திருவள்ளுவர் என்றதுமே முகம் நிறைய தாடி, கையில் எழுதுகோல், தீர்க்கமான பார்வையுடன் ஓர்

உருவம் கம்பீரமாக நம் மனக்கண்ணில் தோன்றும். உருவமே தெரியாத திருவள்ளுவருக்கு முதன்முதலில் உயிர் கொடுத்து நம் கண்ணில் உலவ வைத்தவர், ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா.

திருவள்ளுவருக்கு உருவம் வந்த கதையை நம்மிடம் சொல்ல முன்வந்தார் வேணுகோபால் சர்மாவின் இரண்டாவது மகனான ஸ்ரீராம் சர்மா.

'எங்க தாத்தா ராமசாமி சர்மாவுக்கும் ஜானகி அம்மாளுக்கும் 1908-ம் ஆண்டு பிறந்தார் எங்க அப்பா. சின்ன வயசிலேயே எங்க அப்பாவுக்கு நோய்த் தாக்கம் இருந்தது. அதனால் வீட்டில் இருந்தபடியே கல்வி, ஓவியம், இசை, நாட்டியம் எல்லாம் கற்றுத் தேர்ந்தார். அதன் பிறகு வயல் வெளியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த 12-வது வயதில், 'திருவள்ளுவர் எப்படி இருப்பார்?’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. உடனே வள்ளுவர் படத்தை வரையத் தொடங்கினார், ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

அப்பா வசித்த காமாட்சிப்பட்டியில்தான் ராஜாஜியும் வசித்தார். அதனால் இருவரும் நட்புடன் பழகினார்கள். 1937-ம் ஆண்டு சேலத்துக்கு 'குவெட்டா பூகம்ப நிவாரணம்’ திரட்டுவதற்காக காந்தி வந்தார். அந்த நேரத்தில் காந்தியை தத்ரூபமாக படம் வரைந்து ராஜாஜியிடம் காட்டினார் அப்பா. 'இதை உன் கையாலேயே காந்தியிடம் தர ஏற்பாடு செய்கிறேன்’ என்றார் ராஜாஜி. அப்படியே சேலம் காங்கிரஸ் மைதானத்தில் காந்தியிடம் ஓவியத்தைக் கொடுக்க வைத்தார் ராஜாஜி.

படத்தைப் பார்த்து அசந்து போன காந்தி, அந்த மைதானத்திலேயே அந்த ஓவியத்தை ஏலம் விட்டு 25 ரூபாய்க்கு விற்றார். அடுத்து காந்தியிடம் கையெ ழுத்து வாங்கும் வைபவம் நடந்தது. ஒரு கையெழுத்துக்கு ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்டு கையெழுத்துப் போட் டார் காந்தி.

என் அப்பாவுடன் இருந்த நண்பர்கள், 'நீ வரைந்த ஓவியம் 25 ரூபாய்க்கு விற்று இருக்கிறது. அதனால் காந்தியிடம் இலவசமாக கையெழுத்து வாங்கிவா’ என்று சொல்ல, அப்பாவும் போய்க் கேட்டிருக்கிறார். ஆனால் காந்தி கறாராக, 'அது வேறு... இது வேறு. பணம் இருந்தால் கையெழுத்து’ என்று சொல்லவே, ஒரு கணம் ஆடிப்போன என் அப்பா சுதாரித்துக்கொண்டு, 'சரி. இந்தப் பேனாவால் ஒரு புள்ளி வைச்சுத் தாங்க’ என்று கேட்டிருக்கிறார். எதற்கு என்று புரியாமல் ஒரு புள்ளி மட்டும் வைத்துக் கொடுத்த காந்தி விளக்கம் கேட்டிருக்கிறார். அப்போது, 'இனி நான் யாரிடமும் ஆட்டோகிராப் கேட்கப் போவது இல்லை என்று முடிவெடுத்துவிட்டேன். அதற்கான முற்றுப்புள்ளியைத்தான் உங்கள் கையால் வாங்கியிருக்கிறேன்’ என்று சொன்னதுடன் நில்லாமல், 'நிறைய பேரிடம் உங்கள் கையெழுத்து இருக்கும். ஆனால் நீங்கள் வைத்த முற்றுப்புள்ளி என்னிடம் மட்டும்தான் இருக்கும்’ என்று கிளம்பினாராம்.

ராஜாஜி, அப்பாவைத் தீவிர அர சியலுக்கு அழைத்தார். ஆனால், 'திருவள் ளுவருக்கு உருவம் தருவதுதான் என் குறிக்கோள். அதுக்குப் பிறகுதான் எல்லாமே’ என்று சொல்லி மறுத்துவிட்டார். 20 வருட காலத்தில் அவர் பல நூறு முறை திருவள்ளுவர் படம் வரைந்தும் திருப்தி யாக வரவில்லை.

இதற்கிடையே வெள்ளையர்களுக்கு எதிராக நாடகக் குழுவை ஆரம்பித்த காரணத்தால் போலீஸ் தேடவே, பம் பாய்க்குப் போனார். அங்கே, 'சத்தியான் சாவித்திரி’, 'கீத் கோவிந்த்’ போன்ற படங்களை இயக்கிய பகவான் தாஸ் உடன் அறிமுகம் ஏற்படவே, சினிமா நுட்பங்களைக் கற்றுக்கொண்டு திரும் பினார். சென்னையில் படக் கம்பெனி ஆரம்பித்து 'நாத விஜயம்’ படத்தில் எம்.எம்.மாரியப்பாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அடுத்து, 'தெய்வீகம்’ படத்தில் ஆந்திராவில் இருந்து பாட்டுப் பாட ஒரு சிறுவனை அழைத்து வந்தார். அந்த சிறுவன்தான் பெரும்புகழோடு விளங்கும் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. மூன்றாவதாக 'மை சன்’ படத் தையும் எடுத்து முடித்தார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

அதன் பிறகு, முழு நேரமும் திருவள்ளு வர் ஓவியம் வரைவதிலேயே செலவு செய்தார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான வள்ளுவர் உருவங்களை வரைந்திருந்த அப்பாவுக்கு, திடீரென ஒரு கணத்தில், தான் நினைத்த வண்ணமே திருவள்ளுவர் உருவம் பிடிபட்ட உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

அந்த நேரத்தில் தற்செயலாக பாவேந் தர் வரவும், 'உள்ளே சென்று அந்தத் திரையை விலக்கிப் பாருங்கள்’ என்று சொன்னார். பாவேந் தரும் திரையை விலக்கிப் பார்த்துவிட்டுச் முதல் வார்த்தை, 'அட, இது நம்ம வள்ளுவரேதான்’! அப்பாவும் இத்தனை கால தவம் பலித்தது போல் உணர்ந்தார்'' என்று சிலிர்த்துச் சொன்னார்.

'அதன் பிறகு தந்தை பெரியார், பேரறி ஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், கக்கன், தோழர் ஜீவா, நாவலர் நெடுஞ்செழியன், கிருபானந்தவாரியார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மு.வரதராசனார், ரா.பி.சேதுப்பிள்ளை, பன்மொழிப்புலவர் அலமேலு அப்பாதுரையார், தி.க.சி., ம.பொ.சி, பெருந்தலைவர் காமராஜர், கவியரசர் கண்ணதாசன், பேராசிரியர் அன்பழகன், ஈ.வெ.கி.சம்பத், எஸ்.எஸ்.வாசன், ஏ.பி.சாண்டில்யன் என்று வீட்டுக்கு வந்த பெரியவர்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

1964-ம் ஆண்டு பெரியவர் பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது, அன்றைய ஜனாதிபதியாக இருந்த ஜாகீர் உசேன் அவர்களால் சென்னை சட்டசபையில் திரு வள்ளுவரின் ஓவியம் திறக்கப்பட்டது. 12 வயதில் வள்ளுவனுக்கு உருவம் தர ஆரம்பித்த அப்பாவால் 58 வயதில்தான் வள்ளுவனுக்கு உருவம் கொடுக்க முடிந்தது. அதன் பிறகுதான் அப்பாவுக்கு வாழ்க்கை என்பதே ஞாபகத்துக்கு வந்தது. ஆம், அதன் பிறகுதான் வாழ்க்கையைத் தொடங்கினார்.

தனது 58-வது வயதில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மல்லிகாவை கல்யாணம் செய்து கொண்டார். அப்பா தன்னுடைய வரலாற்றை டைரியில் விரிவாக எழுதி வைத்துப் போயிருக்கிறார். அதனால் தான் என்னால் நடந்ததை அப்படியே சொல்லமுடிகிறது. எங்க அப்பா 1989-ம் ஆண்டு மறைந்துவிட்டார். ஆனால், திரு வள்ளுவர் ஓவியத்தின் மூலம் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். தமிழ் வாழும் வரை வள்ளுவரோடு சேர்த்து அப்பாவுக்கும் அழிவில்லை'' என்று கண்கள் பனிக்கச் சொல்கிறார் ஸ்ரீராம் சர்மா.