுப்ரமணியன். என் முதல் கணவன். நான் அவனுக்கு கணக்கு வழக்கு தெரியாத ஒரு மனைவி. மதுவும் மாதுவும்தான் அவனுடைய வாழ்க்கை வண்டிக்கு இரண்டு சக்கரங்கள். தினமும் அடிப்பான், உதைப்பான், மண்டையை உடைப்பான். எனது தேகத்தில் அவனது தாக்குதலுக்கு ஆளாகாத பாகங்களே இல்லை. எது சரி எது தவறு என எந்த முடிவும் எடுக்கத் தெரியாத நிலையில், என்னை இரு குழந்தைகளுக்குத் தாயாக்கி விட்டு போய்ச்சேர்ந்தான் அந்தப்பாவி.

நாள் முழுக்க மண் சுமந்தால் கூட ஒன்றரை ரூபாயைத் தாண்டாது கூலி. 'பிள்ளையையும் உன்னையும் காப்பாற்ற எனக்கு என்ன தலையெழுத்தா?’ என்று நா கூசாமல் கேள்வி கேட்டாள் என் மாமியார். 'தினம் ஐந்து ரூபாய் கொடு. இல்லையென்றால் இரண்டு பிள் ளைகளையும் கள்ளிப்பால் ஊற்றிக் கொல்’ என்று ஈவிரக்கமில்லாமல் சொன்னாள். எப்படி கஷ்டப்பட்டு உழைத்தாலும் இரண்டரை ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியாது. எங்கிருந்து ஐந்து ரூபாய் கொடுப்பது என யோசித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டு ரோஸி அக்கா அறிமுகப்படுத்தியதுதான் பாலியல் தொழில்.

என் முதல் வாடிக்கையாளரே விப சாரத்தை தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரி. என்னை தன் இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்ட அதே அதிகாரி, அடுத்த அரைமணி நேரத்தில் என்னை விபசார வழக்கில் கைது செய்து, உடை களைக் களைந்து, அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்து நையப் புடைத்த போதுதான் இந்த சமூகத்தின் கோரமுகத்தைப் முழுமையாகப் புரிந்து கொண்டு அதிர்ந்தேன்.

அந்த 24 வயதில், இந்தப் பிழைப்புக்கு 'பாலியல் தொழில்’ என்று ஒரு பெயர் இருப்பதுகூட எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் பணம் மட்டும்தான். குடும்பத்தையும், குழந்தை களையும் காப்பாற்ற வேண்டும், அவ் வளவுதான். ஓர் இந்துவாக பிறந்த நளினி, ஓர் இஸ்லாமியரை மூன்றாவதாக மணந்ததால் நளினி ஜமீலாவாக மாறி னாள்.

யாருக்கும் தெரியாமல் இருட்டில் அழுது அலைபாயும் மெழுகு போல கழிந்தது என் வாழ்க்கை. அறுபது ஆண்டுகளாய் ஏராளமான ரணங்களை உள்ளூர அடக்கிக் கொண்டே கழிகிறது. இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களோடு இருந்திருக்கிறேன். மூன்று திருமணங்கள், இரண்டு பிள்ளைகள். இடையில் தொழில் செய்யாமல் குடும்பப் பெண்ணாக வாழ்ந்த பன்னிரண்டு வசந்த வருடங்கள். இப்போது நான் தனிமரம். பணமும் நட்பும் அன்பும் தேவைப்படும் போதெல்லாம் என் சகாக்களோடு சஞ்சரிக்கிறேன்.

உலகிலேயே பாவப்பட்ட மனிதர்கள் பாலியல் தொழிலாளிகள்தான். உலகில் உள்ள அத்தனை மனிதர்கள் மட்டுமல்ல... மொழிகளும் கூட அவர்களை அசிங் கமான குறியீடுகளாலேயே குறிக்கிறது. உலகில் காக்கை குருவிகளுக்காகப் போராட ஓர் வலுவான அங்கீகாரம் பெற்ற அமைப்பு இருக்கிறது. ஆனால், ரத்தம் சதை உணர்வுகள் ததும்பி வாழும் எங்களுக்கு ஓர் அமைப்பு இல்லை. எங்கள் உயிரைக் குடிக்க குடும்பமும், சமூகமும், காவல் துறையும், பொறுக்கிகள் கூட்டமும் எந்த நேரமும் காத்திருக்கிறது. மனிதஉரிமை பேசுபவர்களும், பெண் ணியவாதிகளுமே பேசத்தயங்கும் கருப் பொருளாக பாலியல் தொழிலாளிகள் இருக்கும்போது, சாதாரண மக்கள் எப் படி எங்களைப் புரிந்து கொள்வார்கள்? அதனால்தான், கேரளாவில் இருக்கும் சக தொழிலாளிகளோடு இணைந்து 'ஜுவாலாமுகிகள்’ (நெருப்புப் பெண்கள்) என்று பாலியல் தொழிலாளிகளுக்கான அமைப்பை ஆரம்பித்து இயங்கினோம். எதையும் எதிர்கொள்ளும் திறன், போராட்ட குணம், எழுத்தாற்றல், பேச்சாற் றல் என எல்லாம் என்னிடம் இருக்கவே தலைமைப் பொறுப்பு என்னிடம் தரப் பட்டது.

அதுவரை, கேட்பாரற்றுக் கிடந்த கேரள விலைமாதர் மீது, இந்த அமைப்பு உருவான பிறகு கைவைக்க போலீஸ் தயங்கியது. அத்துமீறினால் ஆர்ப்பாட்டமும், சட்டப் போராட்டமும் வெடிக்கும் என காவல் துறைக்கு ஏற்கெனவே முறையான பாடத் தைப் புகட்டி இருந்தோம்.

உலகிலேயே அதிக அனுபவங்களை தாங்கி வாழும் ஓர் பாலியல் தொழி லாளியிடம் ஒரு நிமிடம் மனம் திறந்து பேசிப்பாருங்கள். அப்புறம் நீங்கள் சொல்வீர்கள், 'உலகிலேயே அதிக அனு பங்களை சம்பாதித்த பிறவி!’ என்று. இத்தனை அனுபவங்களும் மண்மூடிப் போக வேண்டுமா? அதற்காகத்தான் நெஞ்சுரத்தோடு சுயசரிதை எழுத ஆரம்பித்தேன். என்னை எழுதத் தூண்டியவர்கள் கூட, என் வாடிக்கையாளர்கள்தான். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக வெளி மனிதர்களின் ஆதரவும் சேர... பத்தாண் டுகளுக்கு முன்னால் எழுதி முடித் தேன்!

'’நான் சுயசரிதை எழுத முடிவெடுத்த போதே 'ஏகப்பட்ட எதிர்ப்புகள் வரும் ஜாக்கிரதை’ என என் நண்பர்களும், சக பாலியல் தொழிலாளிகளும் சொல்லிக் கொண்டே இருந்தனர். அதையும் மீறி 2003-ல் என் புத்தகம் கேரளாவில் வெளியான போது ஒட்டுமொத்த கேரளாவே அதிர்ந்தது. நாடு முழுக்க அறிவுஜீவிகள் வட்டாரத்தில் என் வாழ்க்கை பெரிதாகப் பேசப்பட்டது. அதுவரை, கெட்டவார்த்தைகளையும், கசையடிகளையும், வசைபாடிகளை யுமே சந்தித்த எனக்கு முதன்முதலாக சிறுஅங்கீகாரம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. அச்சிட்ட அத்தனை புத்தகங்களும் ஒரே மாதத்தில் விற்றுத் தீர்ந்து, மேலும் ஒரு லட்சம் புத்தகங்கள் விற்றன. அது மட்டுமில்லாமல்... மீடியாக்களின் பாராட்டு, எழுத்தாளர்களின் மேடை, கருத்தரங்களில் பேச வாய்ப்புகள்! மொழி, இனம், தேசம் கடந்து எம் வாழ்க்கைப் பதிவுகளின் ஆறாத கண் ணீர் அங்கீகரிக்கப்பட்டது.

என்னுடைய புத்தகத்தைப் படித்து விட்டு நெகிழ்ந்துபோன கேரளாவின் பிரபல எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா, 'இந்த உலகில் தனக்குப் பிடித்த மூன்று பெண்களில் அவரு டைய அம்மா, மனைவியைச் சொல்லி விட்டு மூன்றாவதாக நளினி ஜமீலா’ என்றார். இந்தப் பெருமையும் பேரும் எத்தனை பேருக்கு வாய்க்கும்? இன் னும் எத்தனையோ கலைஞர்கள், நடிகர்கள் என் முகம் பார்க்காமலேயே நேசிக்கிறார்கள். விருதுகளையும், பரிசு களையும், மாலைகளையும் வைக்க இட மில்லாத அளவுக்கு என்னை கொண் டாடித்தீர்க்கும் இந்தச் சமூகத்துக்காக நான் என்ன செய்யப் போகிறேன்?

அதனால்தான் பாலியல் தொழி லாளிகளின் பிரச்னைகளைப் பேசும் இரண்டு குறும்படங்களை என்னால் எடுக்க முடிந்தது. அது மட்டுமில்லாமல் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தம்பி சஞ்சீவ் சிவன் என் வாழ்க்கையை ஆவணப் படமாக எடுத் திருக்கிறார். இப்போது, என்னுடைய சுயசரிதையின் இரண்டாம் பாகம் 'தி ரொமான்டிக் கில்லர்’ என்ற பெயரில் உலகப் புகழ்பெற்ற பென்குயின் பதிப்பகம் வெளியிட இருக்கிறது. அதுமட்டுமில்லாமல்... என்னுடைய வாழ்க்கையை திரைப்படமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கேரளாவின் பிரபலமான ஓர் இயக்குநர் ஈடுபட்டி ருக்கிறார். என்னுடைய கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறேன். ஏனென்றால், என்னுடைய துணிச்சல் பிரியாமணியின் தோற்றத்திலும், அசை வுகளிலும் இருப்பதாக நினைக்கிறேன். எல்லாம் நல்லதாகவே நடக்கும்!

உலகமே தெரியாத சாதரண கிரா மத்து மனுஷியை நளினி ஜமீலா எனும் எழுத்தாளராக மாற்றியது என் ஒருத்தியின் உழைப்பு என்று பொய் சொல்ல எனக்குத் தெரியாது. பல்வேறு சமூக தளங்களில் எனக்காகவும், மக் களுக்காகவும் பணியாற்றும் தோழர் கள் மாதவிக்குட்டி, கோபிநாத், மைத்ரேயன், டாக்டர் ஜெயஸ்ரீ மற்றும் என்னுள்ளே எப்போதும் உறைந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான பாலியல் தொழிலாளர் தோழிகள் அனைவருக்குமே என் வெற்றியில் பெரும்பங்கு இருக்கிறது. இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் இருப்பதாகவே உணர்கிறேன். உறங்கவும் உடுக்கவும் வீடில்லாமல் தெருவில் பாதுகாப்பும் இல்லாமல், தினமும் அழுத கண்களுடன் தூங்கும் பாலியல் தோழிக்கு சிறு துரும்பையாவது கிள்ளிப் போட வேண்டும்'' என்று சிரிக்கிறார் நளினி ஜமீலா!

நம்மால்தான் புன்னகைக்கக் கூட முடியவில்லை!