யானை, வானவில், மலை போன்றவற்றைப் பார்த்தாலே பலருக்கும் ஜிலீரென்று இருக்கும். யானை, வானவில்லை பார்த்து ரசிக்க மட்டும்தான் முடியும். ஆனால், மலையின் மடி மீது விளையாடவும், உச்சியில் நின்று கொண்டாடவும் முடியும் என்று தத்துவார்த்தமாகப் பேசுகிறார் முருகேசன். பிசியோதெரபி டாக்டராக இருந்தாலும் டிரெக்கிங் எனப்படும் மலையேற்றத்தில் அத்தனை ஆர்வமாக இருக்கிறார். சென்னை, மதுரை, கோவை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே செயல்படும் டிரெக்கிங் கிளப்பை, விருதுநகரில் நடத்தி வருகிறார். அவரிடம் பேசினோம்.

டிரெக்கிங் என்பதை பலரும் சாகசப் பயணமாகவும் சாதனைப் பயணமாகவும் செய்து வருகிறார்கள். ஆனால், நான் இதை உடல் மற்றும் மனநலன் காக்கும் பயிற்சியாகத்தான் பார்க்கிறேன். ஆர்வம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து மாதம்தோறும் இரண்டு நாட்கள் கொடைக்கானல், மூணாறு போன்ற பகுதிகளுக்குப் போய் வருகிறோம்.

புதுப்புது பயணங்கள்

ஒரு முறை போன பாதையில் மீண்டும் செல்வதில்லை என்பதால் ஒவ்வொரு முறை செல்லும்போதும் புதிய அனுபவம் கிடைக்கிறது. மாதத்தில் இரண்டு நாட்கள் தொழில், தொலைக்காட்சி, செல்போன் விரட்டல், அரசியல் வம்பு, நாட்டு நிலவரம் போன்ற எல்லாவற்றையும் மறந்து புத்தம் புதிய உலகத்துக்குள் நுழைந்து விடுகிறோம். மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளை மட்டுமே நாங்கள் தேர்ந்தெடுத்துச் செல்வதால், சுத்தமான காற்று நெஞ்சம் முழுவதையும் நிறைத்து விடும். மலையேறுவதைப் போல அற்புதமான பயிற்சி வேறுஎதுவும் இல்லை. அத்தனை உறுப்புகளுக்கும் ரத்தம் சுற்றி வரும்... எலும்புகள் வலிமை அடையும். தட்டுத்தடுமாறி மலை உச்சியை அடைந்தவுடன் கிடைக்கும் சந்தோஷம் இருக்கிறதே... அது எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது. ஒரு மலையை ஏறிவிட்டோம்... இனி என்ன இருக்கிறது என்று மனசுக்குள் மத்தாப்பு பறக்கும். தன்னம்பிக்கை பிறக்கும். மன அழுத்தம், டென்ஷன், கவலை என்று எல்லாமே காணாமல் போய்விடும்.

உடல் தகுதிக்கு இரண்டு நாட்கள்

இன்றைய அவசர யுகத்தில் பலரும் அரை மணி நேரம் நடப்பதே பெரிய விஷயம். அப்படிப்பட்டவர்களை திடீரென ஒரு நாள் முழுவதும் நடக்கவிட்டால் காலில் பிடிப்பு, தசை வலி, உடல்வலி போன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுவிடும். மேலும், மலைப்பிரதேசத்தில் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. இதுபோன்ற சிக்கல்களை எல்லாம் சமாளிக்கும் வகையில் டிரெக்கிங் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே வார்ம்-அப் பயிற்சி தொடங்கி விடுவோம். டிரெக்கிங் செல்பவர்களுக்கு உடலில் போதுமான நீர்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம். அதனால், டிரெக்கிங் கிளம்புவதற்கு முந்தைய நாட்களில் தினமும் நான்கு லிட்டர் தண்ணீராவது குடிக்கச் சொல்வோம். மலைஏறும் நேரத்தில் அல்லது ஏறி முடித்த பிறகு பலருக்கும் தசைப்பிடிப்பு, கால் உளைச்சல் ஏற்படும். அதைச்சமாளிக்கத் தேவையான மருந்துகளுடன் தயாராகி விடுவோம். பிசியோதெரபி மருத்துவர் கூடவே வருவதால், எந்த பயமும் இன்றி தைரியமாகவும் சந்தோஷமாகவும் மலை ஏறுவார்கள்.

குளிர் பானங்களுக்குத் தடை

மலையேறும் போது ரெகுலர் சாப் பாடு சாப்பிட முடியாது. குறிப்பாக அரிசி சாதத்தைக் கண்ணிலே காட்ட மாட்டோம். பேரீச்சம்பழம், முட்டை, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், பிரட், சாக்லேட் என்று எல்லாமே லைட் வெயிட் உணவுதான். குடிப்பதற்கு தண்ணீர் மட்டும்தான். கோக், பெப்சி போன்ற குளிர்பானங்களுக்கும் சிகரெட், மது போன்றவைக்கும் தடை. ஏனென்றால் இவற்றைக் குடித்தால் வியர்வை எளிதில் வெளியேறாது. மேலும், உடலில் இருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடும். அதனால், சத்துக்கள் நிறைந்த உணவு மட்டுமே கொடுக்கப்படும். சப்பாத்தி, பிரட், நூடுல்ஸ் போன்றவைதான் மெயின் மெனு. இதை இரண்டு நாட்கள் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு, இயல்பாகவே உணவுக்கட்டுப்பாடு வந்துவிடும். அதன்பிறகு, அவர்களே அதிகம் சாப்பிட ஆசைப்பட மாட் டார்கள். எடையைக் குறைத்தால் இன்னும் நிறைய மலையேறலாம் என்று ஆர்வமாக உடல் எடையைக் குறைப் பார்கள்.

மலை மக்களே வழிகாட்டி!

நாங்கள் ஒவ்வொரு முறையும் புதிய பாதைகளில் செல்ல விரும்புவதால், மலைக் கிராமங்களில்

வாழும் மக் களையே எங்கள் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம். அவர் களிடம், செல்ல வேண்டிய வழி, வழியில் இருக்கும் பள்ளம், மேடு, மிருகங்கள் நடமாட்டம் போன்றவை குறித்து தெளிவாகக் கேட்டு அறிந்து கொள்வோம். சாகசப் பயணமாக அமைவதை விட பாதுகாப்பான பயணம் முக்கியம் என்பதில் மிகவும் கவனமாக இருப்போம். திடீரென மழை பொழிந்தால் எங்கே தங்குவது, ஒரு வழியில் தடை ஏற்பட்டால் அடுத்த வழியில் எப்படி மலையை அடைவது என்று எல்லாமே பக்கா ஏற்பாடுகளாக வைத்திருப்போம். மலை மக்கள் வாழ்க்கை முறையைப் பார்த்துக் கொண்டு, அவர்கள் செல்லும் வழிகளில் மலைகளின் மீது ஏறுவது அத்தனை அற்புத அனுபவமாக இருக்கும். சம்பந்தமில்லாத நபர்களாக... அறிமுகம் இல்லாதவர்களாக கிளம்பும் அத்தனை பேரும், பயணத்தை முடித்துத் திரும்பும் போது, வயது வித்தியாசம் இல்லாமல் நண்பர்களாக சந்தோஷமாகப் பேசிப் பிரிவதைப் பார்ப்பதே ஆனந்தமாக இருக்கும்.

செல்போன் இடத்தில் விசில்

மலைப் பகுதிகளில் செல்போன் டவர் சிக்னல் கிடைக்காது என்பதால் ஆளுக்கு ஒரு விசில் கொடுத்து விடுவோம். எல்லோருக்கும் விசில் பாஷையும் சொல்லிக் கொடுப்போம். அதாவது ஒவ்வொரு விதமாக விசில் ஊதுவதற்கும் ஒரு அர்த்தம் உண்டு. மலையை வெல்லவேண்டும் என்ற எண்ணத்தில் யாரும் மலை ஏறக் கூடாது. மலையின் இல்லத்துக்குள் நுழைந்து பார்க்கும் ஆர்வத்துடன் போகவேண்டும் என்பதை எங்கள் குழுவினர் அனைவருக்கும் சொல்லிக் கொடுக்கிறோம். அதனால், அனைவரும் இயற்கையின் ஆர் வலர்களாக மாறிப் போகிறார்கள். மரங்களையும், மலையையும் நேசிக்கத் தொடங்குகிறார்கள். மலையேற்றம் சென்று வருபவர்களுக்கு ஒரு செடியை பிடுங்கக்கூட மனம் வராது. இதைத்தான் எங்கள் சாதனையாக நினைக்கிறோம்.

சந்தோஷமான சாதனைதான்!